தமிழீழ விடுதலைப் புலிகளை பிளவுபடுத்தவே தனது தந்தை அவர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்ததாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஆர். பிரேமதாசவின் மகனும் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக எனது தந்தை மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. விடுதலைப் புலிகளைப் பிளவுபடுத்த அந்த ஆயுதங்கள் உதவும் என்பதற்காகவே அவர் அவ்வாறு செய்தார்.
மாத்தயா தலைமையிலான புலிகளை பலப்படுத்துவதன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு எதிராக பிளவை ஏற்படுத்தவே அவர் அவ்வாறு ஆயுதங்களை வழங்கினார் என அவரது மகன் குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறைவடைந்து 4 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை கொண்டாடும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார். அத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக நாட்டைப் பிரிப்பதற்கு முயன்றனர் என்று குற்றஞ்சாட்டினார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பிரேமதாசவின் மகனும் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச மறுத்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் 2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் எவ்வளவு குறைப்பாடுகள் இருந்தாலும் இந்த ஒப்பந்தத்தின் ஊடாகவே புலிகளின் கிழக்கு மாகாண தளபதியை பிரிக்க முடிந்தது. அது மிகமிக முக்கியமான விடயமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளையனைப் போலவே சிங்களவனும் பிரித்தாளும் கொள்கையில் கைதேர்ந்துவிட்டான்.இவர்களுக்கிடையில் சிக்கி சின்னாப் பின்னாவானது ஈழத் தமிழன்தான்.ஒற்றுமையும் விவேகத் தன்மையும் இல்லாததால் இழக்கக் கூடாததையெல்லாம் இழந்து தவிக்கிறான் ஈழத் தமிழன்.