மலாக்கா முதலமைச்சர் பொன் முட்டையிடும் வாத்தைக் கொல்கிறார்

jonker‘கார்களை நிறுத்துவது பிரச்னையாக இருந்தால் அந்தப் பிரச்னையைத் தீருங்கள்.  ஜோங்கர் சாலை இரவுச் சந்தையை மூடுவது பொன் முட்டையிடும் வாத்தைக்  கொல்வதற்குச் சமமாகும்’

‘ஜோங்கர் சாலை இரவுச் சந்தையை மூடுவது தண்டனை அல்ல’

மலேசியாவில் பிறந்தவன்: அம்னோவுக்கு பெரிய பிரச்னையே இது தான். பல  திறமையற்ற தலைவர்கள் அதில் உள்ளனர். அவர்கள் தங்கள் வாயை மூடிக்  கொண்டிருக்கக் கற்றுக் கொள்ளவில்லை.

புதிய மலாக்கா முதலமைச்சர் முதிர்ச்சியற்றவர். அவர் மாநிலத்தை வழி  நடத்துவதற்குத் தகுதியற்றவர்.

சீன சமூகத்தை மிரட்டுவதால் அவர்களை தமது வழிக்குக் கொண்டு வர முடியும்  என அவர் எண்ணுகிறாரா ? அது பலரை விரட்டி விடும்.

அவர் ஒவ்வொரு முறையும் வாயைத் திறக்கும் போது பிஎன், அம்னோ
தோற்றமே பாதிக்கப்படுகின்றது.

நோஸ்டரா: கார்களை நிறுத்துவது பிரச்னையாக இருந்தால் அந்தப் பிரச்னையைத்  தீருங்கள். ஜோங்கர் சாலை இரவுச் சந்தையை மூடுவது பொன் முட்டையிடும்  வாத்தைக் கொல்வதற்குச் சமமாகும்.

விளையாட்டாளர்: போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டா; அதனைத் தீர்க்க வழிகளைக்  காண வேண்டும். மாற்று சாலைகளைக் கட்டுங்கள். ஒரு வழிச் சாலையை  மாற்றுங்கள். பாதசாரிகளுக்காக பாலத்தைக் கட்டுங்கள். பாதிக்கப்பட்ட பகுதியில்  வர்த்தகத்தை மூடுவது நல்ல தீர்வு அல்ல.

அந்த முதலமைச்சர் எந்த உலகத்தில் வாழ்கிறார். அது அரசியல் எதிரடி என  அவர் முதலில் சொன்னார். பின்னர் போக்குவரத்து நெரிசல் என்கிறார்.

நமது அரசியல்வாதிகள் அறிக்கைகளை வெளியிட்டு விட்டு 24 மணி நேரத்துக்குள்  அதனை மாற்றுவதாகத் தெரிகிறது.

செம்பருத்தி: இட்ரிஸ் அம்னோ உச்ச மன்றப் பதவிக்குப் போட்டியிட
விரும்புவதாக சந்தேகிக்கிறேன். அம்னோ பதவிகளுக்கு போட்டியிடும் யாரும்  சீனர் எதிர்ப்புணர்வைக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் அம்னோவுக்குள் நிலவுவதாகத்  தெரிகிறது.

Qiqi: சுற்றுப்பயணிகள் இல்லை. போக்குவரத்து நெரிசலும் இல்லை. போக்குவரத்து  நெரிசலுக்கு எவ்வளவு எளிதான தீர்வு.

 

TAGS: