ஒன்றிணைந்த நாட்டுக்குள் இறைமை, சுயநிர்ணய உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றுடன் கூடிய ஓர் தீர்வையே நாம் வேண்டி நிற்கிறோம். அதற்கு மேல் நாம் எதனையும் கேட்கவில்லை. எமது கோரிக்கை நியாயமானதும் நீதியானதும் என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதனை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கின்றது. எமக்கான தீர்வு கிடைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
எமது கோரிக்கைகளையும் அபிலாஷைகளையும் சிங்கள மக்களில் பெரும்பான்மையானோர் ஏற்றுக் கொண்டுள்ளனர். சிங்கள மக்கள் எம்மை நேசிக்கின்றனர். எங்களுக்கு தீர்வைத் தர தயாராக உள்ளனர்.
ஆனால் அரசியல் தலைவர்கள் தமது சுயநலனுக்காகவும் தமது பதவிகளுக்காகவும் எமது உரிமைகளை தர மறுக்கின்றனர்.
விடுதலைப் புலிகளை பல நாடுகள் ஒன்று சேர்ந்தே அழித்திருந்தன. புலிகள் இன்று இருந்திருந்தால் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் மாநிலங்களில் இடம்பெற்று வரும் பல்வேறு கெடுபிடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிருந்திருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
காலங்கடந்த ஞானமதேயம் அய்யா.அநியாயமாக புலிகளை பறிகொடுத்துவிட்டு இப்பொழுது வருந்தி என்னப் பயன்? இப்பொழுது தமிழர் தாயகமான வடக்கு கிழக்குப் பகுதிகளில் இராணுவ மயமாகி,சிங்கள மயமாகி பௌத்த மயமாகி கொண்டிருக்கிறது.தடுக்க முடிகிறதா உங்களால்.முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும் என்பது சிங்கள இராணுவம் தமிழர்களுக்கு கற்றுக் கொடுத்தப் பாடம்.வன்முறைக்கு வன்முறைதான் தக்கத் தீர்வு என்று சிங்களவன் தமிழர்களுக்கு பாடம் போதித்துக் கொண்டிருக்கிறான்.ஆனால் தாங்களோ இன்னும் காந்தியம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அரசாக இருந்திருந்தால் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் தமிழர் பகுதிகளில் நிரந்தர இராணுவ முகாங்களை ஏன் சிங்கள அரசு ஏற்படுத்த வேண்டும்?