முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் குறித்த போராளி நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த பகுதியை வசிப்பிடமாக கொண்ட முன்னாள் போராளியான கோபு என அழைக்கப்படும் இலங்கராசா இளங்கோவன் என்ற 28 வயதுடையவர் என அடையாளங்காணப்பட்டுள்ளது.
https://youtu.be/o3hFX2syY74?list=PLXDiYKtPlR7MUfQgCe4iuA24CR5cEhbK6
இதேவேளை பதில் நீதவான் சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை பிரேதபரிசோதனைக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லுமாறும்உத்தரவிட்டார்.
இன்று பிற்பகல் வேளையில் சடலம் வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்பட்டது.
அத்துடன் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம்சடலத்தை பார்வையிட்டதுடன் கிராம மக்களுடனும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஈச்சங்குள பொலிசார் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்றகோணத்தில். புலன் விசாரணைகளை மனைவியுடனும் உறவினர்களிடமும் மேற்கொண்டுவருகின்றனர்.
-http://www.tamilwin.com


























