சந்தேக நபர்களில் ஒரு மலேசியர் மற்றும் 22 முதல் 38 வயதுக்குட்பட்ட மூன்று ரோஹிங்கியா நாட்டினர் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொலை வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில், சந்தேக நபர்கள் செப்டம்பர் 25 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கிளந்தான் காவல்துறைத் தலைவர் யூசோப் மாமத் தெரிவித்தார்.
கோத்தா பாரூ, கிளந்தானில் உள்ள தாமான் டேசா குஜிட்டில்(Taman Desa Kujid) உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு ரோஹிங்கியா சிறுவன் ஒருவன் படுகொலை செய்யப்பட்டான். அவனது கழுத்தில் குத்து மற்றும் வெட்டுக்காயங்கள் இருந்ததை காவல்துறை கண்டறிந்தது.
இன்று அதிகாலை 12.12 மணிக்கு இந்த கொலை குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் கிளந்தான் மாநில காவல்துறைத் தலைவர் யுசோஃப் மாமத் தெரிவித்தார்.
“அதைத் தொடர்ந்து அதிகாரிகள் தாமான் டேசா குஜிட்டில் உள்ள எண்ணிடப்படாத ஒரு வீட்டைச் சோதனையிட்டனர். அதில் 22 முதல் 38 வயதுக்குட்பட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்,” என்று கூறிய அவர், நான்கு கைபேசிகளும் ஒரு பிக்கப் டிரக் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
சந்தேக நபர்களில் ஒருவர் மலேசியர் என்றும், மற்றவர்கள் ரோஹிங்கியா நாட்டவர்கள் என்றும் அவர் கூறினார். அவர்கள் யாருக்கும் எந்தவொரு குற்றப் பின்னணியும் இல்லை.
கொலை வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் செப்டம்பர் 25 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
























