அமைச்சருடைய வீடு ஒன்றில் நேற்று திருடர்கள் கொள்ளையிட்டுள்ளதை கோலாலம்பூர் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அந்த அமைச்சரது பெயரை அவர்கள் வெளியிடவில்லை என்றாலும் அது இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுதினுடைய தாயாருக்கு சொந்தமானது என நம்பப்படுகின்றது.
புக்கிட் டமன்சாராவில் உள்ள அந்த பங்களா வீட்டில் கைரியும் அவரது
மனைவியும் வசித்த போதிலும் திருட்டுச் சம்பவம் நிகழ்ந்த போது அவர்கள் அங்கு இல்லை என்றும் தெரிகிறது.
மாலை மணி 5.30 வாக்கில் அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கோலாலம்பூர் ஒசிபிடி கூ சின் வா கூறினார்.
பல மடிக்கணினிகளையும் கடிகாரங்களையும் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக அவர் சொன்னார்.
மொத்த இழப்பு குறித்து இன்னும் புலனாய்வு செய்யப்படுவதாகவும் கூ
தெரிவித்தார்.
மக்களிடம் சுரண்டப்பட்ட பணமையா இப்படிதான் போகும் நீதி தேவதை தன் தர்மத்தை செய்கிறது எவன் எவன் சுரண்டிநானோ அவன் பணம் போகும் காலம் இது
சந்தோசம் ,கொள்ளையன் வீட்டில் இன்னொரு கொள்ளையன் கொள்ளையடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ,,சந்தோசத்தி 1/4 போத்தல் TALI MERAH போட்டாதான் ஜோக்கா இருக்கும்
நாட்டில் அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை.
மந்திரி வீட்டில் திருட்டு போனது என்றால் மானம் போகும் பிரச்சனை ! இனியாவது
போலீசை உஷார் படுத்துவார்களா? போலீஸ்காரர்களே அறிவாள் வெட்டுக்கு பயப்படும் போது, மேலும் தன் குடும்பத்தை எங்கே பழிவாங்ககிவிடுவாகளோ என்ற பயம்
வேறு? அரசியல்வாதிகள் அடியாட்களை வளர்க்க வளர்க்க இப்படிதான் போய்முடியும் .
வினைவிதைத்தவன் வினை அறுப்பான் ………….!
“மேட் ரெம்பிட்டு” களை வளர்த்தவன் இவனடா. வளர்த்த கடா மார்பிலே பாய்ந்தால் வலிக்குதோ? அனுபவி ராஜா, அனுபவி!