இதுதான் வரலாற்று பாடநூல் எழுதும் இலட்சனமா?

-ஜீவி காத்தையா, மார்ச் 18, 2015. தற்போதைய ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பயன்படுத்தும் 2014 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வரலாற்று பாட நூலில் தவறான மற்றும் ஒருதலைப்பட்சமான தகவல் அளிக்கப்பட்டிருப்பதாக முனைவர் ரஞ்ஜிட் சிங் மாலீ கூறுகிறார். த ஸ்டார் நாளிதழ் வெளியிட்டுள்ள அவரது கடிதத்தில் ( The…

இன்று சுதந்திர தகவல் தினம் – மலேசியாவில் இரண்டு மாநிலங்களில்…

மார்ச் 16 ஆம் தேதி உலக சுதந்திர தகவல் தினம் ஆகும். இதுவே அமெரிக்காவின் நான்காவது அதிபர் ஜேம்ஸ் மாடிசன் பிறந்தநாளுமாகும்.  ஜேம்ஸ் மாடிசன் (James madison) 1809 முதல் 1817 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தார்.  அமெரிக்காவின் 1787 ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தினை எழுதியவர்களின்  முதன்மையானவர் இவர்.…

கெட்கோ நில விவகாரத்தை தாமரை ஹோல்டிங்ஸ் தீர்த்து வைக்குமா?

-பி. இராமசாமி, பினாங்கு மாநில துணை முதலமைச்சர் II. நெகிரி செம்பிலான், பாகாவில் கம்போங் செரம்பாங் என்ற கெட்கோ கிராமத்தில் வாழ்ந்து வரும் 200 குடியிருப்பாளர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 ஏக்கர் நிலத்தைக் கொடுத்து லோட்டஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான தாமரை ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் அவர்களின் நிலப் பிரச்சனையை தீர்த்து…

சில தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சாட்டையடி!

தமிழ்ப்பள்ளிகளைத் தாங்கி நிற்கும் ஒரு சில தலைமையாசிரியர்களுக்கு அடியேனின் ஒரு சிறிய மடல். நீங்கள் ஒருமுறைக்கு இரண்டு முறை தேசியக் கல்விக் கொள்கையைப் படித்து மீட்டுணர்தல் அவசியம் என்று நான் கருதுகிறேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ள Jasmani Emosi Rohani Sosial (JERI)-யில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளர்த்தத்தை நீங்கள் உணர வேண்டியது…

பஹாங் தமிழ் பள்ளிகளில் 30 ஆசிரியர்கள் பற்றாக்குறை, நமது கல்வி…

பஹாங் மாநிலத்தில் இருக்கும் பெருவாரியான தமிழ் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறதென கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த பிரச்சனைக்கு இதுநாள் வரை எந்த தீர்வும் எடுக்காதது வருத்தம் தருகிறது. என்கிறார் காமாட்சி துரைராஜு . ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் பல தலைமை ஆசிரியர்கள் பெரும் சங்கடத்தில் இருப்பதாகவும் தெரிய வருகிறது.…

11-ஆவது மலேசிய திட்டமும், கம்போங் மேடான் வன்முறையும்!

இன்றோடு பதினான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. அந்தச் சம்பவத்தை மறக்க இயலாத நிலையில் வாழ்பவர்களில் வாசும் ஒருவர். தொடர்பு கொண்ட போது அந்த வன்முறை பற்றி எழுதப்பட்ட மார்ச் 8 என்ற புத்தகத்தை மீண்டும் நினைவுகூர்ந்ததாகக் கூறினார். வெட்டு காயங்களுடன் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டதோடு இரண்டு கைகளும் முறிந்த…

உழவன் மடிந்தாலும், பொங்கல் தேவைதான்…

கடந்த 28.2.2015-இல் கிள்ளான், காயத்திரி வணிக வளாகத்திற்கு அருகில் ஒரு சிறப்பு பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நீண்ட காலமாக இதுபோன்ற பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலிருந்து தவிர்த்து வந்த நான் நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்த பட்டிமன்றத்திற்குச் சென்றிருந்தேன். காரணம் அதன் தலைப்பு. தலைப்பு இதுதான். உழவன் மடிகிறான்!…

உழவன் மடிகிறான், பொங்கல் தேவையா?சிறப்புப் பட்டிமன்றம்!

கோபப்படாதீர்கள்! இது பொங்கல் தேவையில்லை என்பதற்காக உருவாக்கப்பட்ட தலைப்பு அல்ல.  தமிழர்களின் புத்தாண்டாகவும் அதோடு இணைந்து திருவள்ளுவர் நாளாகவும் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் தமிழரின் தனித்துவ அடையாளமாகும். பொங்கல் பண்டிகை என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள்.…

“நான் சரணடையவே மாட்டேன்”

  பொதுவாக மனிதன் ஒரு சூரையாடும் விலங்கு (Generally, man is a predatory animal). ஒருவனை ஒருவன் சூறையாடுவதும், அதை எதிர்த்துப் போராடுவதும் மனித இனத்தின் வரலாறு – உலக வரலாறு. சூறையாடுபவர்களை, அக்கிரமக்காரர்களை, ஆதிக்கவாதிகளை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்துள்ளன. அவ்வாறான போராட்டங்களில் ஒன்று மோகனதாஸ்…

சிறை தண்டனை போராட்ட தீயை அணைத்ததே இல்லை!

-ஜீவி காத்தையா, பெப்ரவரி 12, 2015. மலேசிய எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஐந்தாண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். அவருக்கு வயது 67. சிறைவாசத்தை முடித்துக் கொண்டு விடுதலையாகும் போது அவர் 72 வயதை எட்டியிருப்பார். அதன் பின்னர் அவர் ஐந்து ஆண்டுகளுக்கு சட்ட மற்றும் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட…

நூல் வெளியீடு: துயரார்ந்த அனாதைகள் – மலேசிய இந்தியர்கள்

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஆய்வாளர் நீலகண்ட ஐயர் மலாயாவில் உள்ள இந்தியர்கள் துயரார்ந்த சமூகமாக உருவாக்கம் காண்பார்கள் என்றார். தொழிலாளர்களாக மட்டுமே காணி நிலம் கூட இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்ட அவர்களை இந்தியா அந்நியப்படுத்தியதோடு மலாயாவும் அவர்களை ஓரவஞ்சனையுடன் நோக்கியதே அதற்கான காரணமாகும். அது இன்றும் எதிரொலிக்கிறது.…

பூஜாங் பள்ளத்தாக்கு: முக்ரீஸ் மகாதிர் யுனெஸ்கோவுக்கான ஆய்வு அறிக்கையை தயாரித்து…

-ஜீவி காத்தையா, ஜனவரி 25, 2015.   டிசம்பர் 1, 2013 இல் மலேசியாவின் கெடா மாநிலத்தில் 2000 ஆண்டு தொன்மை வாய்ந்த பூஜாங் பள்ளத்தாக்கு கலாச்சாரத்திற்கு மேலும் ஓர் அடி விழுந்தது. அன்றைய தினத்தில் சுங்கை பத்து தோட்டத்தில் அமைந்துள்ள சண்டி என்று கூறப்படும், பூஜாங் பள்ளத்தாக்கின்…

கல்வி ஒரு தீவிரமான அரசியல் ஆயுதம்

திரு. கா. ஆறுமுகம் மலேசியக் கல்விச் சூழலில் மிக முக்கியமாக அவதானிக்கப்படுபவர். குறிப்பாக கல்வி கொள்கைகள்வழிதான் தாய்மொழிக்கல்வி என்பதை ஓர் அரசியல் அடையாளமாக உருவாக்க இயலும் என்பதிலும் அதன்வழிதான் பண்பாட்டை காக்க இயலும் என்றும் வாதிடுபவர். தொடர்ந்து  நமது நாட்டிலும் அனைத்துலக அளவிலும் கல்வி சார் கருத்தரங்குகள், மாநாடுகள்,…

இந்திய ஆய்வியல் துறைக்குப் புதிய மாணவர் சேர்ப்பு – பிப்ரவரி…

மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் கல்வி பயில புதுவாய்ப்பு கிடைத்துள்ளது. சில காலங்களாக இந்திய ஆய்வியல் துறையில் கல்வி பயில வாய்ப்பு கிடைப்பதில் தமிழ் மொழி கற்ற மாணவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தது நாம் அறிந்த செய்தியே. இக்குறையினை நீக்கும் பொருட்டு, இந்திய ஆய்வியல் துறையினர் எடுத்த…

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் உரிமையைப் பறிக்கும் அரசியல்வாதிகளையும் சுயநலவாதிகளையும் மக்கள் தூக்கி…

-ஜீவி காத்தையா, ஜனவரி 1, 2015.  இன்னும் ஈராண்டுகளில் (2016) இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தோன்றி இருநூறு ஆண்டுகள் பூர்த்தியாகும். இந்த இரு நூறு ஆண்டுகளை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கையில், நம்மை வரவேற்க காத்துக்கொண்டிருப்பது தமிழ்ப்பள்ளிகளின் சவக்குழி! வேண்டுமானால், அந்த நாள் தள்ளிப்போடப்படலாம். அம்னோ மலாய்க்காரர்கள் சீன மற்றும்…

கிரிஸ்மஸ் வாழ்த்துகளோடு ஒரு சிந்தனை! – கா. ஆறுமுகம்

கிருஸ்மஸ் கொண்டாடும் வாசகர்களுக்கு எங்களின் இனிய கிருஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள். பல்லின பண்பாட்டை ஒருங்கிணைத்துக்கொண்டு பீடு நடை போடும் மலேசியா நமக்கெல்லாம் கிடைத்த ஓர் அபூர்வமான வரப்பிரசாதம். அதிகமான பெருநாட்களை கொண்டு பல்லின மக்களின் மாறுபட்ட சமயங்களை அனுசரித்து, கடவுளை பல கோணங்களில் வழிபட நமக்கெல்லாம் இங்கு வழியும் …

ஜாவி வருகிறது: ஜாக்கிரதை!

  இஸ்லாமிய மயமாக்கும் திட்டத்திற்கு மலாய் மொழி எழுத்தை இப்போது பயன்படுத்தப்படும் ரூமி எழுத்திலிருந்து ஜாவி எழுத்திற்கு மாற்றுவது நல்ல பலனத்தரும் என்ற நோக்கத்தில் ஜாவி எழுத்தைத் திணிக்கும் முயற்சி ஆரவாரமின்றி நடந்து வருகிறது. அம்முயற்சியின் ஓர் அங்கம்தான் மலாக்கா மாநிலத்திலுள்ள அனைத்து தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளிகளிலும் "ஜாவி…

பெரியக்காள் சமூகப் பொதுநல இலாகா உதவித் தொகையை மீண்டும் பெற்றார்

  பதிமூன்று மாத கால போராட்டத்திற்குப் பின்னர் பத்து ஆராங் சி. பெரியக்காள் கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 11) சமூகப் பொதுநல இலாகாவிடமிருந்து அவருக்குரிய உதவித் தொகையை மீண்டும் பெற்றார். 13 ஆவது பொதுத் தேர்தல் நடந்த மே மாதம் வரையில் பெரியக்காள் சமூகப் பொதுநல இலாகாவிடமிருந்து உதவித்…

உதயா: ஹிண்ட்ராப்பை உடைக்க ஐந்து தலைவர்கள் உருவாக்கப்பட்டது அதிகாரத்தினரின் மிகச்…

  அம்னோ அரசாங்கத்திடம் தாம் தோல்வியுற்று விட்டதாக ஹிண்டாப் இயக்கத்தின் நிறுவனர் பி. உதயகுமார் இறுதியாக ஒப்புக்கொண்டார். அம்னோ அரசாங்கம் "ஆள் பலம், பண பலம் மற்றும் ஊடக பலம் ஆகியவற்றை வெற்றிகரமாகப் பயன்படுத்தி ஹிண்ட்ராப்பை துண்டுதுண்டாகக் கிழித்தெறிந்து விட்டது", என்று மலேசியாகினியுடனான நேர்காணலில் உதயகுமார் கூறினார். "நான்…

தொழிற்சங்க போராட்ட வீரர் பி. வீரசேனன் நினைவு: 21 ஆவது…

மலேசிய சோசலிச கட்சியின் பந்திங் மற்றும் கிள்ளான் கிளைகள், பன்டார் மாகோத்தா இளைஞர் பிரிவு மற்றும் பந்திங் காற்பந்து அணி ஆகியவை  இணைந்து 21 ஆவது பி.வீரசேனன் காற்பந்து சுழற்கிண்ண (ஒன்பதின்மர்) போட்டியை நடத்துகின்றன. அதன் விபரங்கள் வருமாறு; திகதி - 30 நவம்பர் 2014 நேரம் -…

தீப்பொறி பொன்னுசாமி, அவர் நமது பாரதி!

நாட்டின் தலைச் சிறந்த மரபுக் கவிஞர்களில் ஒருவரான கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி கடந்த 18.11.2014 அன்று தமிழகத்தில் தனது சொந்த ஊரான செஞ்சியில் காலமானார். அவருக்கு வயது 69 ஆகும். யாப்பிலக்கணத்தில் தலைச் சிறந்த கவிஞர் என்று பலராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட கவிஞர் தீப்பொறி சிலாங்கூர், கோலாசிலாங்கூர் அருகில்…

தேசிய ஒற்றுமையைப் பேணுவதில் தாய்மொழிப்பள்ளிகளை விட தேசியப்பள்ளிகள் எந்த வகையிலும்…

  தாய்மொழிப்பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்கு கேடு விளைவிப்பதாக கல்விமான்கள், தொழிலியர்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆதாரம் எங்கே? தேசியப்பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்காகவும் ஒருமைப்பாட்டிற்காகவும் ஆக்கரமாக தாய்மொழிப்பள்ளிகளை விட எந்த வகையிலும் உயர்வான பங்கை ஆற்றியுள்ளனவா? ஆதாரம் எங்கே? தாய்மொழிப்பள்ளிகள் (சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள்) குறித்த அரசாங்கத்தின்  அதிகாரப்பூர்வமான…

ரிம33.30, ரிம10.95, ரிம4.50: இதுதான் பள்ளிகளுக்கான பாகுபாடற்ற நிதி ஒதுக்கீடா?

-ஜீவி காத்தையா, நவம்பர் 11, 2014 கடந்த நவம்பர் 3 இல், நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சுக்கான பட்ஜெட் விவாதத்தின் போது பேசிய கல்வி அமைச்சர் முகைதின் யாசின் இரு முக்கிய விவகாரங்களை வலியுறுத்தினார்.  அவை: 1. நாட்டிலுள்ள பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் பாரபட்சம் காட்டப்படுவதில்லை. 2. நாட்டின் தாய்மொழிக்…