சனல் 4 காணொளிகள் குறித்து இலங்கை அரசு விசாரணை

channel04பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த இலங்கை போர்க்குற்றம் குறித்த காணொளிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் தலைமை தூதுவர் பி.எம். ஹம்சா நேற்று ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளிகளுக்கான உண்மையான ஆதாரங்களை தங்களிடம் கையளிக்குமாறு இலங்கை அரசாங்கம் சனல்4-விடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வின் பின்னர் செனல் 4 தொலைகாட்சி இறுதியாக தயாரித்த மோதல் தவிர்ப்பு வலயம் காணொளி திரையிடப்பட்டது.

இதனை சர்வதேச மன்னிப்பு சபையும், சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இதன் போது உரையாற்றிய பீ.எம்.ஹம்சா, இந்த காணொளியில் தமிழ் மக்கள் பேசுகின்ற விடயங்கள் திரிபு படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த மக்கள் தாக்குதல் நடத்துகின்றனர் என்றே கூறுகின்றனர், எங்கும் இராணுவம் தாக்குதல் நடத்துகிறது என்று தமிழில் கூறவில்லை.

எனினும் இராணுவம் தாக்குதல் நடத்துகின்றனர் என்று மக்கள் கூறுவதாக சனல்4 தொலைக்காட்சி திரிபு படுத்தி கூறி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சனல்4 தொலைகாட்சி திட்டமிட்டே இலங்கை மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: