மாநிலத் தேர்தலில் கட்சியின் தோல்வியைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலான் டிஏபி தலைவர் பதவியிலிருந்து லோக் சியூ பூக் உடனடியாக விலக வேண்டிய அவசியமில்லை என்று சாவ் கோன் இயாவ் தெரிவித்துள்ளார்.
டிஏபி மத்திய செயற்குழு உறுப்பினரான சாவ், இன்றைய பின்னடைவைத் தொடர்ந்து லோக் முதலில் கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
உடனடியாக (பதவி விலகல் குறித்து) பரிசீலிக்க வேண்டிய அவசியமில்லை. எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன், சில நாட்கள் நிலைமை சுமுகமாகட்டும், என்று ஜார்ஜ் டவுன் விழாவின் தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
சென்னா தொகுதியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகுவது குறித்து பரிசீலிக்கப் போவதாக டிஏபி பொதுச் செயலாளருமான லோக் தெரிவித்துள்ளார்.
சென்னா தொகுதி பல்வேறு இன மக்கள் வாழும் ஒரு கலப்புத் தொகுதி என்பதால், அதனைத் தக்கவைத்துக் கொள்வது கடினமான ஒன்றாக இருந்தது என்று சாவ் கூறினார்.
பாரிசான் நேஷனல் கூட்டணி, பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியுடன் உடன்பாடு காண எடுத்த முடிவும் மற்றொரு காரணியாகும். இது பிஎன் வேட்பாளருக்கு பிஎன் ஆதரவாளர்கள் ஆதரவளிக்க வழிவகுத்தது என்று அவர் கூறினார்.
தேர்தல் பிரச்சாரம் இனம் மற்றும் மத ரீதியான போக்கை எடுத்ததால், லோக்கிற்கு இந்த போட்டி இன்னும் சவாலானதாக மாறியது என்றும் சாவ் குறிப்பிட்டார்.
அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, சென்னா தொகுதியில் MCA வேட்பாளர் சியாவ் காங் சூனிடம் 688 வாக்குகள் வித்தியாசத்தில் லோக் தோல்வியடைந்தார். சியாவ் 5,726 வாக்குகளைப் பெற்ற வேளையில், லோக் 5,038 வாக்குகளைப் பெற்றார்.
-fmt
























