சிறை வைக்கப்பட்டுள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி உதயகுமாருக்கு ஏற்பட்டுள்ள கடுமையான முதுகுவலியைக் குறைப்பதற்குத் தேவைப்படும் பொருட்களை சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
என்றாலும் அவர் மேலும் புகார் செய்தால் ‘இருட்டு அறையில்’ வைக்கப்
போவதாக அவர்கள் மருட்டியுள்ளதாக உதயாவின் மனைவி எஸ் இந்திரா தேவி கூறினார்.
“அவருக்குக் கடந்த வியாழக்கிழமை ஒரு தலையணை கொடுக்கப்பட்டது. திங்கட்கிழமை நாற்காலி தரப்பட்டது.”
“ஆனால் அவர் மேலும் புகார் செய்தால் இருட்டறையில் அவரை வைப்பதோடு தொலைபேசி உரிமைகளையும் பறித்துக் கொள்ளப் போவதாக அவர்கள் கூறினர்,” என மலேசியாகினி தொடர்பு கொண்ட போது அவர் சொன்னார்.
காஜாங் சிறைச்சாலையில் வைக்கப்ப்பட்டுள்ள தமது கணவரை ஒவ்வொரு புதன்கிழமையும் 15 நிமிடங்களுக்குச் சந்தித்துப் பேச இந்திரா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே.. ஆப்பு வைப்பதில் நஷ்ட்டம் என்னடா செனட்டர் நாற்காலி கிடைக்கயிலே..
தன்னலமா பொதுநலமா? இந்தியர் உரிமையை மீட்டெடுப்போம் எனும் போர்வையில் உங்களை ஏணியாகப் பயன்படுத்திக்கொண்ட ஒவ்வொருவரும் எங்கோ இருக்க நீங்கள் மட்டும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளீர்கள்! உங்கள் பின்னால் நின்றவர்களும், ஏன் … ஒட்டுமொத்த இந்த இந்தியச் சமுதாயமும் உங்களை கைவிட்டுவிட்டதே! (ஹிண்டிராப்))இன் போராட்டம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதே!
ஒன்னும் வருத்தபடாதிங்க சார் ! விடுதலையான பிறகு ,ஏதாவது ஒரு முனிஸ்வரன் கோவிலோ அல்லது உங்க தம்பிக்கு பிடித்த காளி கோவில்லோ விரதம் இருங்கள் ,நஜிப் உங்களை அனைத்துக்கொல்வார் !
இவரை ஏளனம் செய்வது சரியானது அல்ல.. மிக கொடுமையான சட்டத்தின் கீழ், இவர் சிறை தண்டனை அனுபவித்து வந்தவர். மிக உறுதியான மனிதர். அந்த சிறை வாழ்க்கைக்கு பின் அவரின் அரசியல் பாதையில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்… குழப்பம் அடைந்திருக்கலாம், அனால் அவரின் மனவுறுதியினை பாராட்டவே வேண்டும்… இந்த நாட்டில் இந்தியர்கள் முதுகெலும்பு இல்லாமல் வாழ்கிறார்கள் என்று அறிந்து, சொல்லியவர்.
‘ஆனொனிமௌச்’ யாரை நம்புவது வேதாவே ஒரு உதாரணம் …….சுருக்கமான கருத்து …மூளை உள்ளவர்க்கு புரியும்
இந்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு முகவரியை தந்த ஒரு நல்ல மனிதர் இன்று மறக்கப்படுகின்றார்.வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதைபோல் இவர் வளர்த்த,இவரால் வளர்ந்த இண்ட்ராப் இயக்கம் இவருக்கு எதிரானது. இவரின் இன்றைய நிலை ஒட்டு மொத்த இந்தியர்களின் இயலாமையையே காட்டுகின்றது.
ஆமாம் , சமுதாயத்துக்கு குரல் கொடுத்தவர்
நமக்காக போரட்ட வாதி
மாமனிதர் ..!
இந்தியர்களே ஒரு கணம் யோசித்து பாருங்கள் அன்று அவர் இல்லை என்றால் இந்த மாற்றம் இல்லை,தவறு செய்வது இயல்பு,அதை மன்னிக்க பக்குவம் நமக்கு இருக்கிறது,மறப்போம் மன்னிப்போம் அவர் விடுதலையாக வேண்டும் என்று கோரிக்கை வைப்போம்.
பக்கத்துக்கு வீட்டில் திருடு போனால் என்ன என்று நாம் இருக்க கூடாது,நம்மால் என்ன செய்ய முடியும் அண்டை வீட்டுகாரருக்கு என்று யோசிக்க வேண்டும்.
தன்வினை தன்னைசுடும் போலிக்கும் அசலுக்கும் உள்ள வேறுபாடு . இப்படி நிறைய சொல்லலாம் ,நான் என்ற ஆணவம் எல்லாம் நான் என்ற அகங்காரம், கிடைத்த, பரிசு ….இது …இருவர் நடத்திய நாடகம் பகுதி ஒன்று ..இன்னும் தொடரும் …
மக்கள் இவர்கள் செய்த அந்த நன்றியினை இன்னும் மறக்கவில்லை ,ஆனால் இவர்கள் அன்று செய்த சேவை ஒரு புண்ணியமாக இருந்தது, காலப்போக்கில் அண்ணனுக்கு பதவி ஆசையும், தம்பிக்கு பண ஆசையும் வந்து வாட்டிவிட்டது போங்கள், இவர்கள் இருவரும் NGO-வாக இருந்து இருந்தால் இன்று இவர்களுக்கு சிலை எழுப்பிருப்பார்கள் தமிழர்கள்…இனியும் இவர்களை நம்பி பின்னால் போனால் கட்டி இருக்கும் கோவணத்தை கூட உருவி விடுவார்கள், டப்பா டான்ஸ் ஆடிடும்…
இருட்டறை உமக்கு ஒன்றும் புதுமையல்ல ! நேரு முதல் காந்தி வரை கண்டதுதான் அந்த இருட்டறை ! தென்னாட்டு முடிசூடா மைனர் அறிஞர் அண்ணாவும் , கறுப்பின காந்தரூபன் மண்டேலாவும் புரண்டது அந்த இருட்டறைதான். புலியின் குகையினிலே அழகில்லை , புதுமை அல்ல பிடரி சிலிர்க்கும் கிலியும் கீழிறங்கும் தன்மை தலைகாட்டா , தமிழன் மானம் காக்க புறபட்ட மறத்தமிழன் என்று உன் பேர் சொல்லும் – எதிர் காலம் !!!