ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமைகள் நடவடிக்கைகள் குழு அமைப்பைத் தோற்றுவித்த தலைவரான பி உதயகுமார் தலைமையில் இயங்கும் ஹிண்டராப் பிரிவு அவரது இளைய சகோதரரும் பிரிந்து சென்ற நடப்பு ஹிண்ட்ராப் பிரிவின் ‘தலைவருமான’ பி வேதமூர்த்தியை அந்த அமைப்பிலிருந்து ‘நீக்கியுள்ளது’.
ஏப்ரல் 25ம் தேதி நடைபெற்ற ஹிண்ட்ராப் உச்ச மன்றக் கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக
உதயகுமார் இன்று கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.
இப்போது பிஎன் -னுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமது சகோதரர் அந்த அமைப்பை தம்மிடமிருந்து கடத்தி
விட்டதாக உதயகுமார் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.
ஆனால் அவர் நீக்கப்பட்டது எந்த விதமான சட்ட ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில்
வேதமூர்த்தி தலைமையிலான பிரிவுக்கு மார்ச் 8ம் தேதி சங்கப்பதிவதிகாரியிடமிருந்து அதிகாரத்துவ அங்கீகாரம் கிடைத்துள்ளது.
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் ….அம்..மம்.. மா… பூமியிலே…யாவும் வஞ்சம்…….கண்ணதாசன் பாடல் இக்காலத்துக்கும் பொருந்தும் .
டேய் மடையா…!நீ வேதாவை வெச்சிகிட்ட என்ன, அல்லது நீ அவனை கழட்டினால் எங்களுக்கு என்ன?அண்ணன்னும் தம்பியும் இந்த நாட்டில் போடும் ஆட்டம் கொஞ்சம்மா நஞ்சம்மா சாமி!ஆளை விடுங்க,இல்லன நம் சமுதாயம் பொங்கி எழுந்தால்..?அப்புறம்,நீங்க ரெண்டுப்பேரும் டங்கனக்கு…டங்கனக்குதான்…
மார்ச் 5இம் தேதியே பதிவு இலாகாவில் அனுமதி கிடைத்ததை கூட யாரிடமும் சொல்லாமல் மறைத்த மதி கெட்ட வேதா உனக்கு மனசாட்சி உள்ளதா? நீ வேண்டும் என்றால் நஜிப் காலை நக்கிகொண்டிரு என் தமிழ் மக்களை அழைக்காதே நீயும் தமிழின துரோகி லிஸ்ட்டில் சேர்த்து விட்டாய் (டனிஎண்டிரன் கோபால/) போல
நாளொரு மேனி பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல, உள்ளத்தில் இருப்பதை உதட்டினில் வைப்பவன் எவனோ அவனே மனிதன். அண்ணனும் தம்பியும் போடும் நாடகம் அப்பப்பா தாங்க முடியலடா சாமி. இந்திய சமுதாயத்தை ஆசாமிவேலுவை விட மோசமாக கூறு போட்டு அசிங்கபடுத்திட்டானுங்க. நஜிப் கொடுத்த பணத்தை பங்கு போட்டதில் திருப்தி அடையவில்லையா உதயா. நீங்க ரெண்டு பேரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே, 5ந் தேதி வரைக்கும் நடத்துங்க உங்க நாடகத்தை.
எல்லாம் நாடக மேடை – இதில் எங்கும் நடிகர் கூட்டம். உதயா, வேதா உங்கள் இருவரையும் இந்திய சமுதாயம் நீக்குகிறது.
இப்போ எத்தனை பேர் இந்த அண்ண தம்பி கட்சியில் இருங்காங்க ! இவர்களுடைய நாடகம் ஒரு சல்லிகாசுக்கு போகாது இப்போ ! அதலால் இவர்களை மறந்து விட்டு செய்ய வேண்டிய காரியமான ஒன்றை செய்வோம் ! ஒவ்வோவரும் நமக்கு நன்கு தெரிந்தவர்கள் ஐவரை அணுகி அவர்களுடைய ஓட்டுக்களை இம்முறை மக்கள் கூட்டணிக்கு போடுமாறு பண்ணிக்க வேண்டும் . இம்முறை இதை செய்தால் நாம் பட்ட துன்பங்கள் யாவும் சூரியனைக்கண்ட பனிபோல் மறையும் … கையேந்த வேணாம் இனி …. பெட்ரோல் விலை குறைத்தாலே போதும் விலைவாசி இறங்கிவிடும் , பி டி பி டி ன் கடனுதவி தேவையில்லை இனி …. பள்ளி படிப்பு இலவசம் … ஈ பி எப் பணம் அப்படியே கிடைக்கும் ….. நிம்மதியாக … வாழ பதவி ஓய்வு பெற்று ….
அண்ணே எனக்கு ஒரு டவுட்டு. பணம் முழுவதும் இன்னும் வேதா கையில்தான் இருக்கிறது போல் தெரிகிறது. தேர்தல் முடியும் வரை, நாடகத்தில் உதயா அவருக்கிட்ட வேஷத்தை சரியாக செய்தால் மட்டுமே அவருக்குள்ள பங்கை கொடுக்க வேண்டும் என்று மேலிடம் ஒப்பந்தத்தில் ஒரு உப நிபந்தனை போட்டிருக்குமோ? தோற்றாலும் எனக்கு கவலை இல்லை என்கிறார்?
அண்ணன் என்னடா தம்பி என்னடா இந்த அவசரமான உலகத்தில். . காசு தான் கடுவுலப்பா அந்த கடவுளுக்கும் அது தெரியும் அப்பா. உன்னை சொல்லி குற்றமில்லை , என்னை சொல்லி குற்றமில்லை,காலம் செய்த கோலமடாஹ் காசு செய்த கோலமடாஹ் . இந்த பாடல் வரிகள் போதும் உங்களை வர்ணிக்க. கண்ணதாசனுக்கு சேர வேண்டும் இந்த புகழ் அனைத்தும்..
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே ,
அட அண்டம் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலே .
துரோகிகள் கூட்டம் கூடிக் கொண்டே இருக்கிறது . மக்களே கவனமாய் வாக்களிக்கவும் .