கால்பந்து உலககோப்பை இன்று தொடக்கம்

2018 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் உள்ள லூஸ்நிக்கி மைதானத்தில் நடக்கும் தொடர்ந்து முதல் போட்டியில் ரஷ்யாவுடன் செளதி அரேபியா மோதுகிறது.

இன்று தொடங்கும் கால்பந்து திருவிழாவில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி உள்பட 32 நாடுகள் பங்கேற்கின்றன. 32 நாட்களுக்கு மேல் நடக்கவுள்ள இந்த தொடரில், 64 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த போட்டிகள் ரஷ்யாவில் 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் நடக்கவுள்ளது. -BBC_Tamil

TAGS: