பொதுநலவாய நாடுகள் மாநாட்டின் பின்னர் பொலிஸ், காணி அதிகாரங்கள் ரத்து

mahinda_commonweath_001பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டின் பின்னர் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் ரத்து செய்யப்பட உள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டின் பின்னர் 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடான பொலிஸ், காவல்துறை அதிகாரங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக அரசாங்க உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

காணி, காவல்துறை அதிகாரங்கள் ரத்து செய்வது குறித்த யோசனைத் திட்டம் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டைத் தொடர்ந்து உடனடியாக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இதேவேளை, வட மாகாணசபையில் ஆட்சியை நிறுவி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஊடாக காணி, பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் அவசியமானவை புலம்பெயர் புலி ஆதரவு ஐரோப்பிய வானொலிச் சேவையொன்றுக்கு விக்னேஸ்வரன் செவ்வியளித்துள்ளதாக சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

TAGS: