-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மே 8, 2013.
இந்த 13 வது பொதுத்தேர்தலில் எனது வெற்றிக்கும் பக்காத்தான் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தேர்தலில் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற வேட்கையுடன் எங்கள் வெற்றிக்குப் பாடுபட்ட அனைத்துப் பொது இயக்கங்களின் உறுப்பினர்களுக்கும், பூஜைகள் நடத்திய எல்லா ஆலயங்களுக்கும், வாழ்த்து விளம்பரங்கள் வழங்கிய பிரமுகர்களுக்கும், செய்திகள் வெளியிட்டு உதவிய மின்னியல் ஊடகங்கள், பத்திரிக்கையாளர்களுக்கும், சமூக வலைதளங்களின் வழி தேசிய அளவில் புதியதொரு மலேசியாவை உருவாக்கும் இலட்சியங்களுடன் பிரச்சாரம் செய்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்கள் வெற்றியல்ல உங்கள் வெற்றி.
இத்தேர்தலில் ஒன்றுபட்ட ஒரு மலேசியாவின் வழி எல்லா மக்களின் மேன்மைக்கான பல திட்டங்களை முன்வைத்தோம். ஒன்று பட்ட ஒரு நாட்டை உருவாக்குவதற்கு இனவாத அரசியல் கட்சிகளால் ஒருபோதும் முடியாது என்பதனைக் கடந்த 56 ஆண்டுகால ஆட்சி நமக்கு உணர்த்தியிருக்கும்.
ஆகையால், பல இன மலேசியர்களை உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ளும் அரசியல் இயக்கங்களின் கூட்டணியான பக்காத்தான் அதன் திட்டங்களை மக்களின் தேவைகளை முன்கூட்டியே எடுத்துரைக்கும் வண்ணம் அதன் தேர்தல் அறிக்கையை முன்கூட்டியே வெளியிட்டது. ஆனால் இனத் துவேசம் பேசும் சுல்கிப்ளி நோர்டின் போன்றவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியும், இன்று கடுமையான தோல்வியைத் தழுவியுள்ள வேளையிலும், அதன் தோல்விகளுக்கு இன அடிப்படையில் காரணம் கற்பிப்பது, இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பதனையே உணர்த்துகிறது.
நாங்கள் எதிர்பார்த்தது போல் எங்கள் தேர்தல் அறிக்கையில் பலவற்றை மாற்றணி திருடி கொண்டது. பிறகு அதை, தனது அறிக்கையாக வெளியிட்டதில் மகிழ்ச்சியே ஆனால் நம் சமுதாயத்தின் உயர்வுக்கு மிக முக்கியமான, இலவச உயர்கல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை, அரசாங்கச் செயல்பாடுகளில் இனவாதம், ஏமாற்றுத்தனம் ஓங்கி நிற்கிறது. தேர்தலைக்கூட நியாயமாக நடத்தாதவர்கள் மக்களுக்கு எப்படி நீதி வழங்குவார்கள்?
அதற்கான ஆதாரம், எல்லா வாக்காளர்கள் கைகளிலும் இருக்கிறது. அழியா மை இரண்டு வாரங்களுக்கு விரல்களில் இருக்கும் என்று வாக்குறுதிகள் என்ன ஆனது? பல அன்னியர்கள் வாக்கு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பதனைப் பல முறை புகார் செய்தும், அவர்கள் வாக்களிக்க வந்ததும், சிலரை மக்கள் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்காதது எல்லாம் நல்ல எடுத்துக்காட்டு.
ஆக, மக்கள் இன்று எதிர்த்து ஓட்டுப் போடக் காரணம் இன வாதமில்லை. மாறாக அநீதியை எதிர்க்க அவர்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்தியுள்ளனர் என்பதனைப் மறைத்து அவர்களின் தவறான நடத்தைக்கு மீண்டும் இன வர்ணம் பூசுவது மிக மடமையான செயல், ஆபத்தான கலாச்சாரம். இவர்களை திருத்த தொடர்ந்து நமது போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. தவறானவர்களிடம் அதிகாரமுள்ளதால் உங்கள் வெற்றியை மீண்டும் களவாடி விட்டனர்,
இதை நாம் கண்டுகொள்ளவிட்டால் நமது சந்ததி கடுமையான பல சவால்களை எதிர் நோக்கும் என்பதனை அனைத்து மலேசியர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
.
இதற்கு மேல் மாமன்னர் தான் தலையிட வேண்டும் சார்! மக்கள் விருப்பதிற்கு அவர் மட்டும் தான் நல்ல முடிவு எடுக்க முடியும். எங்களால் இன்னும் ஐந்தாண்டுகள் மடையர்களாக வாழ முடியாது.
மலேசிய வாக்காளர்களை முட்டாள்களாகவே பார்க்கின்றது பாரிசான்.
காலம் மாறிவிட்டது. பெரும்பாலான சீனர்கள் ஜசெக விற்கு வாக்களித்துள்ளனர் என்று அங்களாய்க்கும் பாரிசான் தலைவர்கள் சரியான புள்ளிவிபரங்களை அலசுவது நல்லது. நேர்மையான தேர்தல்வழி மாற்றும்அரசாங்கம் அமைய வேண்டுமென விரும்பிய மலேசியர்கள இன மத பேதமின்றி பாக்காத்தானுக்கு வாக்களித்துள்ளனர். மாற்று அரசாங்கம் அமைவதை தில்லுமுல்லு செய்து தடுக்கப்பட்டுவிட்டதை எண்ணி சீனர்களும் இந்தியர்களும் மட்டுமா கண்ணீர் சிந்தினார்கள்….எத்தனையோ மலாய்க்காரச் சகோதரர்களும்தான். 133 இடங்களில் வென்றுவிட்டதாக எப்படி பாரிசான் தலைவர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்கின்றார்களென்று எனக்குப் புரியவே இல்லை !!!!!!!!!!!
நான் எதிர்பார்த்தது போல்தான் நடந்தது– நான் என்னுடைய கருத்தை அன்வர் கூறியதை பற்றி சொல்லியிருந்தேன்—தில்லு முள்ளு செய்து ஆட்சியை தங்கவைத்துகொள்வர் —அது இன்றைக்கு உண்மையாகிவிட்டது.
அதிகாரத்தை பிடியோ பிடியென்று பிடித்துக்கொல்வர். என்று இதற்க்கெல்லாம் விடிவோ—எனக்கு நம்பிக்கை கிடையாது. காரணம் ராணுவமும் காவலர்களும் அம்னோவின் குண்டர்கள்.
சிலாங்கூர் மாநிலம் உங்கள் கைக்கு வந்ததே! மிக்க மகிழ்ச்சி! தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம், அரசாங்க வேலைவாய்ப்புக்கள், இந்தியர்களின் நிலப் பிரச்சனை, வியாபாரம் செய்ய கடன் இவை அனைத்தும் உங்கள் கையில் ஒப்படைத்து விட்டோம்! நிச்சயம் நிறை வேற்றுவீர்கள் என நம்புகிறோம்! வியாபாரம் செய்ய கடன் உதவி, தேசிய அளவில் நமக்குப் பயன் அளிக்கவில்லை. மாநில அளவிலாவது செய்ய முடியுமா என ஆராய்ந்து பாருங்கள். வாழ்த்துகள்!
இந்த சம்பவத்தின் மூலம் நாம் மலேசியர்கள் என்பதை உறுதி செய்து விட்டோம் ,இனி இந்த இனவாத B N (அம்னோ, ம சி ச, ம இ க) காரர்கள் நம்மிடம் வாலாட்ட பயப்படவேண்டும் .
நாம் தொடர்ந்து போராடுவோம், இனவெறிபிடித்த இந்த அம்னோவை ஓட ஓட விரட்டுவோம்.