இலங்கை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்கு, சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மூன்று சுகாதார அமர்வுகளில் பங்கேற்பதற்காக ஜெனிவாவிற்கு பயணம் செய்ய உள்ளார்.
இதன் போது அவருக்கு ஆயுதம் தாங்கிய படையினர் பாதுகாப்பு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகின் ஏனைய நாட்டு சுகாதார அமைச்சர்களுக்கு இவ்வாறு ஆயுதம் தாங்கிய படையினர் பாதுகாப்பு வழங்கப் போவதில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
என்ன காரணத்திற்காக இலங்கை அமைச்சருக்கு மட்டும் இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்கப்படுகின்றது என்பதற்கு அமர்வு ஏற்பாட்டாளர்கள் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.
புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் அண்மைக் காலங்களாக வலுவடைந்து வரும் நிலையில் இலங்கை அமைச்சரின் சுவிட்சர்லாந் பயணமானது அங்கு வாழும் தமிழர்களை ஆத்திரமூட்டும் என்பதனால் விசேட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.