குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் “கேங் 36” ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் பிஎன் தலைவர்கள் மூவர் கலந்துகொண்டதாகக் கூறும் அனாமதேய கடிதம் குறித்து ஒரு என்ஜிஓ போலீசில் புகார் செய்துள்ளது.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எழுதப்பட்ட அக்கடிதத்தை முகநூலில் கண்டெடுத்ததாகக் கூறிய தமிழர் நடவடிக்கைப் படையின் செயல்குழு உறுப்பினர் எஸ்.முரளி, “கேங் 36” ஒரு சட்டவிரோத அமைப்பு என்பதால் அதில் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டது ஏன் என்று விசாரித்தறிய வேண்டும் எனப் போலீசைக் கேட்டுக்கொண்டார்.
அந்நிகழ்வு 2011 டிசம்பர் 3-இல், ஸ்ரீகெம்பாங்கானில் உள்ள த மைன்ஸில் நடைபெற்றதாக ஊடகங்களிடம் முரளி விநியோகம் செய்த அக்கடிதம் குறிப்பிட்டது.
மஇகா உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகள் கலந்து கொண்டதாகக் கூறப்படும் அந்த குண்டர் கும்பலின் விருந்து நிகழ்வு தொடர்பில் கெப்போங் அம்னோ தலைவர் அப்போதை நஜிப்புக்கு கடிதம் எழுதியதாகவும் இணைய ஊடகத்தில் படித்தேன். ஆனால் குண்டர் கும்பலில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பில்லை என்று அரசாங்கம் கூறுவதைக் கேட்க வேடிக்கையாக இருக்கிறது. முரளி மீது எனக்கு அதிருப்தி இருந்தாலும் இந்த விஷயத்தை அம்பலப்படுத்தியதற்கு அவருக்கு நன்றி
L E D வெளிச்சம் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த முரளியே ஒரு முள்ளமாரி முடிச்சவுக்கி. இவன் கேங் பத்தி பேசறான். இவன் ஜெராய் செக்யூரிட்டி கேங் பத்தி போலீஸ் விசாரிக்கணும். ப்ளீஸ் விசிட் http://murali-subramaniam.blogspot.com/ அண்ட் http://www.youtube.com/watch?v=vyW6nJypwpE for further details. Thanks.
தூய்மையான அரசாங்கம் நடவடிக்கையிலும் அப்படியே இருக்க வேண்டும்.மக்களை முட்டாளாக்க வேண்டாம்.எல்லோரும் விழித்து கொண்டுள்ளார்கள்.
அரசியல் தலைகள் கலந்து கொண்டாலும் அதற்கென்று ஒரு கதை வைத்திருப்பார்கள்.தற்சமயம் எதிலும் கலந்து கொள்ளாமல் நல்ல பிள்ளைகள் போல் இருந்து கொண்டும் இருப்பார்கள்.
போலீசுக்கு(மேலதிகாரிக்கு) அனைத்தும் தெரியும்.இது எங்கள் கருத்து.உள்துறை அமைச்சு நிறைவான திட்டங்களை பிறப்பிக்க வேண்டும். நாடக சீரியல் காட்டக்கூடாது.மக்கள் சந்தோசத்துடன் நீண்ட நாள் பார்த்துக்கொண்டே இருக்கவும் மாட்டார்கள்.
குண்டர் கும்பல் துணையுடன் தான் அரசியலே நடை பெறுகிறது! போலிசார் அரசியல் தலைவர்களை விட்டு வைத்தால் குண்டர் கும்பலை ஒழிக்க முடியாது!
என்னவோ ஒன்னும் புரியல சார்!
இது யார் செய்த சதியோ?