இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்காது

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்காது என ஐரோப்பிய ஒன்றிய நடாளுமன்ற உறுப்பினர் போல் மார்பி தெரிவித்துள்ளார்.

நீதியையும் உண்மையையும் நிலைநாட்டுவதன் மூலம் மட்டுமே நல்லிணக்கத்தை எட்ட முடியும் என மற்றுமொரு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் ராவுல் ரொமேவா ருயுடா தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களை மூடி மறைப்பதன் மூலம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சாத்தியமில்லை என சானல்4 ஆவணப்படத்தின் இயக்குனர் கெலம் மெக்யார் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக அனர்த்தக்குழு, அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட நிறுவனங்கள் கூட்டாக இணைந்து ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றில் சானல் 4 ஆவணப்படத்தை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.

சானல் 4 ஆவணப்படம் காட்சிப்படுத்துவதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தக் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.