ஆபிரிக்க நாடுகளின் பக்கம் திரும்பும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை

gl_perisஇலங்கை, தமது வெளிநாட்டுக் கொள்கைகளின் ஊடாக பெற்றுக் கொள்ளக் கூடிய அனுகூலங்களை ஆபிரிக்க நாடுகளில் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபிரிக்க நாடுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தினால் இலங்கைக்கு பல அனுகூலங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக  வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் உகண்டா சென்றுள்ள அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அங்கு இம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேற்கத்தேய நாடுகள் தொடர்ந்து இலங்கைக்கு அழுத்தங்களையே பிரயோகித்து வருகிறன. இந்த நாடுகளுடன் உறவினை பேணுவதால் இலங்கைக்கு எந்த நன்மையும் கிட்டுவதில்லை.

எனினும் ஆபிரிக்க நாடுகள் இலங்கையின் நலனில் அக்கறை கொண்டிருப்பதாகவும், இந்த நாடுகளுடன் உறவினை நீடிப்பதன் ஊடாக இலங்கையும் சிறந்த அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

TAGS: