இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
இலங்கைக்கான அனைத்து திட்டங்களையும் இடைநிறுத்தும் ஜப்பான்
கடன்களை செலுத்தாததன் காரணமாக ஜப்பான், இலங்கையில் தனது அனைத்து திட்டங்களையும் இடைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை வர்த்தக சம்மேளனம் உப தலைவர் துமிந்த ஹுலங்கமுவ இதனை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வழங்கும் ஒப்புதல் கிடைத்தால் மாத்திரமே, நிதி உதவியையும் வழங்குவதற்கு ஏனைய நாடுகள் முன்வரும்…
கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் – கனடாவின் எதிர்க்கட்சி…
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச நீதிமன்றில் முன்நிறுத்தும் கோரிக்கையை ஆதரிப்பதாக கனேடிய எதிர்க்கட்சியான கன்சவேடிவ் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் முன்னணியில் உள்ள பியர் பொலிவேரா தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிமன்றத்தை…
அனைத்துக்கட்சி அரசில் இணையுமாறு இலங்கை எதிர்க்கட்சிகளுடன் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை
ரணில் விக்ரமசிங்கே அரசில் பங்கேற்கப்போவதில்லை என சஜித் பிரேமதாசா அறிவித்துள்ளது. இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் எதுவுமில்லை என உலக வங்கி கூறியுள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிபர் பதவியை ஏற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை ஏற்படுத்த தீவிரமாக…
அரச கட்டடங்களை கைப்பற்றி சண்டித்தனம் செய்ய முற்பட்டால் கை கால்கள்…
அமைதிவழியில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு எல்லோருக்கும் அனுமதியுண்டு. ஆனால் சண்டித்தனம் செய்ய யாருக்கும் இடமளிக்க முடியாது என முன்னாள் இராஜங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அரச கட்டிடங்களை கைப்பற்ற முயன்றால் போராட்டக்காரர்களின் கை, கால்கள் உடைக்கப்படும் என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு…
வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் மக்கள் – சஜித் பிரேமதாச
கண்மூடித்தனமான சுற்றறிக்கைகள் மூலம் தண்டனை நடைமுறைப்படுத்துவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துடன், மக்கள் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நெருக்கடியில் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று (28) எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினருடன் நடைபெற்ற கூட்டத்தில்…
இலங்கையில் அவசர நிலை பிரகடனம் ஆகஸ்ட் 14 வரை நீட்டிப்பு
இலங்கையில் அவசர நிலை சட்டம் அமலில் உள்ளது. இது ஆகஸ்ட் 14 வரை நீட்டிக்கப்படுகிறது. இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். ஆனாலும் ரணில் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பொதுச் சொத்துகள்…
ஆகஸ்டு 11-ம் தேதி வரை தங்கலாம்- கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூர்…
கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூர் அரசு புதிய விசா வழங்கி உள்ளது. ஆகஸ்டு 11-ந்தேதி வரை அவர் சிங்கப்பூரில் தங்கி இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள், கடந்த 9-ந்தேதி அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக புரட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகைக்குள்…
புதிய 22வது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாக நீதியமைச்சர் அறிவிப்பு
கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்க காலத்தின்போது தயாரிக்கப்பட்டு வந்த 22 வது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய 22வது திருத்தம் கொண்டு வரப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருந்த 22வது திருத்தத்தில் பல முரண்பாடுகள் அவதானிக்கப்பட்டன. இதனையடுத்தே அதனை நீக்கிவிட்டு அடுத்த அமைச்சரவையில்…
ராஜபக்சக்கள் ஆட்சியை கைப்பற்றுவார்கள் – மீண்டும் வருவோம்! மொட்டுக்கட்சி உறுப்பினர்…
ராஜபக்சக்களால் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பலத்தை வெளிப்படுத்த தயாராக உள்ளோம் தொடர்ந்து கருத்துரைத்த அவர், " எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது…
கோட்டாபயவுக்கு எதிராக உடனடி நடவடிக்கை! பிரிட்டனில் இருந்தும் அழுத்தம்
போர்க் குற்றங்களுக்காக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யவும், அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்யவும், அவர் மீதான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பிரித்தானிய கொன்சவேர்ட்டிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்கான…
போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறை இழப்பீடு வழங்க வேண்டும் ! மனித…
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம போராட்ட களங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறை இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றுக்கு பின்னர்,…
கோட்டாபயவுக்கு விசா வழங்க மறுத்த நாடுகள்! போராட்டத்தின் மூளையாக சந்திரிக்கா
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியில் இருந்து விலக வைக்கும் போராட்டத்தின் பின்னணியில் மூளையாக செயற்பட்டவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என விமானப்படையின் முன்னாள் அதிகாரியான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு சிங்கள பௌத்த மக்கள் மீது கோபம் இருப்பதாகவும் காலிமுகத்திடல் போாராட்டம்…
அடுத்த 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த திட்டம்
அந்நிய செலாவணி சிக்கல்கள் காரணமாக அடுத்த 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. டுவிட்டர் பதிவொன்றில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமோ அல்லது…
சீனாவுக்கு செல்ல ரணில் திட்டம்
புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, சீனாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். ரணிலின் சீன விஜயம் இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “பல மாதங்களாக சீனாவிடம் இருந்து 4 பில்லியன் அமெரிக்க…
இலங்கையில் 100 நாட்களுக்கு பிறகு மீண்டும் அதிபர் மாளிகை செயல்பட…
அதிபர் மாளிகைக்குள் யாரும் நுழையாமல் இருப்பதற்காக அதனை சுற்றி ராணுவத்தினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் போராட்டம் காரணமாக கடந்த 100 நாட்களுக்கு மேலாக அதிபர் மாளிகை முடங்கி கிடந்தது. நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் பொதுமக்கள் ஆட்சியாளர்களுக்கு…
தன் வீட்டை எரித்தமைக்கான பதிலடியே காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்:…
ரணில் விக்ரமசிங்க புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்று காலி முகத்திடலில் போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றமையை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இத் தாக்குதல் குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…
இலங்கை மக்களை வதைக்கும் பொருளாதார சுமை! உதவ தயார் என…
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை கொடூரமான வன்முறைகளில் தங்கள் உயிர்கள், உடமைகளை இழந்த மற்றும் இடம்பெயர்ந்தவர்களை நினைவு கூருகிறோம் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை 39ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கனேடிய பிரதமர் அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
புதிய ஜனாதிபதி ரணில் தொடர்பில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள சர்ச்சை தகவல்
கடந்த 2007ஆம் ஆண்டில் இலங்கைக்கு உதவ வேண்டாம் என ஜப்பான் அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித்தலைவராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க தொடர்பில் விக்கிலீக்ஸ் டுவிட்டர் பதிவொன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. ரணிலின் கோரிக்கையை நிராகரித்த…
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா
கொவிட்-19 நோய் புதிய மாறுபாட்டுடன் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், முகக்கவசம் அணிவது தொடர்பில் சுகாதார அமைச்சு தனது முன்னைய தீர்மானத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. குறைந்த பட்சம் கொரோனா அபாயம் அதிகம் உள்ள பகுதிகளிலாவது கட்டாயம் முககவசத்தை அணிவது குறித்து…
எனது வீடு எரிக்கப்பட்ட போது எங்கே சென்றிருந்தீர்கள்….! கேள்வி கேட்ட…
தான் பதில் ஜனாதிபதியாக இருந்த போது தனது வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் எந்த தரப்பினரும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் பல வெளிநாட்டு தூதுவர்கள் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டமை…
கறுப்பு ஜூலை: தமிழ் மக்கள் சந்தித்த இருண்ட நாட்கள் மீண்டும்…
39 வருடங்களிற்கு முன்னர், 1983ம் ஆண்டில், இதே யூலை மாதத்தில் இலங்கைத் தமிழ் மக்கள் சந்தித்த இருண்ட நாட்கள் மீண்டும் ஒரு முறை இப்போது நினைவு கூரப்படுகின்றன என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை நினைவு நாள் தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக…
இரவோடு இரவாக போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் கொடூர தாக்குதல்
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் உயிர் தப்பிய இளைஞரொருவர் சற்றுமுன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில்,கோட்டா…
ராஜபக்ச சகோதரர்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும் –…
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் ஒட்டாவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “முன்பை…