கேபி கூறியும் பிரபாகரன் சரணடையவில்லை என்கிறார் கோத்தபாய

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சரணடையுமாறு அப்போது புலிகளின் முன்னாள் அனைத்துலகப் பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் கோரியிருந்தார் என சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளர்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் கூறியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின்போது இலங்கை இராணுவத்தினரிடம் சரணடையுமாறு பிரபாகரனிடம், கே.பி கோரியிருந்தார். எனினும் அந்தக் கோரிக்கையை பிரபாகரன் ஏற்றுக்கொள்ளவில்லை” என கோத்தபாய கூறுகிறார்.

விடுதலைப்புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளராக இருந்த கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தற்போது இலங்கை அரசிடம் சரணடைந்து அவர்களின் கட்டுபாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: