அமெரிக்காவிற்கு சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களை கடத்துவதற்கு முயற்சித்த கும்பல் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈக்வடோர் வழியாக இந்தக் கும்பல் இலங்கை மற்றும் இந்தியப் பிரஜைகளை சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் அழைத்து செல்வதாகக் குறிப்பிடப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இந்திய மற்றும் ஈக்வடோர் பிரஜைகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் சட்டவிரோதமான முறையில் நபர்களை அழைத்துச் சென்று ஈக்வடோர் ஹோட்டல்களில் தங்க வைத்து பின்னர் அவர்களை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதாகக் குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்வதற்காக நபர் ஒருவரிடமிருந்து தலா 5000 அமெரிக்க டொலர் அறவீடு செய்யப்படுகின்றது. இரண்டு மாத கால விசாரணைகளின் பின்னர் சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பலையும், 100000 அமெரிக்க டொலர் பணத்தையும், மடிக்கணினி உள்ளிட்ட உபகரணங்களையும், போலி ஆவணங்களையும் ஈக்வடோர் காவல்துறையினர் கைபற்றியுள்ளனர்.