இரு மொழித்திட்டம் என்பது அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை விரும்பும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலமொழியில் வழங்குவதாகும். இந்தத் திட்டம் குறிப்பாக பெரும்பான்மை ஏழ்மை மாணவர்கள் பயிலும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏற்புடையதல்ல என்கிறார் வழக்கறிஞர் கா. ஆறுமுகம்.
தமிழ்ப்பள்ளிகள் ஆரம்பகாலம் தொட்டே வறுமை நிலை குழந்தைகளின் சரணாலயமாகவே இருந்து வருகின்றன. அவற்றின் ஏழ்மை நிலை குறித்து பல விவாதங்கள் எழுந்த போது அதற்கு தீர்வாக பல காலகட்டங்களில் அவை மூடப்பட வேண்டும் என்பது மேல்குடி மக்களின் விவாதமாக இருந்தது. இருந்தும் கடந்த 200 ஆண்டுகளாக இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்க காரணம் தமிழ்மொழியை உணர்வுப்பூர்வமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் உள்வாங்கிய மக்கள் மேற்கொண்ட போராட்டமாகும்.
இதற்கிடையில், தற்போது பெற்றோர்கள் விரும்பினால் இந்தத் திட்டத்தை பள்ளிகளில் அமலாக்கம் செய்யலாம் என்ற கருத்து ஏற்புடையதல்ல என்கிறார் தமிழ் அறவாரியத்தின் ஆலோசகருமான ஆறுமுகம்.
தமிழ்ப்பள்ளிகள் அரசாங்கக் கொள்கைகளுக்கு உட்பட்டவையாக இருப்பினும் அவை நமது பண்பாட்டு மொழி சார்ந்த இன அடையாளமாகும். அதற்கான போரட்டம் அரசியல் தன்மை கொண்டது. அதை மேற்கொண்டவர்கள் தமிழ்மொழி வழி தமிழ்க்கல்வியை இந்த நாட்டில் நிலைத்திருக்க வேண்டும் என்ற வேட்கையால் வெகுண்டவர்கள்.
எனவே இந்த நாட்டில் உள்ள தமிழ்க்கல்விக்கு மக்கள் வழி உருவான ஒரு போராட்ட வரலாறு உள்ளது என்பதை யாரும் மறக்கவும் மறுக்கவும் இயலாது. 2007 ஆம் ஆண்டு நாடு தழுவிய அளவில் இருந்து பங்கேற்ற சுமார் இராண்டாயிரம் மக்களுக்கு தலைமையேற்று ஊர்வலமாக நாடளுமன்றதின் முன் மறியலில் ஈடுபட்டதை அவர் நினைவு கூறுகிறார்.
இப்படிப்பட்ட சூழலில், தமிழ்ப்பள்ளியில் இந்த இரு மொழித்திட்டம் வழி ஓர் உருமாற்றத்தை கொண்டு வர பெற்றோர்கள் விரும்பினால் முடியும் என்பதை ஏற்றுக்கொள்ளக்கூடாது.
மாறாக, தமிழ்ப்பள்ளிகள் சார்ந்த முடிவுகளை சமுதாயம் அதன் ஒட்டு மொத்த ஈடுபாட்டால்தான் முடிவு செய்ய இயலும். அதை விடுத்து, ஆங்கிலத்தில் அறிவியலும் கணிதமும் இருந்தால்தான் தமிழ்பள்ளிகள் பக்கம் தலை வைத்துப் படுப்பேன் என வந்து போகும் சுயநலம் கொண்ட பெற்றோர்களிடம் தமிழ்க்கல்வியின் எதிர்காலத்தை ஒப்டைக்க இயலாது.
ஆங்கிலத்தின் முக்கியதுவம் என்பது அந்த மொழியை எப்படி கற்பது என்ற வழிமுறைகளில் காண வேண்டும். அதை விடுத்து, தமிழ்ப்பள்ளிகளின் தன்மையையும் பெரும்பான்மை மாணவர்களின் வளர்ச்சியையும் பாதிக்கும் இரு மொழிக் கொள்கையை நம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது.
இந்த இரு மொழித்திட்டதிற்காக போராடுபவர்கள் பல வகையான காரணங்களை முன்வைத்துள்ளனர். குறிப்பாக, தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இயலும் என்பது ஒன்றாகும். இது ஆங்கில மோகத்தால் அடிப்படையற்ற வகையில் உருவான கருத்தாகும்.
தமிழ்ப்பள்ளியில் பயின்றால் தனது குழந்தையின் தரம் உயரும் என்ற வேட்கையில் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பி சாதனை படைத்த பலர் இன்று நம்பிக்கை நடசத்திரமாக இருப்பதை பார்க்க இவர்கள் மறுக்கிறார்கள். இந்த நம்பிக்கையற்ற பெற்றோர்களுக்கு தமிழ்ப்பள்ளிகள் பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் முடிவெடுக்கும் அருகதை கிடையாது.
இன்று சிறப்பாகச் செயல்பட்டு வரும் தமிழ்ப்பள்ளிகளில் இரு மொழித்திட்டம் அமலாக்கம் செய்வது பற்றி முடிவெடுப்பதில் ஒட்டுமொத்த சமூகத்தின் ஈடுபாடும் அவசியமாகிறது. அதை விடுத்து இது சார்பாக பெற்றோர்கள் விரும்பினால் அமலாக்காம் செய்யலாம் என்பதை அனைவரும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். அப்படி செய்யத் தவறுவது ஒரு வரலாற்றுத்தவறாக அமையும் என எச்சரிகிறார் ஆறுமுகம்.
இது குறித்து இந்த நாட்டு அசல் தமிழர்கள் அதிகம் பேச விரும்பவில்லை. நாங்கள் கூறிக்கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்று தான். தமிழ்ப் பள்ளிகள் என்றென்றும் பெயரளவில் தமிழ்ப்பள்ளிகளாக இல்லாமல் ‘உண்மையான’ தமிழ்ப்பள்ளிகளாகவே இருக்க வேண்டும். இந்த இருமொழித் திட்டத்தை வேறு மொழிப் பள்ளிகளின் அமல்படுத்தட்டும் அல்லது இந்த இருமொழித்திட்டத்துக்காக புதிய பள்ளிகளை நிர்மாணித்துக் கொள்ளட்டும். இருக்கின்ற தமிழ்பள்ளிகளின் தலையில் கை வைக்க வேண்டாம். இதையும் மீறிச் செய்தால் அதற்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும். இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை.
ரசாக் கல்வி திட்டத்தை அப்படியே விட்டிருக்க வேண்டும். மலாய்க்காரனை தூக்கி ஆகாயத்தில் வைக்க குளறுபடி செய்து உருப்படியான தரமான கல்வி திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர அருகதை இல்லாத அரசுவும் அவன்களை சப்பிக்கொண்டிருக்கும் ஈனங்களும் மற்ற மொழிகளுக்கு செய்யும் அநியாயம் தான் இன்று நடக்கிறது.
தமிழ் பள்ளிகளில் ஆறாம் ஆண்டு முடித்து இடைநிலைப் பள்ளிக்கு போகும் உரிமை மாவட்ட கல்வி இலாக்காவிடம் உள்ளது. அவ்வாறு ஒவ்வொரு வட்டாரத்திலும் தமிழ் பள்ளி மாணவர் மாவட்ட கல்வி இலாக்கா நிர்ணயிக்கும் இடை நிலைப் பள்ளிக்குத்தான் போக வேண்டும் (feeder school system). அவ்வாறு வலுக்கட்டாயமாக நம் மாணவர் அனுப்பப்படும் பொழுது அந்த இடைநிலைப் பள்ளியில் கணிதம் அறிவியல் பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்படாமல் போயின் மீண்டும் அப்பாடங்களை மலாய் மொழியிலேயே பயில வேண்டும். பழைய குருடி கதவைத் திறடி என்ற பாணியில் ஆங்கிலத்தில் கற்ற கல்வி பயினற்றுப் போகும். மீண்டும் அவ்விரு பாடங்களுக்கு உரிய கலைச் சொற்களை மலாய் மொழியில்தான் கற்றறிய வேண்டும்!. இன்று இருமொழி பாடத்திட்டத்தை தமிழ் பெற்றோரிடையே வலிந்து ஊக்குவிக்கும் தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமா? சும்மா ஏதும் அறியாத தமிழ் பெற்றோரை இவர் மூளை சலவை செய்ய முடியும். நாட்டு நடப்பை அறிந்த பெற்றோரிடம் இத்தகைய தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியரின் அறியாத்தனம் எடுபடாது.
சில அரைவெட்க்காடு ஆய்வுகள் வழி மக்களை குழப்பும் படித்த மேதைகள் முதலில் இந்த திடடத்தை பற்றி அறிக்கை விடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக செடிக் இதட்கு ஆதரவாக செயல் படுவது கண்டத்திற்குரியது
தலைமை ஆசிரியர்கள் கல்வி அமைச்சு சொல்வதைத் தான் கேட்பார்கள். அவர்கள் தானே அவர்களுக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள்? அவர்கள் மறுத்தால் அவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்படுவார்கள். அப்புறம் புருஷன் ஒரு இடம். பெண்டாட்டி ஒரு இடம். இது பெற்றோரின் பிரச்சனை மட்டும் என்றால் இதற்கு நல்ல முடிவைக் காணலாம். தலைமையாசிரியர் என்றால் ….ஊகும்…..கொஞ்சம் கஷ்டம் தான். இப்போதைக்கு கல்வி அமைச்சின் கை ஓங்கியிருக்கிறது!
தமிழ்ப் பள்ளியில் ஆங்கிலத்தில் கணிதமும் அறிவியலும் படித்து விட்டு தேசிய இடைநிலைப் பள்ளிக்கு போய் மாணவர்கள் அந்த பாடத்தை ஆங்கிலத்தில் படிக்கப் போவதில்லை மாலாய் மொழியில்தான் படிக்க்ப் போகிறார்கள் பிறகு எதற்காக இந்த நாடகம்.
ஆரம்பிச்சிடிங்கய்யா…. ஆரம்பிச்சிடிங்கய்யா …. இதோட வாயாலே வடை சுட்டு விப்பாய்ங்க …. தைரியம் இருந்தால் வரும் பொது தேர்தலில் மா இ கா நிற்கும் எல்ல தொகுதியிலேயும் தமிழ் மக்களுக்கு வீடு வீட சென்று இந்த விஷயத்தை சொல்லுங்க …. அதை படம் எடுங்க ….youtube இதுங்க ….. அப்புறம் ஒத்துக்கிறேன் நீங்கள் எல்லாம் புலிங்கனு ….
இன்றும் தமிழ்பள்ளிகளின் நிலம்,மின்சாரம்
கட்டடம் என்று பலபிரச்சனைகளை சரி
செய்ய துப்பில்லாதவர்கள்.கணிதம்,
அறிவியலை ஆங்கிலத்தில்போதிக்க
முவுசெய்திருப்பது தமிழ் பள்ளிகளின்
தனித்தன்மையைஇழக்கச்செய்யும்
முயற்சி.கூட்டுகட்சிய்ன் கல்வி துணை
அமைச்சர் கமலநாதன்-சுப்பிரமணிமனியம்
என்ன செய்துக்கொண்டுஇருக்கிறார்கள்.
தாய்த்தமிழில் படித்தமாணவர்கள்.நாட்டில்
நடக்கின்ற ஆங்கில-மலாய்பட்டிமன்றங்களில்
சாதனை படைக்கவில்லையா?ஆத்திசூடி
தமிழிப்பள்ளியில் படித்துத்தான் அணுவிஞ்ஞானி ஆனார் அப்துல் கலாம்.
வணக்கம். குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி குருடும் குருடும் குழிவிழுமாறே , என்ற கூற்றிற்கேற்ப விளங்காத ஒரு குழுவினர் எடுத்த முடிவிற்கு, விளங்காத இன்னொரு குழு தலையாட்டி , தமிழ்ப்பள்ளிகளை Tamilபள்ளிகளாக மாற்ற இந்த இருமொழி திட்டத்திற்குத் தூபம் போடுகின்றனர்.கைபுண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. அதுபோல் தமிழ்ப்பள்ளிகளைTamilபள்ளிகளாக மாற்றினால் ஏற்படும் பாதிப்பினை அறியாத அன்பர்கள் விரைவில் அறிவர்.