தண்டா புத்ரா திரைப்படம் இன்று சினிமா அரங்குகளில் திரையிடப்படுகின்றது.
அதனை குறை கூறுகின்றவர்கள் தங்கள் ‘அச்சத்தை’ புதைத்து விட்டு அந்த படத்தை பார்க்க வேண்டும் என அதன் தயாரிப்பாளரான பெசோனா பிக்சர்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
“சிலர் அந்தத் திரைப்படத்தை தங்கள் எதிரிகளாக கருதிக் கொண்டு அது பற்றி முடிவு செய்து தண்டா புத்ரா என்ற தலைப்பு மீது அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். சிலர் எங்களை மிரட்டியுள்ளனர். சிலர் எங்கள் அலுவலகத்துக்கு எரியூட்டப் போவதாகவும் சூளுரைத்துள்ளனர். சிலர் நாங்கள் நரகத்துக்கு
போவோம் எனக் கூறியுள்ளனர்.”
“நீங்கள் அனைவரும் அந்தத் திரைப்படத்தை பார்ப்பீர்கள் என நாங்கள்
நம்புகிறோம். அதனைக் காணும் முன்னர் ஏற்படுத்திக் கொண்ட எந்த எண்ணமும் உங்கள் மனதிலிருந்து மறைய அது உதவும்,” என முகநூல் பதிவில் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.