மலாக்கா ஆயர் குரோ டிஏபி மாநில சட்டமன்ற உறுப்பினர் கூ போ தியோங்-கின் கார் மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளது. அந்தக் கார் மீது கல்லும் எறியப்பட்டுள்ளது.
இன்று காலை மணி 7.30 வாக்கில் தமது ஹொண்டா சிஆர்வி காரின் பின்புறத்தில் சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளதைக் கண்டு பிடித்ததாக கூ சொன்னார்.
“கல் எறியப்பட்டதால் பின்புறக் கண்ணாடியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது,” என அவர் கூறினார்.
புக்கிட் பெருவாங்கில் உள்ள அவரது வீட்டின் முன்புறத்திலும் சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளது.
போலீசில் புகார் செய்யப் போவதாக கூ மேலும் சொன்னார்.
மலேசியாவின் கலாசாரம் முன்னேறிக்கொண்டே போகுது !
அப்படியே ,பிடித்துவுடுவார்கள் நம் போலிஸ் படை ……….வெறும் போலிஸ் புகர் பத்தாது ”மச்சி”..கூடவே காசு பொட்டலத்தையும் சேர்த்து கொடுத்து பாருங்கள் நிச்சயம் குற்றவாளி கைது செய்ய படுவான் , காசுக்கு வேலை செய்பவன் தான் நிறைய இருக்கிறான் [அரசியல் புளித்து விட்டது மச்சி ]
இந்த மாதிரி ஒரு கேவலப்பட்ட வேலை எல்லாம் வேர்யார் செய்வார்கள்? இந்த கேவலப்பட (பி என்)தான் …!!!
கண்காணிப்பு புகைபடகருவியை சாலைகளில் மட்டும் பொருத்தினால் போதாது. பொதுவாக குடியிருப்பு பகுதிகளில் பொருத்தினால் ஓரளவு குற்றங்களை தவிர்க்க முடியும்.