சாபாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதற்குத் திட்டமிட்டு வேலை நடந்துள்ளதாக ஸ்டார் கட்சித் தலைவர் ஜெஃப்ரி கிட்டிங்கான் சாபா மீதான அரச விசாரணை ஆணைய (ஆர்சிஐ) த்திடம் இன்று கூறினார்.
சாபாவுக்குள் அம்னோ நுழைவதற்கு வசதியாக அதை முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக்குவதுதான் அதன் நோக்கமாகும் என்று ஜெஃப்ரி தெரிவித்தார்.
“1963-இல் சாபாவில் மலாய்க்காரர் எண்ணிக்கை 4% அல்லது 5 %தான்.
“அங்கு (முதலமைச்சர் பதவிக்கான) சுழல்முறையை நிறுத்தி சாபாவைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இது ஒன்றே அவர்களுக்கு ஏற்ற வழியாக அமைந்தது”, என்றாரவர்.
ரொம்ப லேட்ட தெரியுது போல
சபாவிற்கு மட்டும் அல்ல மற்ற மாநிலங்கலங்களில் இத நிலை தான்