எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலில் இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கான போட்டி தொடர்பில் தாம் ‘திறந்த’ நிலையை பின்பற்றுவதாக இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் சொல்கிறார்.
அந்தப் பதவிக்கு போட்டி இருந்தாலும் அது தமக்குப் பிரச்னை இல்லை என்றும் அந்தப் பதவிக்கு போட்டியிட விரும்பும் யாரையும் தாம் வரவேற்பதாகவும் கைரி சொன்னார்.
“நான் அந்தப் பதவிக்கு போட்டியிடுவது பற்றி பின்னர் அறிவிப்பேன்,” என அவர் நேற்று புத்ராஜெயாவில் கூறினார்.
அம்னோ இளைஞர் தலைவர் பதவிக்கு போட்டி இருக்கக் கூடாது என கிளந்தான் அம்னோ இளைஞர் பிரிவு யோசனை கூறியிருந்தது.
பெர்னாமா