தேச நிந்தனைக் குற்றச்சாட்டுக்கு எதிராக விசாரணை கோரினார் பிஎஸ்எம் அருள்

aruபிஎஸ்எம்  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  எஸ். அருட்செல்வன்  அவருக்கு  எதிரான  தேச  நிந்தனைக்  குற்றச்சாட்டை  மறுத்து  விசாரணை  கோரினார்.

பிப்ரவரி  10-இல்  முகநூலில்  நிந்தனைக்குரிய பதிவை  இட்டிருந்தார்  என  அவர்மீது  1948  தேச  நிந்தனைச்  சட்டம்  பகுதி 4(1) (சி)-இன்கீழ்  குற்றம்  சுமத்தப்பட்டது.

அருள் அவரது  பதிவில்  அப்போது  எதிரணித்  தலைவராக  இருந்த  அன்வார்  இப்ராகிமுக்கு  இரண்டாவது  குதப்புணர்ச்சி  வழக்கில்   முறையீட்டு  நீதிமன்றம்   அளித்த  தீர்ப்பைக்   குறைகூறியதுடன்  நீதிமன்றங்கள்  தனித்து இயங்கவில்லை  என்றும்  அரசியல் சார்புடன்  செயல்படுவதாகவும்  கூறியிருந்தாராம்.

இவ்வாறு  கருத்துரைத்ததற்காக  இணைய  வசதியைத் தவறாக  பயன்படுத்தினார்  என  தொடர்பு, பல்லூடகச்  சட்டம்  பகுதி  233(1) (ஏ)-இன்கீழ்  மாற்றுக்  குற்றச்சாட்டு  ஒன்றையும் அருள்  எதிர்நோக்கியுள்ளார்.

கோலாலும்பூர்  செஷன்ஸ்  நீதிமன்ற  நீதிபதி  அமிர்நுடின்  அஹ்மட்  ரிம5,000 பிணையிலும்  ஒருவரின்  உத்தரவாதத்திலும்  அருளை  விடுவித்தார்.