புலிகள் பாவித்த தனித் தீவுக்கு மகிந்தர் இன்று பயணமானார் !

eelam28613bஇன்று காலை(இலங்கை நேரப்படி) மகிந்தர் தன்சானியா நாடு மற்றும் சீஷெல் தீவுக்கும் பயணமாகியுள்ளார். தன்சானியா என்னும் நாடு பற்றி அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் சீஷெல்லா ? அப்படி ஒரு நாடு இருக்கிறதா என்று பலர் வியப்படைவார்கள்.

இந்துமா கடலில் இலங்கைக்கு கீழ் புறமாக மலதீவுகள் உள்ளது அங்கிருந்து ஆபிரிக்கா பக்கமாக மற்றும் மடகஸ்காருக்கு அருகில் உள்ள தீவுகளே சீஷெல்ஸ் தீவுகள் ஆகும். சிறிய மக்கள் தொகையைக் கொண்ட இன் நாட்டின் பூர்வீகவாசிகள் தமிழர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மற்றும் அங்கே சிவன் கோவில்களும் உள்ளது. பல தீவுகள் இணைந்ததே சீஷெல் நாடாகும். இங்கே பாவனையற்ற தீவுகளும் பல உள்ளது. மக்கள் வசிக்காத சில தீவுகள் சிலவற்றை புலிகள் துல்லியமாக கண்டறிந்துவைத்திருந்தார்கள்.

எரித்திரியா போன்ற நாடுகளுக்கு அருகாமையில் உள்ள சீஷெல் நாட்டிற்கு சொந்தமான சில தீவுகளை புலிகள், முன்னர் ஒரு காலத்தில் தமது தற்காலிக இறங்கு துறையாகப் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக இலங்கைக்கு கீழ் இந்துமா கடலில் பல தீவுகள், இவ்வாறு மனிதப் பாவனையற்ற தீவுகளாக இருக்கிறது.

சீஷெல் நாட்டில் இராணுவத் தளத்தை அமைக்க சீனா மற்றும் அமெரிக்க நாடுகள் போட்டிபோட்டவண்ணம் உள்ளது. இது இவ்வாறு இருக்கையில், 5 நாடகள் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு தன்சானியா செல்லும் மகிந்தர், இலங்கை திரும்பும் வழியில் சீஷெல் நாட்டிற்கும் சென்று அங்கே தங்கவுள்ளார்.

இலங்கைக்கு அருகாமையில் அன் நாடு இருந்தாலும், இலங்கை அரசானது அன் நாடோடு பெரிதாக உறவை வளர்த்துக்கொண்டது இல்லை. ஆனால் அதற்கான திடீர் தேவை தற்போது ஏன் ஏற்பட்டுள்ளது என்பது ஆராயத்தக்க விடையம் ஆகும்.

சீஷெல் நாட்டுக்கு அருகாமையில் இருக்கும் மனிதப் பாவனையற்ற தீவுகளை, தொடர்ந்து கண்காணிக்குமாறு மகிந்தர் அன் நாட்டு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்ப்பதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படி என்றால் இலங்கை அரசு எரித்திரியா போன்ற நாடுகளுடனும் தமது உறவுகளை ஏன் பலப்படுத்திவருகிறது என்ற சந்தேகத்துக்கும் தற்போது விடைகிடைத்துவிட்டது எனலாம். பிறிதொரு வெளிநாட்டில், புலிகளின் அணி ஒன்று சிலவேளைகளில் ஒன்றுகூடி தம்மை தயார் படுத்தலாம் என்ற அச்சம் மகிந்தரை பிந்தொடர்ந்தவண்ணமே உள்ளது.

TAGS: