மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற கட்சி ஏன் இரு இந்தியர்களுக்கு இடம் கொடுத்திருக்கக் கூடாது? அதிகார வர்க்கத்தின் இந்த அரசியல் மீது மிகவும் வெறுப்பே முன் வந்து நிற்கிறது.
சிலாங்கூர் அரசின் கண்ணை உறுத்தும் இது போன்ற ஒரே தேசம், ஒன்றே மக்கள் என்னும் பரப்புரைகள் இனி எடுபடுமா? கேள்விகளை அடுக்கும் எதிர் அணியினர்? மற்றவர்கள் மத்தியில் பக்காத்தான் செயல்பாடு அனுபவம் இல்லா தலைமைபோல் தோற்றம் காட்டுகிறதே?
கடந்த ஐந்து ஆண்டுகள் எப்படியோ குறை பேசியவர்களை சமாளித்த இந்தியர்கள் இனி இதற்கு எவ்வாறு பதில் சொல்லி தலை நிமிர்வார்கள். பினாங்கு இதில் எவ்வளவோ முன் உதாரணமாக திகழ்கிறதே!
அன்வார் பற்றி தேர்தல் சமயம் எதிர் அணி இந்தியர்கள் எவ்வளவோ மோசமாக பேசியும். அவற்றை சமாளித்த பக்காத்தான் இந்திய ஆதரவாளர்கள் இனி எவ்வாறு தலை காட்டுவார்கள் ? இதற்கு நல்ல தீர்வு / திருப்பம் காண்பார்களா?
இந்திய சமுதாயம் தொடர்ந்து பின் தள்ளப்பட்டால் கட்டாயம் ஒரு நாள் அவர்கள் முடிவு மாறுபடும். இந்தியர்கள் குதிரைகள் என்று நம்பியவைகள் எல்லாம் இன்று நரிகளாகி விட்டன.
வருவான் ஒரு தலைவன்!
இன நலன்… இன மானம் காப்பான்!
காலம் கட்டாயம் கனியும்!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் நன்றாக நிலைப்படுத்தப்படும் காலம் கட்டாயம் வரும்!
-நாசா
———————————————————————————————————————————————————————
உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும், உள் மனதின் குமுறல்களையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.
எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] / தொலைநகல் : 03-26918272
நீதி கட்சி என்று பெயரை வைததுக்கொண்டால் மட்டும் போதாது.செயல்முறையில் காண்பிக்க வேண்டும் .நீங்கள்தான் மத்தியில் கிழிக்க போகிறீர்களா.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.அரசனை நம்பி புருசனை விட்ட கதை.நீதி எங்கே செல்கிறது என்று பார்போம்.இதெல்லாம் நமக்கு பழகி விட்டதுதான் .மறுபடியும் போராடுவோம் .
நாசா அவர்களே ! எண்ணிக்கை முக்கியமா ? செயல் முக்கியமா? நீங்கள் ஏன் இந்தியர்களுக்கு 2 இடம் கேட்கின்றீர்கள் ? இருப்பதோ 10 இடங்கள். மலாய்க்காரர் 6 எடுத்த பின் (அழுத்தத்தின் பேரில்) மீதமுள்ள இடங்களுக்கு எப்படி 2 இந்தியர் 2 சீனர் என்று கொடுக்க முடியும் ? சீனர்கள் அதிகமாக வாழும் சிலாங்கூரில் அவர்களுக்கு 3 இடம் கொடுப்பது ஏற்புடையாதுதானே ? மலேசிய அரசியல் இனக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் பொழுது இது போன்ற சிக்கல்கள் வருவது தவிர்க்க முடியாதது
நாசா அவர்களே ! செலாங்கூர் அரசில் சுல்தான் தலையீடு கருத்தில் கொண்டு கட்டுரை எழுதவும் ! இனவாதம் PKR ரில் இல்லை ! நமக்கு சேவைதானே முக்கியம் யார் செய்தால் என்ன ? 56 வருடம் மக்களுக்கு சேவை செய்த ம இ கா வின் நிலை என்ன பார்த்தீர்களா ? ம இ கா வினர் தமிழர்கள்தானே ? ஏன் தமிழ் மக்கள் ம இ காவை வெறுக்கிறார்கள் ?
பினாங்கில் இரண்டு துணை முதல்வர்களைக் கொடுத்து பினாங்கு அரசு முன்னுதாரணமாக விளங்குகிறது. சிலாங்கூரில் சீனர்களும் இந்தியர்களும் அதிகமாக வாழும் மாநிலமாக இருக்கும்போது , துணை முதல்வர்களை உருவகலாம்தானே? ஆறுமுகம் சொல்வதைப்போல 13 உயர் பதவிகளில் 8-4-1 என்பது எப்படி சமத்துவத்தை வலியுறுத்த முடியும்? ஓன்று தெரியுமா தம்பிகளே… தமிழன் எல்லோரையும் நம்பவேண்டும். ஆனால் இந்த நாட்டில் எவனும் தமிழனை நம்பமாட்டான். அவர்களால் நம்மை நம்பமுடியாது. ஆனால் நாம்மட்டும் அவர்களுக்கு தாசர்களாக இருக்கவேண்டும். அவர்களுக்கு வாலாட்ட வேண்டும். சமத்துவம் என்பது நாகரிகம், மனிதத்தன்மை, எல்லாவற்றிற்கும் மேலாக அது பிறப்புரிமை. அதை அடைய ஓர் இனம் போராடத்தான் வேண்டும். அந்த உரிமையை இழக்க சமரசம் செய்வதும் சமாதானமாகப் போவதும் தற்கொலைக்கு சமம். என் இந்திய இனம் புத்திசாலித்தனமாக அடுத்த அடியை எடுத்துவைகட்டும்!
சிலாங்கூர் மாநிலம் எடுத்த முடியு சரியானதே ,இந்தியர்களுக்கும் இடம் வேண்டும் என்று இன ரீதியாக போவைதை வீட ,நாட்டில் மூன்று இனங்களுக்கு நல்லது நடக்கிறதா ,விலை விலைவாசிகள் குறைக்க படுகிறதா ,மக்கள் சுமை குறைக்க படுகிறதா என்று பார்பதுதான் முக்கியம் ,சிலாங்கூர் அரசாங்கம் மீது எந்த ஒரு தவறும் இல்லை ,இதற்க்கு காரணம் சிலாங்கூர் சுல்டான்னின் வேண்டுகோள் தான் ,இது எத்தனை தமிழனுக்கு தெரியும் ,
குஞ்சாலி குஞ்சி ! நல்ல கருத்து , பெயர் தான் இடிக்குது !
எல்லாம் அரசியல் சில்கள்
சிறப்பாக செயல் பட்ட சேவியர் அவர்களை புறக்கணித்தது இந்தியர்களை மதிக்கவில்லை என்பதையே காண்பிக்கிறது. குஞ்சாலி சொன்னது போல இனவாதாம் இல்லை என்றால் ஏன் ஒரு சீனருக்கு கொடுத்த பதவியை இந்தியர்களுக்கு விட்டு கொடுக்க வேண்டியது தானே?
ஒற்றுமையில்லா இந்திய இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதி. மிக உம் சிரத தலைப்பு . மற்ற சமுதாயத்துக்கும் நமக்கும் உள்ள , வேறுபாடு.
நமக்கு அறவே பதவி இல்லாவிட்டாலும் பரவாயில்லை , நம்முடைய உரிமைகள் வழங்கினாலே போதும் ,சலுகைகள் வேண்டாம்.சும்மா பதவிகளுக்கு அடித்துக்கொள்ள வேண்டாம்,யாரொருவர் பதவி மோகம் கொள்கிறாரோ ,அவரால் சேவை செய்யவே முடியாது.
தம்பிகளா… டத்தோ ஸ்ரீ அன்வாரின் சிறப்பு அதிகாரி ஆர். சுரேஷ் குமாரின் இன்றைய பத்திரிகை அறிக்கையை படித்தீர்களா? சிலாங்கூர் இந்தியர்கள் கெஅடிலானுக்கு வாக்களிக்காததுபோல பேசுகிறார். முன்னாள் கெஆடிலான் இந்திய ஆட்சிக்குழு உறுப்பினரால் இந்தியர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாததால்தான் டி.எ.பி. இந்தியருக்கு அந்த பொறுப்பை வழங்கினார்களாம். முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் வெறும் பள்ளிக்கூடம் , கோவில்களுக்கு நிதி கொடுத்துவிட்டால் போதுமா? என்று அன்வாரின் சிறப்பு அதிகாரி எக்காளமிடுகிறார். ஐந்து ஆண்டுகள் பொறுத்திரு கண்ணா நாங்கள் யார் என்பதை காட்டுகிறோம்!
ஜெகவீரபாண்டியன் ! செலாங்கூரில் நல் ஆட்சிதானே நடக்கிறது ! ஏன் ஆப்பு அடிக்க துடிக்கிரீர் ? மக்கள் மீண்டும் PKR தேர்வு செய்தது அவர்கள் நல் ஆட்சியை நம்பித்தான் ! இந்தியனுக்கு பொறுப்பு கிடைக்கவில்லை என்றால் உடனே ஆப்பு அடிப்பீர்களா ? மீண்டும் கீர் தோயோ MB ஆகவேண்டும்மா ? சேவையை முன் நிறுத்தி கருத்து சொல்லுங்கள் ஐயா !
யாங்.பெர்ர்.ஒர்மாத்.அன்வர் அவர்களே என்ன யோசனை,இந்திய மக்களுக்கு நான் துரோகம் செய்து விட்ட்டேன் என்று கவலை படுகிரிர்களா.கவலை வேண்டாம் ஸ்ரீ இது இனிக்கு நேத்தா நடக்குது காலம் காலமாக இந்தியர்களுக்கு நடக்குது,எங்களுக்கு பழக்கமாகி விட்டது,இன்னும் இந்தியகளை ஏமாற்ற எதாவது இருந்தால் சிக்கிரம் மாக செய்யுங்கள் பாரதம் உங்களை போற்றட்டும்.வாழ்க BAARATHAM.
ஆக இப்போதே ஒரு எட்டப்பன், சுரேஷ் குமார் என்ற பெயரில் உதயமாகி விட்டார்! இவர் ஒரு தமிழராக இருக்க நியாயம் இல்லை. . தமிழ்ப் பள்ளிக் கூடங்களுக்கு நிதி கொடுப்பதை ஒருவர் கேவலமாக பேசினால் அவன் தமிழனில்லை! இருந்தாலும் நமக்கு நியாயம் கிடைக்க வேண்டும். கல்வி சம்பந்தப்பட்ட ஒரு பொறுப்பை சேவியருக்கு வழங்க வேண்டும். சுரேஷ் குமார் மூலம் ஒன்றைத் தெரிந்து கொண்டோம். கணபதிராவ் கல்விப் பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டார்! அப்படி என்றால் நமது உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன. எந்த வகையிலும் இது நியாயம் இல்லை. பேச்சு வார்த்தைகளின் மூலம் இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு காண வேண்டும்.
ஐயா ஜெகவீர்ப்பாண்டியரே, நீங்கள் சொல்வது போல் 5-ஆண்டுகள் வேண்டாம் மாநிலத்தில் ஒரு இடை தேர்தல் வரவேண்டும் ! வரட்டும் , அப்போது அந்த தொகுதி இந்தியர்களின் நிலைப்பாடு என்ன என்பதை அன்வார், காலித் போன்ற தலைவர்களுக்கு காட்டுவோம். 10- என்பதை 12- உயர்த்தி நமக்கு இரண்டு இடம் கொடுக்கலாமே?எந்த கட்சியும் சாராத வேதாவுக்கு செனட் சத்திய பிரமாணம் எடுக்காமலே துணை அமைச்சர் பதவி கொடுக்கப் பட்டதே?அதுதான் பிரதமர் நஜீப்பின் சாதனை. சிலாங்கோரில் அதிக பெருபான்மையில் ஜெயித்த கட்சி ஒரு முடிவு எடுக்க தடுமாறுகிறது வேடிக்கையாக இருக்கிறது .
அன்வார் வைத்தானா ஆப்பு???? அதுவும் பெரிய ஆப்பு….இதைகண்டாவது நமது தமிழ் இன மக்கள் திருந்திட வேண்டும்….தேசிய முன்னணியைக் குறைக் கூறியவர்களின் நிலை என்ன?????தமிழனுக்கு ஒரு இடமில்லை..தமிழர் வாக்குகள் சரியாக போடவில்லை…..தமிழர்கள் ஆதரவு தரவில்லை என்று சொல்வது அன்வாரின் மீது உள்ள வெறுப்பை அதிகப்படுத்துகின்றது…..தமிழர்களெ மீண்டும் அன்வாரின் பின்னால் போக வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் முடிவு வந்து விட்டது…சரியான முடிவு எடுப்பீர்களா???
PKR கட்சியின் உறுப்பினர் YB சேவியர் அவர்கள்( முன்னாள் ஆட்சி குழு உறுப்பினர் ) இதனை பற்றி அறிக்கை எதுவும் வெளியிடாததால் நாம் அனைவரும் பொறுமை காப்பது நன்று.
நந்தா தம்பி உங்களை என்னக்கு மிகவும் பிடிக்கும். ஏன் தெரியுமா மனதில் பட்டதை வெளிப்படையாக எழுதுபவர் நீங்கள். இப்போதுகூட பாருங்கள் அதே உணர்சிகளின் வெடிப்பை உங்கள் எழுத்தில் காண்கிறேன்; மகிழ்ச்சி! செத்த மாடுமாதிரி எத்தனையோ நம் இளைஞர்கள் தூங்கிக்கொண்டு கிடக்கும்போது எழுச்சிகொண்ட சிங்கங்களாக பலரை இப்பகுதியிலே காண்கிறேன். மனம் பூரிக்கிறது. தம்பி… 56 வருடங்களாக நம்பி நம்பி மோசம் போனவன் பரம்பரையடா நாம். ஆரம்பமே நெருடும்போது எப்படிராஜா சும்மா இருப்பது? எதையுமே போராடி போராடித்தானே பெறவேண்டியிருக்கிறது.போராடியபோதே கிடைக்காதபோது நம்புவோம் கிடைக்கும் என்பது உங்களுக்கே சரியாபடுதா தம்பி? கண்ணா… எங்களுக்கு வயசாச்சி. நீங்க இந்த நாட்டிலே தலைநிமிர்ந்து வாழனும். வாழ்ந்துகெட்ட இனமில்லையா நாம. அதனாலதான் கொதிக்குது மனம். நமக்கென்று ஒருவன், அதுவும் மானமுள்ள ஒருவன் நீதிக்கட்சியை பிரதிநிதித்து அங்கே நம்ம இனத்திற்கு காவலாக இருப்பதுதானே நமக்குப் பாதுகாப்பு. யோசித்துப்பாருங்க நந்தா தம்பி!
மாநில அளவில் இப்படி என்றல், மத்திய அரசு கிடைத்தால் இந்தியருக்கு நாமம் தான். அன்வர் ஒரு சுயநலவாதி, அவருக்கு இந்தியர் மேல் அக்கறை இல்லை. அவர் குறிக்கோள் பிரதமர் ஆவது மட்டும். இந்தியருக்கு பதவி தேவை இல்லை என்று சொல்லுபவர்கள் ஏன் தேர்தலில் போட்டியிட அதிக இந்தியருக்கு அதிக இடம் வேண்டும் என்று கேட்கிறார்கள். சுல்தான் என்று காரணம் சொல்லி இந்தியர்களை இந்தியர்களின் வாய்ப்பை பரித்துகொன்டர்கள். இதுதான் நீங்கள் நம்பிய பக்கதன்.
அன்வாரின் அர கோணங்கிகள் ,,தப்பை ஒத்து கொள்ள மாட்டார்கள் ஜால்ரா பார்ட்டிகள்,,இன்னும் என்ன என்ன ,,ஏமாத்து தில்லா லங்கடி எல்லாம் நடக்க போகுது தமிழா ,,
56 வருடகாலமாக மிகவும் விசுவாசமாக செயல்பட்ட பங்காளி கட்சி MIC க்கே நஜிப் வாய்த்த ஆப்பு என்னவென்று சொல்வது. இனி அந்த கட்சி இருந்தாலும் இல்லையென்றாலும் ஒன்றுதான் என்பது போல் நாடு தழுவிய அளவில் இந்தியர்களின் நலனை கவனிக்கும் பொறுப்பை வேதமூர்த்திக்கு கொடுத்துவிட்டார். 4 MIC அமைச்சர்கள் இருந்தும் இல்லாதது போன்ற நிலைமை.
மணி அடித்து சோறு சாப்பிட்டவர் ,பழையதை மறந்து விட்டார் .
5 இந்தியர்களை தேர்வு செய்திருந்தாலும் நமது அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும் என்று யாராவது அறுதியிட்டுக் கூறமுடியுமா? கடந்த கால் நூற்றாண்டுகளில் எருமை தேய்ந்து கட்டெறும்பு ஆன இன்றைய நமது நிலைமைக்கு காரணம் யார்? Pakatanஆ? BN அரசாங்கமா? இரண்டுமே இல்லை. சொந்த நலனுக்காக அரசியல்வாதிகளின் துதிபாடி வாழும் நமது அரசியல் கலாச்சாரமே. துடிப்பாக இயங்கி வந்த இளைஞர் இயக்கங்கள் அரசியல் ஊடுருவல் காரணமாக முடங்கிப் போனதுதான் (தவறு..முடக்கப்பட்டதுதான்). அந்த அமைப்புக்களின் தலைவர்கள் (ஆசை வார்த்தைகளால்) அரசியல் இலாபம் கருதி சோரம் போனதால்தான்.
ஆடு நனையுதேனு ஓநாய் கண்ணீர் விட்ட கதையாக இருக்கிறது ? வால்ட்டோர் நீர் வாழ்க!
தமிழ்வாணன் அவர்கள் சுயனலவாதி என்பதை நிரூபித்து விட்டார்…எதற்காக பொறுமைக் காக்க வேண்டும்…தமிழனுக்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்து விட்டது. அன்வார் நமக்கு ஆப்பு வைத்து விட்டான் என்று புரிந்து விட்டது…இன்னும் மௌனம்…இன்னேரம் தேசிய முன்னணி செய்திருக்க வேண்டும்…எப்படி ஆர்ப்பாட்டம் செய்வார்கள்…எல்லாம் நாடகம்….வேண்டாம் அய்யா இந்த அரசியல் நாடகம்…ஞாயம் காப்போம்…சமுதாயத்த்ற்கு நல்லது நடக்க முயற்சி செய்வோம்
சுரேஷ் மணல் கொன்ட்ரக் கிடைக்க கிள்ளான் வட்டார பிரமுகர் ஒருவருடன் வேலை செய்யறதா கேள்வி. இதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய இந்த குழு தயாராக உள்ளது. சுயநலமாக வேலை செய்யும் இது போன்ற துரோகிகளை சமூகம் புறக்கணிக்கக் வேண்டும். நமக்கு தேவை உரிமை. கொள்கைகளில் மாற்றம் வரும் வரை, இன ரீதியில் போராட தயராக இருக்க வேண்டும்.
வால்டோர் அறிவாளி நீங்கள் சொல்லுவது உண்மையே! ஏற்றுக்கொள்ளுகிறோம். ஆனால் ஒரு வித்தியாசம். இங்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அனைவரும் பக்காத்தான் ஆதரவாளர்கள். அதுதான் உங்களிடமிருந்து எங்களை பிரித்துக் காட்டுகிறது. நீங்கள் சொல்லுகிறபடி நாங்கள் இன்னும் அன்வர் வைத்த ஆப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நீங்களோ நஜிப் வைக்கின்ற ஆப்பை “வளைகாப்பாக” ஏற்றுக் கொள்ளுவீர்கள். வாயைத் திறக்க அனுமதியில்லை. திறந்தால் குண்டர் கும்பல் உங்கள் முன் நிற்கும்!
Raja நீங்கள் கொடுத்த செய்திக்கு நன்றி. அது உண்மையாகவும் இருக்கலாம்.மணல் காண்ட்ராக் வேண்டும் என்பதற்காக ஒரு சமுதாயத்தையே காட்டிக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் நம்மவர்கள். ஒரு குடும்பம் பெரிதா, ஒரு சமுதாயம் பெரிதா என்னும் எண்ணம் படித்தவர்களுக்கு இல்லை. மடையர்களில் அதிகம் படித்தவர்கள். தான்!
தமிழ்மக்களே ஒன்று அல்லது பத்து என்று எணிக்கையில் என்ன இருக்கிறது? இந்த ஒருவர் நமக்கு என்ன செய்ய போகிறார் என்று பாருங்கள்? இருவராக இருந்தால் இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம்
சொல்லி கொண்டு நமக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள் (நண்டு கதை) தான்.
வால்டர் ,அறிவை உபயோகிக்க மாட்டியா ??டேய் ,எனக்குதான் அறிவே கிடையாது ,ஆனால் சில உண்மை விசியங்களை தெரிந்து வைத்திருக்கிறேன் ! உன்னைப்போலே சோடா பெட்டி கிடையாது
முதலில் இந்தியர்கள் ஒற்றுமையாக இருங்கள் … பிறகு உரிமையை பற்றி பேசலாம்…….
இங்கே அறிவாளி முட்டாள் என்ற பேதமில்லை. வால்டோர் முட்டாள் அவர்கள் தன்னையே தாக்கி எழுதிவிட்டார். முட்டாள் கேள்வி கேட்கும்போது பதில் சொல்லலாமா? யோசிக்கின்றேன். நான் பாரிசான் விசுவாசி அல்ல…பக்காத்தான் எதிராளி அல்ல. சமூக சேவகன்..எந்த கட்சி தமிழனுக்கு உரிமை,நல்லது, நன்மை, தருகின்றதோ அதற்கு ஆதரவு தெரிவிக்க தயங்க மாட்டேன். தலைவர் தவறு செய்தால் புறக்கணிக்கவும் தயங்க மாட்டேன். அதனால்தான் நான் யாரிடமும் விலை போகவில்லை.இனிமேலும் விலை போக மாட்டேன். எனக்கும் சுயமரியாதை உண்டு. எந்த பதவியையும் ,பட்டத்தையும், பணத்தையும் எதிர்ப்பார்க்காமால் சேவைச் செய்யவே விரும்புகின்றேன். தலைவர்களை எதிர்ப்பதால் நான் அவர்களுக்கு எதிரி அல்ல. அவர்களின் கொள்கைகளுக்கே நான் எதிர்.
விளங்க்கவில்லையா….பரவாயில்லை
ஜெகவீரபாண்டியன் அவர்களே ! யோசித்தேன் மீண்டும் யோசித்தேன் உங்கள் கருத்துக்கும் என் கருத்துக்கும் முரண் படுகிறது ! உங்கள் அமர்க்களம் இல்லாத சமூக சிந்தனை என்னை மிகவும் கவர்ந்து விட்டது !
உண்மைதான் வால்டர் அறிவாளி ,நான் என்னையே தாக்கிக் கொண்டேன் ,வால்டர் அறிவாளி சொல்லவது முற்றிலும் உண்மை ,நான் வால்டர் முட்டாள் ,வால்டர் முட்டாளுக்கு பின்ன்பாலே இருப்பது ஒரு தமிழன ,ஆக மொத்தத்தில் நான் தமிழ் ,முட்டாள் தமிழன் ,நான் முடல் மனிதன் கிடையாது ! முட்டாள் தமிழன் ,,விளங்கி கொள்வீகர் வால்டர் அவர்களே ,,
பக்கத்தான் இந்திய தலைவர்களே இனியும் மௌனம் காக்காமல் உங்கள் நிலை பற்றி கட்சி மேலிடத்தில் குரல் எழுப்புங்கள் . இல்லை என்றால் உங்கள் நிலை கேள்வி குறியாகிவிடும் . செலாங்கூர் மாநில இந்திய பிரதி நிதியாக இருந்து நல்ல சேவைசெய்த சேவியர் அவர்களின் கைகளை கட்டி போட்டுள்ள பி கே ஆர் இன வாத கட்சி என்பதனை நிருவித்து உள்ளது .
வால்டர் அறிவாளி எனக்கு சுய மரியாதை கிடையாது ,ஏன்னா ,நான் தமிழன் ,அதனால் எனக்கு சுய மரியாதையை கிடையாது
இந்தியர்களின் போராட்டத்திற்கு காந்தியை போல் ஒருவர் இருந்தாலும் பரவாயில்லை…ஆனால் அவருக்கு துணை கொடுப்பவர்கள்தான் பலர் இருக்க வேண்டும். மலேசியாவிற்கே இரண்டே இந்திய அமைச்சர்கள் இருக்கும் போது, இது எவ்வளவோ மேல்! நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்களை பார்த்தும் நம்மில் பலர் கட்சியை குறை கூறுகிறோம். இன்னும் 4 ஆண்டுகளுக்கு பிறகு யார் என்பதை நாம் இப்பொழுதே மனக்கணக்கு போடாமல் முதலில் நிகழ்காலத்திற்கு வருவோம். சமுதாய துரோகிகள், மத துரோகிகளை பின் தொடர்வோம்! அவர்கள் தான் நம்மை அரசியல் சூல்சியில் சிக்க வைத்து பிரிக்கின்றனர்…அதன் வெற்றி தான் GE 13. இந்தியர்கள் பல திசைகளில் சென்றால் தான் எந்த கட்சிக்கும் பயன் இல்லாமல் போகும் என்பதே நம் BN தலைவர்களின் 56 ஆண்டுகால தூர நோக்க திட்டம். இதில் ஒட்டு மொத்த Malaysia இந்தியர்கள் பலிகெடா!!! 10 தலைவர்களுக்கு பதில் அரவணைக்கும் ஒருவரே மேல்!!
இந்திய தலைவர்கள் இந்தியர்களுக்கும் மட்டும் தலைவர்கள் அல்லாமல் மலேசியர் அனைவருக்கும் அவர்கள்தான் அதுபோல்தான் பிறரும். அதுதான் பக்காத்தான் போலிசி. அதனால்தான் கோத்தாராஜா தொகுதியில் ம.இ.கா இந்தியர்களுக்கு எதிராக பாஸ் பெண்மணிக்கு நம் இந்தியர்கள் கடந்த 2 தேர்தலிலும் வாக்களித்தனர். சாமிவேலு பொதுபணி அமைச்சராக மட்டூம் சேவையாற்றினால் போதும் கல்வி அமைச்சர்தான் எல்லா பள்ளிகளுக்கும் அமைச்சர். அவர்தான் நம் பள்ளிக்கு உதவ வேண்டும் என்றும் போராடியவர்தான் பக்காத்தான் தலைவர்கள். அப்படி இருக்க இப்பொழுது மட்டும் இந்தியர் பிரச்சனையை களைய் இந்தியர்தான் சிலாங்கூரில் இருக்க வேண்டும் என்பதில்லையே. எத்தனை இந்தியர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு ஆட்சிக்குழு உறுப்பினரும் எல்லா மக்களுக்கும் சேவையை வழங்குவதுதான் முக்கியம். அதில் கவனம் காட்டுங்கள். பரிசான் போல இந்தியர் தலைவர்தான் இந்தியர்களுக்கான எல்லா பொறுப்பும் என்ற சிந்தனைக்கு சாவு மணி அடியுங்கள். அது போதும்.
,முத்து, நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை. உங்களின் பெருந்தன்மையைப் பாராட்டுகிறேன். ஆனால் என்னைப் போன்ற பெருந்தன்மை இல்லாதவர்களால் இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சீனர்களுக்குக் குறைவான இடம் கொடுத்திருந்தால்…..? மலாய்க்காரர்களுக்குக் குறைவான இடம் கொடுத்திருந்தால்…….? என்று இப்படித்தான் மனம் போகிறது! சமயங்களில் நமது பெருந்தன்மை நமக்கு இளிச்சவாயன் என்று பட்டம் கொடுக்கிறது. எது எப்படி இருப்பினும் சிச்சி இந்தப் பழம் புளிக்கும்!
யார் ஆட்சிக்கு வந்தாலும் நம் தமிழர் நிலை ஒன்றுதான். நம் தலைவிதி மாற வேண்டும் எனில் நாம் ஒன்றுபடவேண்டும்.மனநிலை மாற வேண்டும்
நண்பர்களே…..இந்தியர்கள் மலேசியா அரசியல் அமைப்பில் அங்கம் பெறுவது மிக முக்கியமே….ஆனால் அது அங்கம் பெரும் எண்ணிகையை தவிர்த்து …மிக முக்கியமான தகுதியும் தேவை…..மலேசியா அரசியல் அமைப்பில் தமிழ் மொழி ஒரு அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும் …ஆகவே இந்தியர்களை பிரதிநிதிக்கும் ஒவ்வொருவரும் தமிழ் பற்றுள்ளவர்களாகவும்….தமிழை தமிழ் பள்ளியில் படித்தவர்களாகவும் இருப்பது மிக முக்கியம்….தற்போது பினாங்கில் நடக்கும் ஒரு அவலம்…. இபொழுதே முற்றி புள்ளி வைக்க வேண்டும் …..சிங் ஒருவன் ஒட்டு மொத்த இந்தியர்களின் பிரதிநிதியாக முடியுமா..??..இது மேலும் இந்தியர்களிடையே பல பிரிவுகளை பிளக்கும் ….கர்பால் சிங் நகர்த்தும் காய் தமிழர்களுக்கு எதிராக கூடிய விரைவில் ‘வெடிக்கும்’……மறுபடியும் சிந்தியுங்கள்…
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் , நம் இந்தியர்களுடைய நிலைமை ஒரு போதும் மாறது. நாம் ஒன்று பட வேண்டும். ஒரு காலத்தில் ஒற்றுமையுடன் இருந்த நம் இனம் , இன்று கட்சிகளினாலும் , ஜாதிகளினாலும் பிரிக்க பட்டன . புலிகள் சுலபமாக வேட்டையாடுவததற்கு , மாடுகளை தனி தனியே பிரித்துவைதது போல் , இன்று நம்மை வேட்டையாட பிரித்துள்ளனர். வாருங்கள் எல்லோரும் இணைவோம் ஒரே கட்சியாகவும் , ஒரே ஜாதியாகவும் . நமக்கென்று ஒரே சின்னம் , ஒரே பயணம் , ஒரே தலைவன் .இதுவே நம் ஒவ்வொருவரின் தாரக மந்திரம் . அந்த ஒரே தலைவனை இந்ந்திய மக்களால் மட்டும்தான் தேர்ந்தெடுக்க பட வேண்டும் மற்றும் அத்தலைவனை இந்திய மக்கள் நாம் வழிநடத்த வேண்டும . அத்தளைவருடைய உழைப்பு ஊதியத்தை ஒவ்வொரு தமிழனும் வழங்க வேண்டும். இச்சட்டத்தை நாம் நிறைவேற்ற வேண்டும் .
முடியுமா தமிழா ??????????? நம் எண்ணம் நிறைவேறும் என்று
நம்புகிறேன் . கூடிய விரைவில் இதை வெளிபடுதுவோம். நான் சொல்வது சரியா நண்பர்களே ??????????
தமிழன் ஒரு முட்டாள் ,,உலகிலேயே தமிழன் தான் சர்வ தேச முட்டாள்
பி என் கொடுத்த காசை வாங்கிக்கொண்டு பாக்கதனுக்கு ஓட்டு போட்டால், இவர்கள்
நன்றி கெட்டதனமாக நடந்துகொள்கிறார்கள் ! யாருக்கு யார் விசுவாசம்காட்டுவது ?
ஆகட்டும் அடுத்த 14 வதுதேர்தலில் பார்த்துக்கொள்வோம்!
இந்தியர்கள் ஒற்றுமை இல்லாதவர்கள் என்பதற்கு சான்று, குறைந்த எண்ணிக்கையாக இருந்தாலும், அதிக கட்சிகள் கொண்ட பெருமை நமக்கே!! வாழ்க மலேசிய இந்தியர்கள்!!
சேவியருக்கு பதவி தர கூடாது என்று பகபகமாக செய்தி தாலில்
அறிக்கை விட்டதும் நம் தமிழர்கள்தான்.ஆடு நனையுதேனு ஓநாய் கண்ணீர் விட்ட கதையாக இருக்கிறது இப்பொது.கடந்த காலங்களில் சிலாங்கூரில் இரு இந்தியர்களுக்கு BN இடம் கொடுத்ததொ ?
ஆக மொத்ததில் நமக்கு இரண்டு கட்சிகளும் பட்டை நாமம் போட நினைகிறார்கள் .நாம் தெளிவான ஒரு முடிவை எடுக்கும் நேரம் வந்து விட்டது .30 ஆண்டு காலம் தூங்கியதின் விளைவு .பதர்கள் நம்மை விழுங்கி விட்டதால் மேலே வருவதிற்கு நாம் அதிகம் போராட வேண்டும் .
7 சதவிஹித இந்தியர்கள் 2 எஸ்கோ கேட்டால் 25 % சீனர்கள் 2 எஸ்கோ பெற என்ன இளிச்சவாயர்களா ? ஒரே ஆள் எஸ்கோ பென்சன் வாங்குவதை விட 2 பேர் வாங்கும் வாய்ப்பு இருக்குதே. செலங்கொரில் உள்ள எத்தனை தோட்டங்களில் எஸ்கோவின் கால்கள் பட்டனவோ.?
ஆகக் கடைசியாக ஒன்று கூறுகிறேன். நம் தலைவிதி நம் கையில். நம் முன்னேற்றம் நம் கையில். நாம் பணக்காரனாவது நம் கையில். பிச்சைக் காரணாவதும் நம் கையில். எதுவும் அரசியல்வாதிகளின் கையில் இல்லை. ஆட்சிக்குழுவில் இடம் கிடைக்கிறதோ இல்லையோ இருக்கின்ற ஆட்சிக்குழு – சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பயன் படுத்திக்கொள்ளுங்கள். அவர் சீனரோ, மலாய்க்காராரோ இந்தியரோ அவரைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள். எந்த அரசியல்வாதிகளின் பின்னால் ஓட வேண்டாம்! நமது வேலையை நாம் கவனிப்போம். அரசியல்வாதிகள் அவர்களின் வேலையைக் கவனிக்கட்டும்!
அய்யய்யோ … சேவியருக்கு பதவியே கொடுக்கக்கூடாதுங்க. இந்த மனுஷன் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்ன செய்தான் தெரியுமா? தமிழர்களுக்கு தமிழ்ப் பலிக்கூடம் கட்டிக்கொடுத்தான், தமிழ்ப் பள்ளிகளுக்காக நிலம் ஒதுக்கிக்கொடுத்தான், இந்துக் கோவில்களுக்காக நிதி வாங்கிக்கொடுத்தான்; நிலம் ஒதுக்கினான். தமிழ்ப் பள்ளிகளுக்காக ஹாஸ்டல் கட்டிக்கொடுக்க ஏற்பாடுகளைச் செய்து அதற்கான நிலத்தையும் பெற்றுத்தந்தான். இந்தியப் பெண்களுக்காக இலவச மருத்துவ பரிசோதைகளை ஏற்பாடு செய்தான். கிள்ளானில் கட்டப்படும் பண்பாட்டு மையத்தில் இந்தியப் பண்பாட்டு மையத்தைப் பெற்றுத்தந்தான். இன்னும் நிறைய நிறைவாக இந்தியனுக்குச் செய்தான். இவனுக்கெல்லாம் பதவி கொடுக்கலாமா? கொடுக்கவே கூடாது! பின்பு யாருக்கு பதவி கொடுக்கணும் தெரியுமா? மொள்ளமாரி! முடிச்சவிக்கி! கூட்டிக்கொடுப்பவன்! காட்டிக்கொடுப்பவன்! என்று நிறையபேர்தான் இருக்கிறார்களே அவர்களுக்குக் கொடுக்கணும். வேட்கக்கேடுடா தமிழா! நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைக்கையிலே!