ஐ.நா. தீர்மானம் குறித்து இலங்கை அரசு காட்டம்

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பிரச்னை அடிப்படையில் இல்லாமல், சில நாடுகளுக்கிடையிலான முக்கியத்துவம் வாய்ந்த உறவுகள் மற்றும் உள்நாட்டு அரசியல் பிரச்னைகள் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளது என இலங்கையின் தாற்காலிக வெளியுறவு அமைச்சர் டியு குணசேகர தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை…

மனித உரிமை ஆர்வலர்களின் கைகால்களை உடைப்பேன்: இலங்கை அமைச்சர்

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களின் கைகால்களை உடைப்பேன் என்று மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மெர்வின் சில்வா தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது. இலங்கைக்கு எதிரான ஐநா மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்திற்கு ஆதரவாக குரல்கொடுக்கும் மனித உரிமை…

கேபி கூறியும் பிரபாகரன் சரணடையவில்லை என்கிறார் கோத்தபாய

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சரணடையுமாறு அப்போது புலிகளின் முன்னாள் அனைத்துலகப் பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் கோரியிருந்தார் என சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளர். பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் கூறியதாக ஆங்கில ஊடகம்…