“பயணிகளுக்கு அதிகமான தேர்வுகளை வழங்குவதோடு, விமானக் கட்டணங்கள் நியாயமான அளவில் இருப்பதையும் உறுதி செய்வதே AirBorneo-வின் நோக்கம் என்று சரவாக் முதல்வர் தெரிவித்தார்.”
ஏர்போர்னியோ (AirBorneo) திங்கள்கிழமை குச்சிங்கில் இருந்து கோலாலம்பூருக்கான தனது முதல் தொடக்க விமான சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த வழித்தடத்திற்கான விமானக் கட்டணம் ரிம 375 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சரவாக் முதல்வர் அபாங் ஜோஹாரி ஓபெங் கூறுகையில், AirBorneo அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள ரிம 375 என்ற மலிவு கட்டண முறை, போட்டியில் நிலைத்திருக்க மற்ற விமான நிறுவனங்களையும் தங்களது விமானக் கட்டணங்களை குறைக்கத் தூண்டியுள்ளது.
DayakDaily வெளியிட்ட செய்தியின்படி, சரவாக்கின் சொந்த விமான சேவையை அறிமுகப்படுத்தியதன் நோக்கம், பயணிகளுக்கு அதிகமான தேர்வுகளை வழங்குவதோடு, குறிப்பாக பண்டிகைக் காலங்கள் மற்றும் பள்ளி விடுமுறை போன்ற உச்சப் பயண காலங்களில் அதிகரித்து வரும் விமானக் கட்டணப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகும்.
சிபுவில் நடைபெற்ற PBB நிகழ்ச்சியில் பேசிய அவர்,
“கூச்சிங்கிலிருந்து கோலாலம்பூருக்கு ரிம 375 கட்டணத்தை அறிமுகப்படுத்தியபோது, AirAsia மற்றும் Malaysia Airlines நிறுவனங்களும் தங்களது கட்டணங்களைக் குறைத்தன,” என்று கூறினார்.
திங்கட்கிழமை கூச்சிங்கிலிருந்து கோலாலம்பூருக்கு தனது முதல் விமானச் சேவையைத் தொடங்கிய AirBorneo, பயணிகளுக்கு அதிகமான விருப்பங்களையும், நியாயமான விமானக் கட்டணங்களையும் வழங்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பண்டிகைக் காலங்கள் போன்ற உச்சப் பயண நேரங்களில் அதிகரிக்கும் விமானக் கட்டணங்களால் சரவாக் மக்களுக்கு நீண்ட காலமாக சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக குடும்பமாகப் பயணம் செய்பவர்களுக்கு அதிக கட்டணம் பெரிய பொருளாதாரச் சுமையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
“அதனால்தான் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று நான் உறுதியாக முடிவு செய்தேன். அதற்காகத்தான் சரவாக்குக்குச் சொந்தமான AirBorneo உருவாக்கப்பட்டது,” என்றார்.
“குறைந்தபட்சம், எந்த விமான நிறுவனம் அல்லது எந்த விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம். ஆனால் விமானக் கட்டணம் நியாயமானதாக இருக்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
























