ஜஹிட் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது உரிமைக்குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும்

1 mpஉள்துறை அமைச்சர் ஜஹிட் ஹமிடி, போலீஸ்மீதான புகார்களையும் அவர்களின் தப்பான நடத்தையையும் விசாரிக்கும் சுயேச்சை குழு (IPCMC) தொடர்பில் அளித்த பதிலுக்காக மக்களவையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் அவரை நாடாளுமன்ற உரிமை மற்றும் சலுகைகள் குழு முன் நிறுத்த வேண்டுமென்று கோரப்போவதாக ஒரு டிஏபி எம்பி கூறினார்.

IPCMC அரசமைப்புக்கு விரோதமானது என்பதால் அதை அமைக்க முடியாது என்று ஜஹிட் கூறியது “தப்பான கருத்து” என்று தைப்பிங் எம்பி இங்கா கொர் மிங் குறிப்பிட்டார்.