இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு எழுக தமிழ் பேரணி..!
கிழக்கு எழுக தமிழ் பேரணி பெப்ரவரி 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்மக்கள் பேரவை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளையும் அன்றாட ஒடுக்குமுறைகளையும் மக்கள் ஒன்றுதிரண்டுவெளிப்படுத்தும் ஜனநாயக எழுச்சியான எழுக தமிழ் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தினத்தில்…
வட மாகாணத்தை வாட்டியெடுக்கும் வரட்சி..! முதலமைச்சரின் நடவடிக்கைகள் என்ன..?
வடமாகாணத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பாக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வரட்சியினால் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கும் கிராமங்களுக்கு உடனடியாக குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் வரட்சியானல் பெருமளவு விவசாயம் அழிவடைந்துள்ளதுடன்,…
தீர்வுக்கான தற்போதைய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! இரா.சம்பந்தன்
அரசியல் தீர்வுக்கான தற்போதைய சந்தர்ப்பத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நான்காவது தமிழர் பொங்கல் விழா மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை)…
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படுமா? முல்லைத்தீவு மக்களின் இன்றைய…
முல்லைத்தீவு - மன்னாகண்டல் பிரதேசத்தில் 110 குடும்பங்களுக்கான மீள்எழுச்சி வேலைத்திட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் இன்று(19) ஆரம்பித்துவைத்துள்ளார். குறித்த வேலைத்திட்டத்தின் ஊடாக வீடுகள் புனரமைத்தல், வீதிகள் திருத்தவேலைகள் மற்றும் நீர்வழங்குதல் போன்ற முக்கிய விடயங்களை செயற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன், முல்லைத்தீவில் அண்மை காலமாக வரலாற்று சிலைகள் அமைக்கும் செயற்பாடுகள்…
பெரும்பாலான விடயங்கள் எங்களுடைய ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசாங்கம் செய்கின்றது…
வடமாகாணத்தில் மத்திய அரசாங்கம் தம் நல்லெண்ணத்தை காட்டும் ஒரு சில நடவடிக்கைகளையே மேற்கொண்டிருக்கின்றது. அதனை விட மற்றைய பெரும்பாலான விடயங்கள் தாங்கள் நினைப்பதை எங்களின் விருப்பத்தை அறியாமல் எங்கள் மீது திணிப்பதாகவே இருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹச்சீசனிடம் சுட்டிக்காட்டியுள்ளார். நெடுந்தீவுக்கான…
அலங்கா’நல்லூர்’ ஆடும் வரை, ஈழ’நல்லூர்’ அடங்காது? யாழில் ஆயிரக்கணக்கில் குவிந்த…
தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தமை தொடர்பில் யாழ்ப்பாணம் நல்லூரில் தற்போது பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் ஒன்றிணைந்து குறித்த ஆர்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 03 ஆண்டுகளாக தடைவிதித்துள்ள நிலையில், அதற்கெதிராக தமிழகத்தின்…
பல யுகங்கள் தாண்டியும் அழியாமல் திகழும் வடக்கின் “அல்லிராணிக்கோட்டை”
கோடிக்கணக்கான செங்கற்கள், இலட்சம் பளிங்குகள் கொண்டு கட்டப்பட்ட பிரமிப்பான மாளிகைகளே எம் கண்களை ஈர்க்கும். எம்மைப் பொறுத்தவரைக்கும் பாரியளவான நிலப்பரப்பில் கட்டப்பட்ட அரண்மனைகளே கோட்டைகள் என்போம். மாபெரும் கோட்டைகள் மனிதனின் வாசஸ்தலமாகலாம்,ஆனால் மனிதனின் வாசஸ்தலமே பின்னாளில் கோட்டையாக உருவான வரலாறு இலங்கைக்கு மட்டுமே உண்டு. ஆம்! இராவணன் கட்டிய…
நந்திக்கடல் பகுதியில் மர்மம்..! இராணுவம் மறுப்பு தெரிவிக்க காரணம் என்ன..?
நந்திக்கடல் பகுதியை விடுவிக்க முடியாது என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி தமது படை நடவடிக்கைகளுக்கு அவசியமானது இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், இவ்வாறு கையகப்படுத்தப்படும் காணிகளுக்கு பதிலாக மாற்றுக் காணிகள் வழங்கப்படும் எனவும் இராணுவத்தினர் கூறியுள்ளனர்.…
இராணுவ முகாம் காரணமாக மன்னார் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு..! சாள்ஸ்…
போர் முடிந்து 7 ஆண்டுகளாகின்றன என்று கூறும் அரசும், அரச படைகளும் மன்னார் மாவட்டத்தில் மக்கள் வாழும் பகுதியில் குண்டுகளை வெடிக்க வைக்கின்றன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். தொடர்பில் அவர் தெரிவிக்கையில், இதனால் மக்கள் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். இராணுவ முகாமை…
பொதுசன வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் தயாரா? – சிறிதரன் எம்.பி.கேள்வி
இலங்கை அரசாங்கம் திணிக்கும் பெளத்த மேலாதிக்க சிந்தனையில் ஊற வைக்கப்பட்டஅரசியல் தீர்வினை த மிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கப்போவதில்லை எனகூறியிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்சி.சிறீதரன்வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுடன் சிங்கள மக்கள் இணைந்து வாழ தயாரா எனஅறியும் பொதுசன வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் தயாரா? எனவும்…
தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் காலத்தை வீணடிக்காமல் பேச்சு வார்த்தையில்…
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் இனிமேலும் தயக்கம் காட்டுவார்களாயின் தமிழர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ எந்தத் தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாது எனக் கிராமியப் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரட்னம் தலைமையில் வறிய நிலையில்…
புலிகள் அழிக்காததை செய்ய இப்போது தமிழர்கள் துணிந்து விட்டார்களா? –…
அண்மைக்காலமாக இலங்கையில் பாரதூரமான பிரச்சினையாகியுள்ள விடயம் பௌத்தம் அழிக்கப்பட்டு வருகின்றது என்பது. அத்தோடு வடக்கு விழக்கில் விகாரைகளும் புத்தர் சிலைகளும் உடைக்கப்படும் சம்பவங்களும் அடிக்கடி இடம்பெறுகின்றன. இதற்கு காரணம் யார்? இதன் மூலம் அவர்கள் சாதிக்க நினைப்பது எதனை? இந்தப் பிரச்சினையை நோக்கும் போது விடுதலைப்புலிகள் வாழ்ந்த காலத்திலும்…
வறட்சியால் யாழ் மக்கள் பாதிப்பு – நா.வேதநாயகன்
யாழ் - குடாநாட்டில் நிலவும் வறட்சி காரணமாக 24 ஆயிரத்து 324 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு அறிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக விவசாய நடவடிக்கைகளில் இதுவரை 30வீதமானவை அழிவடைந்தமையினால் 24 ஆயிரத்து 324 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. இதுவரை…
போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை சர்ச்சை..! ஜனாதிபதி – நல்லிணக்க செயலணி…
போர்க்குற்ற விசாரணைக்கு கலப்புப் பொறிமுறையை நல்லிணக்கச் செயலணியின் அறிக்கை பரிந்துரைத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் செய ல ணியின் உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செயலணியின் அறிக்கை வெளியீட்டில் ஜனாதிபதி மைத்திரிபால கலந்துகொள்ளவில்லை. செயலணியின் பரிந்துரைக்கு தேசிய அரசின் அமைச்சர்கள் எதிர்ப்பு…
ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவதிலிருந்து இலங்கை பின்வாங்க முடியாது! மனித உரிமைகள்…
இலங்கை இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றிய தீர்மானத்திலிருந்து அவர்கள் பின்வாங்க முடியாது. ஐ.நா. இந்த விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் - ஹுசைன், சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பைத் தளமாகக் கொண்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஐ.நா.…
தமிழ் தாய் வாழ்த்துடன் சிறப்பாக நிறைவுற்ற ‘சகோதர இரட்டை நகர…
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கனடா சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று ‘சகோதர இரட்டை நகர உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். மேலும் குறித்த நிகழ்வு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. அத்துடன், அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துடன் முதலமைச்சர் தனது ஆரம்ப உரையினை நிகழ்த்தினார். இதேவேளை, முல்லைத்தீவு நகரினை…
ஸ்ரீமாவோ அரசே: தான்தோன்றி தனமாக செயற்பட்டது..! விக்கி குற்றம்
வடக்கு கிழக்கு இணைப்பானது எம்மால் தான்தோன்றி தனமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருந்தார். வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கனடாவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 18 வருடங்கள் மேல் இருந்தே…
மாட்டிறைச்சிக் கடைகளை முற்றாகத் தடை செய்யுங்கள்
ஈழத்திருநாட்டை சிவபூமி என்று போற்றி அழைத்தவர் திருமூலர். இராவணன் மேலது நீறு என்று போற்றும் அளவில் தலைசிறந்த சிவபக்தன் ஆகிய இராவணன் ஆண்ட நாடு இலங்காபுரி. எனவே இலங்கைத் தீவை சிவபூமி என்று திருமூலர் போற்றியதில் பொருள் உண்டு.சிவபூமி என்பது அன்பின் வடிவமானது. அன்பே சிவம் என்பதே சைவ…
இலங்கை வரும் அகதிகள்…! உதவித் தொகை வழங்க சிறப்பு ஏற்பாடு
தமிழக முகாம்களில் இருந்து, இலங்கைக்கு 40க்கும் மேற்பட்ட அகதிகள் புறப்பட்டு சென்றுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் வசித்து வரும் 40 க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் இலங்கை திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் கோவை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் இருந்த அகதி…
அமெரிக்கத் தூதுவருக்கும் சம்பந்தனுக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை?
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப்பிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. நல்லிணக்க பொறிமுறைமை குறித்த செயலணியின் சர்வதேச நீதவான்கள் குறித்த பரிந்துரை தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத்…
சின்னாப்பின்னமாகுமா இலங்கை? – இலங்கைக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள்..! அடுத்தது என்ன??
இலங்கையில் மீண்டும் தீவிரவாதிகள் தலைதூக்கி வருகின்றார்கள், மேலும் இலங்கையை சின்னாப்பின்னமாக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றது என மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியினூடாகவே அவர் இதனை தெரிவித்தார். மேலும், தீவிரவாதத்தை முற்றாக அழித்த ஒரே நாடு இலங்கை மட்டுமே. அந்த வெற்றியை பெற்றுக்…
கிழக்குத் தமிழ் உறவுகள் எழுக தமிழில் திரண்டால் …
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எழுக தமிழ் எழுச்சிப்பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது. எனவே, எழுக தமிழ் எழுச்சிப் பேரணி வடக்கு மாகாணத்தில் யாழ்.மாவட்டத்தில் நடைபெற்றது. எவரும் எதிர்பாராத வகையில் எழுக…
நாளை பொங்கலா? நீங்களும் தமிழனா? – தமிழன் என்றால் கட்டாயம்…
நாளை தைப்பொங்கல் தமிழர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக முன்கூட்டியே ஓர் “ தித்திக்கட்டும் தைப்பொங்கள்.., பொங்கலோ பொங்கல்” இனிய நல்வாழ்த்துக்கள். என்றாலும் அன்று பொங்கிய பொங்கல் இன்று இல்லை. இப்போது ஏதோ கொண்டாட வேண்டும் அல்லது விடுமுறை வேண்டும் என்பதற்காகவே பெயருக்கு பொங்கி விட்டு செல்லும் நாகரீக…


