“பொதுச் சேவையில் உள்ளவர்களும் அதிகாரத்துவப் பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றவர்களும் எதிர்காலத்தில் மட்டுமின்றி கடந்த காலத்திலும் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்”
டிஏபி: சொத்துக்களை அறிவிக்கும் விஷயத்தில் காலித் இப்ராஹிம் பிஎன் -னைப் போன்று பேசுகிறார்.
ஏரியஸ்46: நன்றாகச் சொன்னீர்கள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் அவர்களே. பொதுச் சேவையில் உள்ளவர்களும் அதிகாரத்துவப் பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றவர்களும் எதிர்காலத்தில் மட்டுமின்றி கடந்த காலத்திலும்
தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்.
கடந்த காலத்தில் அவர்கள் தூய்மையானவர்களாக இல்லை என்றால் அவர்கள் கறை படிந்த தலைவர்கள் ஆவர். அப்போது அவர்கள் தலைவர்களாகவே இருக்க முடியாது.
பெர்ட் தான்: பக்காத்தான் கூட்டரசு அரசாங்கத்தைக் கைப்பற்ற விரும்பினால் அது எல்லா விஷயங்களையும் வேறு வகையாகச் செய்ய வேண்டும். வெளிப்படைத் தன்மை குறித்து உதட்டளவில் மட்டும் பேசிக் கொண்டு சொல்வதை செய்ய முடியாது என்றால் என்னவென்று சொல்வது.
மோஹிகான்: கடந்த காலத்தில் நீங்கள் செல்வத்தைச் சேர்த்திருந்தால் அதனை அறிவித்து விடுங்கள். அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை.
உறவினருக்கு உதவுவதை எதிர்ப்பவன்: நான் காலித் ஆதரவாளன் அல்ல. ஆனால் சொத்துக்களை அறிவிக்கும் விஷயத்தில் நாம் அவர் மீது கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது.
அவர் அரசியல்வாதி அல்ல. அவர் தலைமை நிர்வாகி ஆவார். அவர்
கௌரவமான மனிதர் என நான் எண்ணுகிறேன்.
ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் கருத்துத் தெரிவிக்க உரிமை உண்டு. அவர் தமது கருத்தைச் சொல்கிறார். அவர் செய்வது தவறு நாம் எண்ணும் போது அவரை குறை கூற நமக்கு உரிமை உண்டு. அவர் கடவுள் அல்ல. ஆகவே அவரும் தவறு செய்யலாம்.
அடையாளம் இல்லாதவன்#22175361: நீங்கள் தூய்மையானவராகவும் மக்கள் மதிக்கப்படும் தலைவராகவும் இருந்தால் நீங்கள் செல்வந்தராக இருந்தாலும் மக்கள்
உங்களைத் தூற்ற மாட்டார்கள்.
காலித், உங்கள் உள்ளத்தை பிஎன்/அம்னோ ஒரளவு கெடுத்துள்ளது. மக்கள் உங்கள் மீது ஆத்திரம்டையப் போகிறார்கள். சரியான பாதைக்குத் திரும்புங்கள். அல்லது உடனடியாக ராஜினாமா செய்யுங்கள்.
மாட்ரிக்ஸ்: கலிபோர்னியா ஆளுநராக Arnold Schwarzenegger பொறுப்பேற்ற போது அவர் தமது சொத்துக்களை அறிவித்தார். அவரை உலகம் அறியும். அவரது முகமும் செல்வமும் அனைவருக்கும் தெரியும். இது வரை அவரை யாரும் கடத்தவில்லை. நமது அரசியல்வாதிகள் அவரை விட நிச்சயம் பணக்காரர்களாக
இருக்க முடியாது.