மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற கட்சி ஏன் இரு இந்தியர்களுக்கு இடம் கொடுத்திருக்கக் கூடாது? அதிகார வர்க்கத்தின் இந்த அரசியல் மீது மிகவும் வெறுப்பே முன் வந்து நிற்கிறது.
சிலாங்கூர் அரசின் கண்ணை உறுத்தும் இது போன்ற ஒரே தேசம், ஒன்றே மக்கள் என்னும் பரப்புரைகள் இனி எடுபடுமா? கேள்விகளை அடுக்கும் எதிர் அணியினர்? மற்றவர்கள் மத்தியில் பக்காத்தான் செயல்பாடு அனுபவம் இல்லா தலைமைபோல் தோற்றம் காட்டுகிறதே?
கடந்த ஐந்து ஆண்டுகள் எப்படியோ குறை பேசியவர்களை சமாளித்த இந்தியர்கள் இனி இதற்கு எவ்வாறு பதில் சொல்லி தலை நிமிர்வார்கள். பினாங்கு இதில் எவ்வளவோ முன் உதாரணமாக திகழ்கிறதே!
அன்வார் பற்றி தேர்தல் சமயம் எதிர் அணி இந்தியர்கள் எவ்வளவோ மோசமாக பேசியும். அவற்றை சமாளித்த பக்காத்தான் இந்திய ஆதரவாளர்கள் இனி எவ்வாறு தலை காட்டுவார்கள் ? இதற்கு நல்ல தீர்வு / திருப்பம் காண்பார்களா?
இந்திய சமுதாயம் தொடர்ந்து பின் தள்ளப்பட்டால் கட்டாயம் ஒரு நாள் அவர்கள் முடிவு மாறுபடும். இந்தியர்கள் குதிரைகள் என்று நம்பியவைகள் எல்லாம் இன்று நரிகளாகி விட்டன.
வருவான் ஒரு தலைவன்!
இன நலன்… இன மானம் காப்பான்!
காலம் கட்டாயம் கனியும்!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் நன்றாக நிலைப்படுத்தப்படும் காலம் கட்டாயம் வரும்!
-நாசா
———————————————————————————————————————————————————————
உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும், உள் மனதின் குமுறல்களையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.
எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] / தொலைநகல் : 03-26918272
ஜெகவீரபாண்டியன் ! உங்கள் வேதனையில் நானும் பங்கு கொள்கிறேன் !
சேவியர் போன்று இப்போது டி எ பி சார்பில் பதவி ஏற்று இர்ருக்கும் கணபதி ராவு என்ன செய்ய போகிறார் என்று பார்போம். எத்தனை தமிழன் சிலாங்கூர் அரசாங்கத்தில் இருக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை, ஒருவர் இருந்து ஒன்பது பேர் சாதிக்க கூடிய ஆற்றலை பெற்று இருந்தால் அவருக்கு நாம் ஒரு வாய்ப்பை தந்து பார்ப்போம் . சேவியருக்கு 5 வருஷம் கொடுத்தாச்சு. மத்தவங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம். நீதி கட்சி ஒரு தமிழனுக்கு செனட்டர் பட்டம் கொடுத்துப் பார்லிமென்ட் அனுப்பி வைக்கலாமே!.
அய்யா பாராளுமன்றதில் நம்மவர்கள் நிறைய இருகிறார்கள் .அங்கே பாரிசான் ஆட்சி செய்கிறது . ம.இ,கா பார்துக்கொள்ளும்.அது பிரசனை அல்ல . ஏறக்குறைய 2 மாதங்கள் நெருங்குகிறது .என்ன செயல் திட்டத்தை கணபதி ராவூ இந்தியர்களுக்கு செயல்படுதத இருக்கிறார் என்று நம்ம தினசரிகளில் செய்தியே இல்லை .ஊமை செய்கையில் வேலை செய்வாரோ,யாமறியோம் பராபரமே .
ஐம்பத்து நான்கு ஆண்டுகள் ஆப்பு வைத்தது தெரியாது .இரண்டே மாதத்தில் எல்லாம் செய்து முடித்து விட வேண்டுமென்றால் எப்படி ஐயா பொறுத்திருந்து பார்போம் .
சிலாங்கூரில் எத்தனை தமிழர்கள் இம்முறை போட்டி இட்டனர் ! இவர்களில் எத்தனை பேர் வெற்றிபெற்றனர் ! எதற்காக இவர்களை இனபேதமின்றி சிலாங்கூர் மக்கள் தேர்ந்தெடுத்தனர் !
இவர்கள் யாவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் முதல்கட்டமாக செயல் புரிய வேண்டும் …திறமையை காட்ட வேண்டும் . கட்சி . தொகுதி என்று பம்பரம் போன்று செயல் புரிந்து மக்களின் ஆதரவை பெறவேண்டும் …. இதை விட்டுவிட்டு ஆட்சி உருப்பினர் பதவி மட்டும் கொடுத்தால்தான் மக்களை பிரதிநிதித்து அரசியலில் இறங்கப்போவதாக சொல்வதில்லை… ஆகா சொம்மா கிடந்த வாய்க்கு அவல் கிடைத்த கதையாய் போய்விட்டது இந்த விவகாரம் !
தயவு செய்து இனியும் சமயம், இனம், கலாச்சாரம், கொண்ட அரசியல் கட்சிகள் வேண்டாம். முன்னொரு காலத்தில் தான் நம்மை பிரித்து நாட்டை ஆட்சி புரிந்தார்கள். இனியும் அதற்கு நாம் வழி கொடுக்க கூடாது. யாருக்கு நாற்காளி என்று கணக்கிட வேண்டாம். கொடுத்த வேலையை செவ்வனே செய்து முடிக்க வேண்டும் என்று நாம் அவர்களை வலியுருத்த வேண்டும்.
மலேசிய இந்திய கட்சிகளால் மலேசிய இந்தியர்களுக்கு பாதகம்தான் விளையும் எந்த நன்மையையும் இல்லை .முதலில் சேவை செய்யாத அரசியல் கட்சிகளை புறக்கணியுங்கள் .
டேய்… இந்தியர்கள் பிரச்னை அன்வாரின் பிரச்னை கிடையாது… அரசாங்கத்தின் பிரச்னை!! ஈடுபட்ட பயல்கள இது கூடவா தெரியவில்லை
ஆப்பு யார் வைத்தா என்ன, ஆப்பு ஆப்புதான் . வைக்கிறவரை வரை ஏண்டா சும்மா இருக்கிங்க . தமிழனை அழிக்க எவனும் தேவை இல்லை . நீங்களே அடிசசிகிட்டு சாகதிங்க தம்பிகல
இந்தப்பகுதி அரசியல் கருத்துக்கள் யாவையும் ஒரு ஆய்வில் முடிக்கிறேன். இந்தியன் என்ற அமைப்பில் முக்கியமாக தமிழர்கள் தெலுங்கர்கள் மலையாளிகள் வங்காளி என்று ஜனத்தொகைபடி வரிசை செய்துள்ளேன். அரசியல் பதவிகளில் மட்டும் ஆதிக்கம் காட்டும் கடைசி மூவர்களில் தமிழர்கள் அரசியலில் ஏமாளிகள். கூட்டிக் கழித்துப் பார்தாலும் மலேசியாவில் இன, மொழி அரசியல் ஆதிக்கம், ஆதங்கம் இருக்கவே செய்யும். திராவிட கூட்டமே இன்றும் ஒற்றுமையின்றி சிதறுண்டு கிடப்துபோல இங்கும் இன மொழி அரசியல் நண்டுகள் பதவிக்கு ஆர்ப்பரிப்பது அவரவர் உரிமை! ஆனால் அதிகம் உள்ள தமிழன் ஆமாளியாக,எஏமாளியாக முட்டாளாக ஓட்டுப் போட்டு ஏத்தி விடுவது தான் நமக்கு நாமே அடித்துக்கொள்ளும் ஆப்பு.