இந்தோனேசியாவில் மாயமான ஈழத் தமிழர்கள் : மீட்க யார் தான் முன்வருவார்?

tamil_seekersஇலங்கை இறுதிப் போரின் போது அங்கிருந்து வெளியேறி இந்தோனேசியாவில் ஏராளமான ஈழத் தமிழர்கள் தஞ்சமடைந்து மாயமாகி உள்ளனர். அவர்களைப் பற்றிய தகவல்களைத் தருமாறு தமிழர் பண்பாட்டு நடுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2009 ஈழப் போரின் போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.

சில நாட்களுக்கு முன்பு ஈழத்தில் மட்டக்களப்பிலிருந்து இருந்து குசலக் குமாரி என்ற தாய் இந்தோனேசியாவில் சிக்கியுள்ள துஷ்யந்தன் என்ற தனது மகனை மீட்க தமிழகம் வந்துள்ளார் என்ற செய்தியை வெளியிட்டோம். அதன் பின்பு பல அழைப்புகள் வருகின்றன.

பலரும் தங்கள் உறவுகளை காணவில்லை , அண்ணனை காணவில்லை, தம்பியை காணவில்லை . இந்தோனேசியாவில் கடைசியாக அவனது குரலை கேட்டோம் என்று செய்தியை அனுப்புகின்றனர்.

பல ஈழத் தமிழர்கள் ஆஸ்திரேலியா செல்லும் போது படகு மூழ்கி பலியாகி உள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இந்தோனேசிய சிறைச் சாலையில் உள்ளனர். சிலர் திறந்வெளி முகாமில் உள்ளனர். சிலர் இரண்டில் இருந்தும் தப்பித்து வெளியே அடையாளம் மறைத்து வாழ்ந்து வருகின்றனர்.

tamil_seekers02உலகெங்கும் இருக்கும் ஈழத் தமிழர்கள், தொலைந்து போன தங்கள் உறவை மீட்டுத் தாருங்கள் என நம்மிடம் கேட்பது நெஞ்சை நெகிழ வைக்கிறது. உலகில் நாடு இல்லாத தமிழரை மீட்க யார் தான் முன்வருவார்?

இந்தோனேசியாவில் உள்ள சில தமிழர்கள் அவ்வப்போது நமக்கு உதவ சில செய்திகளை சொல்கிறார்கள். எனினும் ஒருவரை கூட நம்மால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தமிழினத்தை போல் இவ்வளவு வலியும் வேதனையும் சுமந்த வேறு ஒரு இனம் இல்லை என்றே தோன்றுகிறது.

இந்தோனேசியாவில் உள்ள அனைத்து தமிழர்களையும் மீட்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. அதற்கு அவர்கள் அங்கேயே சில காலம் ஒரு அலுவலகத்தை அமைத்தால் தமிழர்களை மீட்க பயனுள்ளதாக அமையும் என்று எண்ணுகிறோம்.

உலகில் பல்வேறு மூலையில் இருந்து தமிழர்கள் படங்களை அனுப்பி உள்ளனர். காணாமல் போனர்வர்களின் படங்களையும், இந்தோனேசியாவில் தரை இறங்கிய தமிழர்களின் படங்களையும் இணைத்துள்ளோம்.

இவர்களைப் பற்றி உங்களுக்கு ஏதாவது சிறு தகவல் தெரிந்தாலும் உடனே எங்களை தொடர்பு கொள்ளவும் . தமிழர் பண்பாட்டு நடுவம் மின்னஞ்சல் [email protected] 9566224027 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: