தாங்கள் bak kut teh சூப் சாப்பிட்ட படத்தை இணையத்தில் சேர்த்த செக்ஸ் வலைப்பதிவாளர்களான முஸ்லிம் அல்லாத ஜோடி மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
முஸ்லிம்களுடைய உணர்வுகளை அல்வின் தான், விவியன் லீ என்ற அந்த ஜோடி மதிக்கவில்லை என்பதை வெளிப்படையாக காட்டியுள்ளதாக பல தரப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.
பின்னர் அந்த ஜோடி மன்னிப்புக் கேட்டுக் கொண்டது யாருடைய காதிலும் விழவில்லை.
சமூக ஊடகங்களில் இஸ்லாத்தை அவமானப்படுத்தும் நடவடிக்கைகள் அதிகரிப்பதாகவும் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஒர் அமைச்சர் கூட தெரிவித்துள்ளார்.
அந்த ஜோடி மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டை சுமத்துவது பற்றிக் கூட இப்போது அதிகாரிகள் யோசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
அந்த இணையப் பதிவு குறித்த ஆத்திரத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அந்தப் பதிவு முற்றிலும் அபத்தமானது. உணர்வுகளைப் பாதிக்கக் கூடியது.
ஒரு சமயத்தை சிறுமைப்படுத்துவதற்கு மன்னிப்பே கிடையாது. மற்றவர்கள் புனிதமாகக் கருதும் விஷயங்களைத் தொடும் போது ஏற்படக் கூடிய பின் விளைவுகளை அந்த ஜோடி உணர்ந்திருக்க வேண்டும்.
ஆனால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஒரே மலேசியாவில் அத்தகைய விஷயங்களில் இரண்டு வகையான அணுகுமுறை பின்பற்றப்படுவதாகத் தோன்றுகிறது.
அதே அதிகாரிகளும் சமயத் தலைவர்களும் இந்து சமயத்தை பெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நோர்டின் தரக்குறைவாகப் பேசிய போதும் தைப்பூசத் திருவிழாவை பல்கலைக்கழக விரிவுரையாளர் ரித்துவான் தீ அப்துல்லா சிறுமைப்படுத்திய போதும் கொஞ்சம் கூட வாயைத் திறக்கவில்லை.
சுல்கிப்லி வீடியோ பதிவு ஒன்றில் கங்கை ஆற்றின் புனிதத் தன்மையை கேலியும் செய்துள்ளார்.
இந்து தெய்வங்களுடைய உருவச் சிலைகளை விற்கும் கடை வெள்ளத்தில் பாதிக்கப்படால் இருப்பதற்கு அந்தத் தெய்வங்கள் உதவவில்லை என்று கூட அவர் சொல்லியிருக்கிறார்.
இஸ்லாத்தை பயங்கரவாதத்துடன் இணைத்து பேசுவதாக சில அமைப்புக்கள் கூறிக் கொண்ட தமிழ்த் திரைப்படம் ஒன்றுக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை ரித்துவான் கண்டித்துள்ளார்.
மலாய் நாளேடு ஒன்றில் வெளியிடப்பட்ட தமது வாதத்தில், இன உறவுகளைப் போதிக்கும் அந்த இணைப் பேராசிரியரான அவர் பத்துமலையில் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவையும் இழிவுபடுத்தியுள்ளார்.
2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இந்துக் கோவில்களும் சிலைகளும் கூடி விட்டதாகவும் அவர் புகார் செய்துள்ளார்.
சுல்கிப்லி, ரித்துவான் ஆகியோர் மீது தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுவது உட்பட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் அந்தக் குரல்களுக்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை.
இந்துக்களைப் பொறுத்த வரையில் மன்னிப்புக் கேட்டால் போதுமா ?
‘அல்லாஹ்’ என்னும் சொல்லைக் கொண்ட மலாய் பைபிள்களுக்கு எரியூட்டப் போவதாக பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி விடுத்த அறிக்கையை என்னவென்று சொல்வது ?
அவரைத் தற்காத்துப் பேசிய பெர்க்காசா புரவலர் டாக்டர் மகாதீர் முகமட். தடை செய்யப்பட்ட வெளியீடுகளை எரிப்பது சாதாரணமான விஷயம் எனச் சொன்னார்.
இப்ராஹிம் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என மீண்டும் வழக்கம் போல கிறிஸ்துவத் தலைவர்கள் தேவாலயத் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் இப்ராஹிம் தொடர்ந்து சுதந்தரமாக நடமாடி வருகிறார்.
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல ஒரே மலேசியா சுலோகத்தை முன்மொழிந்த நஜிப், கடந்த தேர்தலில் ஷா அலாம் நாடாளுமன்றத் தொகுதியில் சுல்கிப்லி பிஎன் வேட்பாளர் என அறிவித்தார்.
இனவாத, சமய உணர்வுகளைத் தூண்டும் பெர்க்காசா அமைப்பின் உதவித் தலைவராகவும் சுல்கிப்லி இருந்து வருகிறார்.
தேர்தலில் அவர் நிறுத்தப்பட்டதை ஆதரித்த துணைப் பிரதமர் முஹைடின் யாசின், சுல்கிப்லி ஆற்றல் மிக்க மனிதர் எனக் குறிப்பிட்டார்.
சுல்கிப்லி தமது தவறை ஒப்புக் கொண்டு இந்து சமயத்தை இழிவுபடுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் மக்களுக்கு முஹைடின் நினைவுபடுத்தியுள்ளார்.
ஆகவே மன்னிப்புக் கேட்டுக் கொள்வது மட்டும் அவமானப்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு போதுமானது.
இன, சமய உறவுகளை பாதிக்கும் விஷயங்களுக்கு பேச்சுச் சுதந்திரத்தை ஒரு கேடயமாக பயன்படுத்தக் கூடாது என்பதால் அல்வின் தான், விவியன் லீ ஆகியோரது நடவடிக்கைகளில் நியாயமே இல்லை.
அதே விதி முறை மற்றவர்களுடைய சமயங்களையும் நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தும் முஸ்லிம்களுக்கும் அமலாக்கப்பட்ட வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் சமயத் தகராறுகள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் ஒரே அணுகுமுறை
ஒரே மலேசியாவுக்கு தேவைப்படுகின்றது.
அது இல்லை என்றால் ஒரே மலேசியா, நாட்டை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஆழமில்லாத, மேலோட்டமான, தந்திரமான, வஞ்சகமான சுலோகம் எனக் கருதப்படும்.
—————————————————————————————————- ஆர். கே. ஆனந்த் மலேசியாகினி குழுவில் ஒர் உறுப்பினர்
இஸ்லாமியர்கள் இந்து மதத்தை எப்படி கேவல படுத்தினாலும் எந்த இந்தியனும் கேள்வி கேட்க முடியாது . அப்படியே கேள்வி கேட்டாலும் பதில் வராது .பிறர் அவர்கள் மதத்தை இழிவு படுத்தினால் உலகமே திரண்டு வரும் . இது இந்த உரில் மட்டும் அல்ல . தமிழ் நாட்டிலும் தான். தமிழர்களின் கடைகளுக்கு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் சாம்பிராணி கட்டுவது போல நாம்மும் அவர்கள் விட்டுக்கு சாம்பிராணி காட்ட முடியுமா ? இதை நாமும் உணர வேண்டும் . ஒரு முஸ்லிம் தனது மதத்தை மாற்றிகொல்லவே மாட்டான் .ஆனால் நாமோ காதளுக்ககவும் வேலைக்கவும் நமது அடையாளத்தையே மாற்றிகொள்கிறோம் .
தனக்கு என்று வரும்போது _ டுக்கு கூட ஆடுமாமே…அது இதுதானோ
அதிகாரத்தை வைத்து தான் சொல்வது.செய்வது நியாயம் மற்றவர்கள் கூறுவது தவறு என மக்களை ஏமாற்றும் காலம் முடிந்து விட்டது.நியாயம் என்றும் சாகாது.ஏற்புடைய காலத்தில் யாராக இருந்தாலும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.இது காலத்தின் கட்டாயம்.
முன்பு ISA சட்டம் இருக்கையில் நாட்டில் எந்த குழப்பமும் இல்லை, தற்பொழுது அந்த சட்டம் இல்லை பல குழப்பங்கள் நடக்கிறது, இப்போது அந்த சட்டம் தேவை என்பது போல் தோன்றுகிறது. திரும்பவும் நட முறை படுத்தினால் நாடு அமைதியாகவும் சுபிட்சமாகவும் இருக்கும்.
நமது மொழி நமது மதம் அருமை பெருமைகளை வளரும் பிள்ளைகளிடம் உணரவைகவேண்டும் .நமது மொழியை இரவலாக பயன்படுதும் ஏனையவர்களை பற்றி கவலைபடவேண்டாம்
நாம் தெய்வமாக வழிப்படும் மாட்டை வெட்டும் படங்கள் இணையத்தளத்தில் எவ்வளவோ உள்ளது. அது மட்டும் நியாயமானதா?பார்க்கப்போனால் நாம்தான் கோபப்பட வேண்டும். முஸ்லீம் உணர்வுகளை மதிக்க வில்லை என்று குற்றம் சாட்டியவர்கள் நமது உணர்வுகளை மதித்தார்களா?
மதம் என்பது மனிதனுக்காகத்தானே தவிர மதத்திற்காக மனிதனல்ல என்பதை மனிதர்கள் புரிந்துகொண்டால் நல்லது. மதம் ஒன்றும் விவாதத்திற்கு அப்பாற்பட்டதல்ல. விவாதத்திற்குள் வரமுடியாத ஒன்றை மனிதன் கட்டிக்கொண்டு அழவேண்டும் என்று தலைவிதியா என்ன? இன்று மதம் என்பது மனிதனை வளப்படுத்தவும் பலப்படுத்துவதற்கும் பதிலாக , பவீனப்படுத்தவும், மனிதர்களை அரசியல் ஆதாயத்திற்காக பிளவுபடுத்திவைக்கவும் கீழ்த்தரமான மனிதர்களால் திட்டமிட்டு தவறாகக் கையாளப்படுகிறது. அந்தக்காலத்திலிருந்து இந்தக்காலம் வரை எளிய மக்களைப் பந்தாடவே மதத்தை பெரிய மனிதர்களின் போர்வையில் சிறைய மனிதர்கள் கையாளுகிறார்கள். அதனைத்தான் ஆளுக்கொரு சட்டம், ஆளுக்கொரு நியாயம் என்று கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார்கள்!
“ஒரு முஸ்லிம் தனது மதத்தை மாற்றிக் கொள்ளவே மாட்டான்” என்று சொல்லுவது தவறு, நண்பரே! மதம் விட்டு மதம் மாறுவது உலகம் எங்கும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்குத் தடை போட முடியாது! இந்த நாட்டில் அதற்கு சட்டம் போட்டு கட்டம் கட்டி வைத்திருக்கிறார்கள். அவ்வளவு தான்! அப்படி ஒரு சட்டம் இல்லையென்றால் இந்நாடு ஒரு இஸ்லாமிய நாடாக இருக்காது! ஏற்கனவே மதம் மாறிய முஸ்லிம்கள் இப்போதும் நம்மிடையே இருக்கத் தானே செய்கிறார்கள்!
எந்தச் சமையத்தைச் சேர்ந்த மனிதனாக இருந்தாலும் சரி,தீவிரவாத எண்ணம் கொண்டவன் மனிதனில்லை.மனிதன் மிதவாத கொள்கையுடையவனாக இருந்தால் மதம் பிடித்த எண்ணங்கள் தோன்றது.நான்,இறை பக்தன் என்று சொல்பவன் பிற சமையங்களின் கலை கலாசாரங்களை இழிவாகப்பேசமாட்டான்.