சீனத் தூதர் விவகாரத்தில் தலையிட்ட அமைச்சர்களை அனிபா கடிந்து கொண்டார்

anifபெட்டாலிங்  ஸ்திரீட்டுக்கு  வருகை   மேற்கொண்டபோது  தெரிவித்த  கருத்துகள் தொடர்பில்  சீனத்  தூதரிடம்  தாம்  விளக்கம்  கேட்டது  உண்மையே  என்பதை வெளியுறவு  அமைச்சர்  அனிபா  அமான் உறுதிப்படுத்தினார்.

ஆனால்,  அமைச்சர்கள்  சிலர்  அவருடன்  ஆலோசனை  கலக்காமலேயே  அவ்விவகாரத்தில் மூக்கை  நுழைத்ததுதான்  அனிபாவுக்கு  வருத்தமளிக்கிறது.

தூதர்  ஹுவாங்  ஹுய்காங்கை  விளக்கம்  கேட்க  அழைக்க  வேண்டும்  என்ற  உத்தரவில்  எந்த  மாற்றமும்  செய்யப்படவில்லை  என  இன்று  நியூ  யோர்கில்  வெளியிட்ட  அறிக்கை  ஒன்றில்  வெளியுறவு  அமைச்சர்  கூறியிருந்தார்.

இந்த  விவகாரம்  அமைச்சர்கள்  நிலைக்குக்  கொண்டு  செல்லப்பட்டிருக்க  வேண்டிய அவசியமே  இல்லை.  இது  போன்ற  விவகாரங்களுக்கு  விஸ்மா  புத்ராவின்  மூத்த  அதிகாரிகளே  தீர்வு  காண்பதுதான்  வழக்கமான  நடைமுறையாகும்.

“சொல்லப்போனால், எளிதாக  தீர்க்கப்பட்டிருக்க  வேண்டிய  விவகாரம்  இது.  அமைச்சர்கள்  தலையிட  வேண்டிய  அவசியமே  இல்லை.

“அவர்களின்  தலையீடு பொது  மக்களிடம்  ஓர்  எதிர்மறையான  எண்ணம்  உருவாக  காரணமாகி  விட்டது. இனி  வரும்  காலங்களில் இப்படிப்பட்ட  சம்பவங்கள்  நிகழக்கூடாது”, என  அனிபா  அறிக்கையில்  குரிப்பிட்டார்.