‘அம்னோ இணைய எழுத்தர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதால் பக்காத்தான் ராக்யாட்டை ஆதரிக்கின்றவர்கள் அனைவருக்கும் பணம் கொடுக்கப்படுகின்றது என எண்ணக் கூடாது’
‘தட்டப்பயறு இராணுவத்தை அரசாங்கம் இன்னும் கண்டு பிடிக்கவில்லை’
சியாங் மாலாம்: தட்டப்பயறு இராணுவம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை என்றால் அந்த மாயாவியான தட்டப்பயறு இராணுவத்துடன் மோதுவதற்கு ஏன் 350 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது ?
ஒடின்: தொடர்பு, பல்லூடக துணை அமைச்சர் ஜைலானி ஜோஹாரி அவர்களே, தட்டப்பயறு இ ராணுவம் என்ற ஒர் அமைப்பு இயங்குவதாக ஒரு வாரத்திற்கு முன்பு உங்கள் கட்சி குற்றம் சாட்டியது. ஆனால் இப்போது உங்களால் யாரையும் காட்ட முடியவில்லை.
முழு அரசாங்க எந்திரமும் அம்னோ ஆதரவு இணையக் கொத்தர்களும்
உங்களிடம் இருப்பதை மறக்க வேண்டாம். நீங்கள் அந்த தட்டப்பயறு
இராணுவத்தை கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் ஒன்று உங்கள் வளங்கள் உருப்படியில்லாவை அல்லது நீங்கள் கதையை ஜோடிக்கின்றீர்கள்.
கெர்போக் லெக்கோர்: அம்னோ இணைய எழுத்தர்களை வேலைக்கு
அமர்த்தியுள்ளதால் பக்காத்தான் ராக்யாட்டை ஆதரிக்கின்றவர்கள் அனைவருக்கும் பணம் கொடுக்கப்படுகின்றது என எண்ணக் கூடாது.
பிஎன் கூட்டங்களில் கலந்து கொள்ள மக்களுக்குப் பணம் கொடுக்கப்படுகின்றது. ஆனால் பக்காத்தான் பணம் கொடுப்பதில்லை. மாறாக மக்கள் நன்கொடை அளிக்கின்றனர்.
அடையாளம் இல்லாதவன்#02382443: இந்த நாட்டை மேம்படுத்துவதற்கு உதவி செய்ய நாங்கள் உங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளோம். சின்னச் சின்ன
விவகாரங்களில் தலையிட்டு பழி வாங்குவதற்கு எங்கள் பணத்தை விரயமாக்க வேண்டாம்.
உங்கள் அடிச்சுவட்டில்: தட்டப்பயறு இராணுவத்தை அரசாங்கம் இன்னும் கண்டு பிடிக்கவில்லையா ? அதன் ‘வீரர்கள்’ எங்கே மறைந்துள்ளனர் ? பிரச்னையே இல்லை. ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தைன் அமையுங்கள். நீங்கள் விரைவில் அவர்களைக் காண முடியும்.
ஹாட்ச்: எதிர்காலத்தில் யாராவது இந்த விஷயத்தை எழுப்பினால் அவர் எம்பி-யாக இருப்பதற்கே தகுதியற்றவர் எனக் கருதப்பட வேண்டும். தீர்க்கப்படுவதற்கு எவ்வளவோ முக்கியமான விஷயங்கள் உள்ளன.
எஸ்எஸ் டாலிவால்: குடும்ப மாதர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், கணக்காயர்கள், பொறியியலாளர்கள், வணிகர்கள், குத்தகையாளர்கள் என பல வகையான மக்கள் அந்தத் தட்டப்பயறு இராணுவத்தில் உள்ளனர்.
வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் எங்கு இணையத் தொடர்பு கிடைக்கின்றதோ அங்கெல்லாம் அவர்கள் இயங்குகின்றனர். நான் அவர்களில் ஒருவன். ஆனால் எனக்கு டிஏபி பணம் கொடுக்கவில்லை.
கிட் பி: அம்னோ/பிஎன் குளறுபடிகளை அம்பலப்படுத்துவதற்காக தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் செலவு செய்யும் ஆயிரக்கணக்கான சாதாரண குடிமக்களைக் கொண்ட அமைப்பே அந்த இராணுவம்.
அவர்கள் தனிப்பட்ட தொண்டர்கள் என்பதை அம்னோ நம்ப மறுக்கின்றது. அம்னோவைப் பொறுத்த வரையில் அது போதுமான நிதி உதவி வழங்கப்பட்ட அமைப்பாகும்.
பியாங்கா லீ: வலிமையான பிஎன் அரசாங்கத்துடனும் உத்துசான்
மலேசியாவுடனும் மோதும் லிம் கிட் சியாங்-கிற்கும் மற்ற டிஏபி தலைவர்களுக்கு என் வணக்கம்.
பொய்களை ஜோடிப்பதற்கு அரசாங்கம் நேரத்தையும் ஆற்றலையும் செலவு செய்வது வருத்தமளிக்கின்றது. மாறாக அது நாட்டி பொது பாதுகாப்பை மேம்படுத்த நேரத்தை செலவு செய்ய வேண்டும்.