அந்தப் பட்டியலுடன் தொடர்பில்லை என்கிறார் கீதாஞ்சலி

listத ஸ்டார் நாளேட்டில் வெளியிடப்பட்டு சர்ச்சையை உண்டாக்கி இருக்கும் ‘மலேசியாவின் சக்திவாய்ந்த 10 மகளிர்’ பட்டியலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று மறுக்கிறார்   ‘ ராகா’  அறிவிப்பாளர் கீதாஞ்சலி  ஜி.

அப்பட்டியலைத் தயாரித்தவர் யார் என்பது தமக்குத் தெரியாது என மலேசியாகினியிடம் அவர் தெரிவித்தார். அதனால் “நிம்மதி கெட்டதுதான்” மிச்சம் என்றார்.

அப்பட்டியலில் பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் முதலிடம் வகிக்கிறார். அம்பிகா ஸ்ரீநிவாசன், லெம்பா பந்தாய் எம்பி நூருல் இஸ்ஸா போன்றோரும் அதில் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்டாரைத் தொடர்புகொண்டதற்கு, அது ஒரு விளம்பரம் என்றும் விளம்பரதாரர் பெயரை வெளியிடுவதற்கில்லை என்றும் கூறியது.

TAGS: