அடை மழையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

floodஇலங்கையின் வடக்கு கிழக்கில் கரையோரப் பகுதிகளை தாக்கியிருந்த மகாசென் சூறாவளியுடன் மலையகத்தில் அடைமழை காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஹட்டனில் வௌ்ளத்தில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் 1115 குடும்பங்களைச்சேர்ந்த 4 ஆயிரத்து எண்ணூறுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 2 ஆயிரத்து 700 க்கும் அதிகமானோர் கோவில்கள், பாடசாலைகள் மற்றும் பொதுத்தலங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தற்காலிகமாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரச்சி பிரதேசத்தின் நான்கு பேரும், கந்தவவெளியில் ஏழு பேரும், பூநரில் ஏழு பேருமான 18 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை மன்னாரில் 41 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானையில் 286 பேரும், தெல்லிப்பளையில் 247 பேரும், ஊர்காவத்துறையில் 133 பேரும், சண்டிலிப்பாயில் 78 பேரும், வேலனை மற்றும் காரைநகர் ஆகியவற்றில் தலா மூன்று பேரும், கோப்பாயில் ஒருவர் என மொத்தமாக 951 வரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மன்முனைப்பற்றில் 15 பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாத்தறை மாவட்டத்தில் ஐவரும், பதுளையில் 20 பேரும், நுவரெலியாவில் ஹம்பகமுவ பிரதேசத்தில் 428 பேரும், நுவரேலியாவில் 95 பேரும், கொத்மலையில் 80 பேருமாக அம்மாவட்டத்தில் 813 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கண்டியில் 978 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 571 பேரும் மழை வௌ்ளம் மற்றும் சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

TAGS: