எம்பி : ‘தேடப்படும்’ போலீஸ்காரரின் நிழற்படத்தை வெளியிடுக

1 dharmதர்மேந்திரனின் தடுப்புக்காவல் மரணத்துடன் சம்பந்தப்பட்ட நான்காவது நபராகக் கருதப்படும் போலீஸ் அதிகாரியின் பெயரையும் நிழற்படத்தையும் போலீஸ் வெளியிட வேண்டும் என செகாம்புட் எம்பி, லிம் லிப் எங் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அவ்வதிகாரி தலைமறைவாகி விட்டதால், அவரது பெயரையும் படத்தையும் வெளியிட்டால் அவரைத் தேடிப் பிடிப்பதற்கு உதவியாக இருக்கும் என லிம் கூறினார்.

1 dharm1“ஷா ஆலம் போலீஸ், ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் மூன்று பேரின் பெயர்களையும் புகைப் படங்களையும் வெளியிட செய்தியாளர் கூட்டமொன்றை நடத்துவதாக நேற்று ஓரியெண்டல் டெய்லியில் அறிவிக்கப்பட்டிருந்தது.

“எனவே, என். தர்மேந்திரன் வழக்கிலும் போலீஸ் அதையே செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.முதலில், சம்பந்தப்பட்ட அந்த போலீஸ் அதிகாரியின் படத்தை எல்லா செய்தித் தாள்களிலும் வெளியிடுங்கள்.

“இரண்டாவதாக,அவர் இப்போது தேடப்படும் நபராகிவிட்டதால் அவரது பெயர், படம், முகவரி ஆகியவற்றை எல்லா போலீஸ் நிலையங்களிலும் வைக்க வேண்டும்”, என்றாரவர். இதன் தொடர்பில் லிம் ஜிஞ்சாங் போலீஸ் நிலையத்தில் ஒரு புகாரையும் பதிவு செய்தார்.