“சர்வாதிகார” நாடு ஸ்பெயின் – பூஜ்டிமோன்

தேச துரோகம் இழைத்ததாகவும், கலகம் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட கேட்டலோனிய பிரதேச முன்னாள் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன், தனது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

பெரும் “சர்வாதிகார” முறையில் ஸ்பெயின் நடந்து கொள்வதாகவும் பூஜ்டிமோன் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.

ஐரோப்பிய கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட அவர், முதல் முறையாக பேசியுள்ளார்.

பூஜ்டிமோனை விடுவிக்கக் கோரி பெர்லினில் அவரது ஆதரவாளர்கள் போராடி வருகின்றனர். -BBC_Tamil

TAGS: