அன்வார்: நமது போராட்டத்தில் தளர்வு ஏற்படக் கூடாது

anwarகடந்த மாதம் நிகழ்ந்த பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும்  மோசடிகளுக்கு எதிரான போராட்டத்தில் தளர்வு ஏற்படக் கூடாது என பிகேஆர்  மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

சில பக்காத்தான் ராக்யாட் தலைவர்களிடையே அத்தகைய அரசியல் தளர்வு  ஏற்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா சொல்வதைப் போல அவர்கள்
எதிர்த்தரப்புக் கூட்டணியில் உள்ள அம்னோ குரல்கள் என அன்வார் பக்காத்தான்  ராக்யாட் மாநாட்டின் தொடக்கத்தில் கூறினார்.

“நாம் முன்னேற வேண்டும் என நம்மில் சிலர் சொல்கின்றனர். கடந்த கால  உண்மை நிலைகளைப் புரிந்து கொள்ளாமல் நாம் முன்னேறுவது சிரமம் என நான்  அவர்களுக்குச் சொல்கிறேன்.”

ஆகவே தேர்ந்தெடுக்கப்பட்ட பக்காத்தான் பேராளர்கள் தங்களது போராட்டத்தை  மறந்து விடக் கூடாது என்றார் அவர்.

 

TAGS: