இன்று காலை செனட்டராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்ட இன்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, தம் நியமனத்தை ஏழை இந்திய மலேசியர்களின் போராட்டத்துக்கும் “குரலற்றிருப்போருக்கும்” கிடைத்த ஒரு கெளரவம் என்று வருணித்தார்.
“சிறப்பாக சேவை செய்வதாக உறுதி கூறிக்கொள்கிறேன். இதை மலேசியாவில் இந்திய ஏழைகளின் போராட்டத்துக்குக் கொடுக்கப்பட்ட கெளரவமாக நினைக்கிறேன்”, என்று டேவான் நெகராவில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
பிரதமர் துறையில் துணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் வேதமூர்த்தி, இந்திய சமூகம் நெடுங் காலமாக போராடி வந்துள்ளது. குரலற்றோரின் குரலை எடுத்துரைக்க இப்போது ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.
பார்ப்போம் ,இவரின் குரல் முதலில் இவருக்கு கேட்குமா என்று? காலம் தான் பதில் சொல்லும்.
என்ன மாறி கேப் மாறி வெளிநாட்டில் போட்ட வழக்கு என்னவாயிற்று ?
வாழ்துக்கள் வேத அவர்களே. உங்களின் நேர்மையான சேவை உங்களை குறை சொன்னவர்கள் தவறு என்று உணரவேண்டும்.
ஐயகோ….இவன் பேசுவதையெல்லாம் கேட்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் நான் இருப்பதை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது!
எந்த குரலற்றோருக்கு நீர் உதவ போகிறீர் வேதா.முதலில் குரலற்ற உன் உடன் பிறபிட்க்கு உதவ முடியுமா? முதலில் இங்கிருந்து உன் வேலையை தொடங்கலாமே. முடியுமா???????????????? நான் நினைக்கிறேன் முடியும் ஆனால் ஐந்து வருடம் ஆகும். ரைட் ரைட் ரைட் ரைட்.
அப்பா நல்ல நிம்மதியா 5வருடம் பிரச்னை இல்லமால் காலம் ஓட்டிவிடலாம் என்று நினைத்தால் அது தவறு உனக்கும் ஆப்பு ரெடி வேதமூர்த்தி எந்த ஆப்பு உம்னோ MICaappu மற்றும் மக்கள் ஆப்பு.
பாப்போம் என்ன செய்கிறார் என்று !
பதவி கொடுத்தப் பின்னர் நீங்களும் “குரலற்றோர் பிரிவில் சேர்ந்து விட்டீர்கள் என மறந்து விடாதீர்கள். உங்கள் குரல் முடக்கப்பட்டு விட்டது என்பது தான் உண்மை. உங்கள் வருகைக்குப் பின்னர் “லோக்கப்” மரணங்கள் அதிகரித்திருக்கிறது. காரணம் இனி , உங்களால் என்ன செய்ய முடியும் என்று சவால் விடுவதற்காக அது உங்களுக்குக் கொடுக்கப் பட்ட பதவி!
எதற்கு இப்படி முரண்டு புடிக்கிரீர்கள். அவர் சும்மா பொய் சேரவில்லை!!! அப்படி அவர் அந்த ப்ளுப்ரின்ட் டை செயல்படுத்தவில்லை என்றால் அவரை வசைபடலாம். இப்போது அவருக்கு வாய்ப்பு கொடுங்கள்.
நாம் சீனரும் அல்ல, மலைய்காரரும் அல்ல, நம்முடைய உரிமைக்கான உத்திரவாதத்தை முதலில் பெற்றுகொள்வோம் பிறகு அரசியல் ரீதியான விவாதங்களுக்கு செல்வோம்.
இப்படி கூறுவதால் நான் பரிசனுக்கு வக்காலத்து அல்ல!!!! ஒரு உண்மையான என் இனம் மீது பாசம் கொண்ட தமிழன்!!!
பிறரது அரசியல் வளர்சிக்காக நமது சமுதயதயம் பிரிந்துவிட வேண்டம்.
மலைய்கரர்கள் ஆயிரம் பேசினாலும் இறுதியில், பூமிபுத்ரா அந்தஸ்து பறிபோய்விடுமோ என்று பாரிசன் பக்கம் சாய்ந்தது செருப்பால் அடித்தது போல இன்னும் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்!!!!!!
அவர்களை போல நமது சமுதாயத்தின் உருமைக்கான உத்திரவாதத்தை பெறுவோம்!!! அது பரிசனோ பக்கதானோஎன்பது அடுத்த விசயம் தான்!!!
வாழ்துக்கள், உங்கள் பனி இந்திய உள்ளங்களில் நம்பிக்கை வளர்க்கட்டும்.
பிட்ச்சை ஒன்றும் நாம் கேட்க வேண்டிய அவசியம் நமகில்லை.நம் தாதா பாட்டி,அப்பா,அம்மா நாம் எல்லோரும் இந்நாட்டு வளர்சிக்கு பாடு பட்டிருக்கோம்,நம்மை யாரும் இஷ்டம் இருந்தால்இரு இல்லை வெளியே போ என்று சொல்வதற்கு உரமை இல்லை. இனி இப்படி சொல்பவரிடம் நாம் கேட்ட்க வேண்டிய கேள்வி.அட மடையா நீ இந்நாட்டில் இருக்கும் சீனரையும் இந்தியரையும் வெளியாக்க ஒரு நல்ல வழி, ஓவ்வருக்கும் ஒரு பில்லியன் நஷ்ட ஈடாக கொடுத்து விடு நாங்களாக போய் விடுகிறோம்.ஏன் என்றால் நீயும் எங்களிடம் கடன் பட்டிருக்காய் அல்லவா.கடன் வசூல் செய்யாமல் எங்கே போவது?
குருபெயர்சிக்கு பிறகு மலேசியா தமிழர்களின் தலையில் உட்கார்த சனிதான் இந்த வேதாளம் ,கேவலமான ஒரு தமிழன் ,துணை அமைச்சர் என்ன ஜனாதபதி பதவியா .மலேசியா இந்திய சமுகத்தின் சாபத்தை சம்பாதித்து வைத்து இருக்கும் இந்த வேதாளம் ,எதை சொன்னாலும் இனி சமுகம் நம்பாது
சுதந்திர உரிமைக் குரலா, அல்லது கழுத்து நெரிக்கபட்ட குரலா என்று மக்கள் முடிவு செய்வர் !
வாழ்த்துக்கள். இனி மக்கள் சேவையே மகேசன் சேவை என துரித கதியில் வேலை செய்யுங்கள்.
சோரம் போனவேதா எங்கே வாய் கிழிய பேசினாயே உன் பேச்சைக் கேட்க முன்வரிசையில் உட்கார்ந்து கை தட்டினேனே,சொன்னதில் ஒன்றையாவது செய்துகாட்டு?எப்படியோ! காகாய் பிடித்து மந்திரியாய்விட்டாய்.உனக்கு இலாபம்தான், ஏமாந்தவர்கள் நாங்கள்தான்!!!!!!!!!! நாம் வாங்கி வந்த வரம் அது!!!!
வேதாவை குறை கூறும் இவனுங்கதான் எல்லாரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முன் வரிசையில் உதவிக் கேட்டு நின்று கொண்டிருப்பானுங்க.. உண்மையில் சூடு சொரணை இருந்தால் உங்க அடையாளத்தை குறிப்பிட்டு நான்தான் உங்களை பற்றி செம்பருத்தியில் இன்னார் பெயரில் எழுதினேன் என்று கூற முடியுமா? முடியாது ஏனென்றால் சுயநலம்.
கூலிம்கார… சந்திரா உங்களுக்கும் அந்த வேதாவிற்கும் எதாவது தொடர்பு இருக்கா இல்ல உங்களுக்கு எதாவது கமிசன் கொடுக்குறன்னு சொன்னாரா ….இப்படி வக்காலத்து வாகுரிங்க ….அப்ப… அந்த அளுகிட்ட இருந்து உங்களுக்கு என்னமோ தேவ படுது அப்படிதானே? உங்க பாட்டிக்கு அடையாள கார்டு தானே……அப்படின்னா சரி நீங்க அவன புடிச்சி தொங்குங்க……
என் பெயர் விக்னேஸ்வரன் சுப்ரமணியம். நான்தான் செம்பருத்தியில் எழுதுகிறேன். உங்கள் ‘வேதா’ளத்துக்கு முதல் வேலை. negeri sembilan மாநிலத்தில் தாயாரின் அனுமதி இல்லாமல் பிள்ளைகளின் புறம்போக்கு அப்பன் மதம் பிள்ளைகளை மதம் மாற்றி இருக்கின்றான். பிள்ளைகளை மதம் மாற்றியது செல்லாது எனவும் அவர்கள் இந்துக்களே என எழுத்துபூர்வமாக அரசாங்கம் ஒப்புதல் வழங்க வேண்டும். இதை உங்கள் வேதாளம் செய்தால், அவனைப் பற்றி எழுதுவதை நான் நிறுத்துகிறேன். அதை விடுத்து, இங்கே வெட்டி கதை பேசாதீர்கள்!!!
வாழ்துக்கள் இனி இந்திய மக்கள் நல்ல பயனை பெறட்டும் வாழ்க வளமுடன்
வேதா முதலில் உங்கள் அண்ணன் உதயாவிற்கு பாரிசன் வழங்கிய சிறை தண்டனையை அகற்ற வழி பாருங்கள். அம்னோ சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். தேர்தல் முடிந்த பிறகு அம்னோ தனது சுய ரூபத்தை காட்டிவிட்டது. இதுதான் அம்னோ.முடிந்தால் நல்லது செய்யுங்கள் , இல்லையேல் வெளியேறுங்கள்.