ஆட்சிக்கு வந்த மூன்று வாரங்கள் தொடரும் ஜனாதிபதியின் அடக்குமுறை

மூன்று வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தின் மூலம் இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிக்கு வந்த நிலையில், அரகலய போராட்டக்காரர்கள் மீதான கடுமையான அடக்குமுறை முடிவின்றி தொடர்கிறது. அதேவேளை அச்சம் மற்றும் எதேச்சாதிகார கைதுகள் அன்றாட நடைமுறையாகியுள்ள நிலையில், நேற்று மாத்திரம் மூன்று கைதுகள் இடம்பெற்றுள்ளன. போர்க்காலத்தில் இடம்பெற்ற கடத்தல்களை…

சுன்னாகம் இளைஞன் சித்திரவதை வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி…

யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இளைஞரொருவர் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில் பொலிஸ் அதிகாரி உட்பட சில பொலிஸாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 2017 வைகாசி மாதம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார். இந்த வழக்கில் சிரேஸ்ட பிரதி மன்றாடியார்…

நிதியமைச்சை விட்டு வெளியேறுமாறு ரணிலிடம் கோரிக்கை..!

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கத்திற்கு முழுநேர நிதி அமைச்சர் தேவை என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, அதிபர் ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சை வேறொரு அமைச்சருக்கு வழங்க வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க…

கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் மேலும் 2 வாரம் தங்க முடிவு-…

சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே வருகிற 11-ந்தேதி வரை தங்கி இருக்க முடியும். அதன்பின் அவர் இலங்கை திரும்புவார் என்று தகவல் வெளியானது. கோத்தபய ராஜபக்சேவுக்கு மேலும் 2 வாரம் விசாவை நீட்டித்து வழங்க சிங்கப்பூரிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் தவித்த மக்களின் புரட்சி…

துப்பாக்கி சூடு சம்பவங்கள்! பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்: பிரதமர்…

துப்பாக்கி சூடு மற்றும் குற்றச் செயல்களை தடுப்பதற்கான அதிகாரங்கள் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொஸ்கம, பொரலுகொட ஸ்ரீ வர்தனாராமயவிற்கு விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் முயற்சி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,…

இலங்கையை விட்டு ஒவ்வொரு மணிநேரமும் 32 பேர் வெளியேறுவதாக தகவல்

நாடு எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒவ்வொரு மணித்தியாலயத்திலும் 32 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் வெளிவிவகார பிரிவின் தரவுகளுக்கமைய இந்த தகவல் தெரியவந்துள்ளது. இது கடல் வழியாக சட்டவிரோதமாக தென்னிந்தியா அல்லது அவுதிரேலியாவிற்கு தப்பிச் செல்லும் எண்ணிக்கையை விட…

ஊடகவியலாளர்கள் கொலை வழக்கில் இலங்கையின் முன்னாள் அரசாங்கத்திற்கு எதிராக தீர்ப்பு

இலங்கையில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் இலங்கையின் முன்னைய அரசாங்கம் குற்றம் இழைத்துள்ளதாக நெதர்லாந்தின் ஹேக் மக்கள் நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பிரதான சாட்சியாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

இலங்கையின் 58 இராணுவ அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை: மனித…

இலங்கையின் 58 இராணுவ அதிகாரிகளை கைது செய்வதற்கு சர்வதேச நீதி அமைப்பை பயன்படுத்துமாறு 47 நாடுகளின் அதிபர்களுக்கு ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்செல் கோரிக்கை விடுத்துள்ளார். தென்னிலங்கை ஊடகங்களுக்கு வெளியிட்ட செவ்வியில் இவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இராணுவ வீரர்களுக்கு எதிராக இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய…

ரணிலின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை – சிறுபான்மையினருக்கு பல…

சர்வகட்சி அரசாங்கத்தின் கீழ் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்போது 30 அமைச்சரவை அமைச்சர்களும் 30 ராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப்…

சீன உளவு கப்பல் இலங்கைக்கு புறப்பட்டது

இந்தியாவின் எல்லைக்கு அருகில் இந்த கப்பல் நிறுத்தப்படுவதால் இது பாதுகாப்பு அச்சுறுத்துலாக கருதப்படுகிறது. இலங்கையின் நிலைப்பாட்டை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கையில் தனது ராணுவ ஆதிக்கத்தை நிலை நிறுத்துதற்கு வசதியாக சீனா அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும்…

ரணில் விக்ரமசிங்கவுக்கு இரண்டு மாத கால அவகாசம்

இலங்கையை மீள கட்டியெழுப்ப அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு அதிகம் வருகை தரவிருக்கும் இந்த மாதத்தில் பிரச்சினைகளை உருவாக்குவது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என நேற்று இடம்பெற்ற ஊடக…

இலங்கைக்கான அனைத்து பயணங்களையும் இரத்து செய்துள்ள வெளிநாட்டு நிறுவனம்

இலங்கை எதிர்வரும் மாதங்களில் சுற்றுலாத்துறை பயணிகளை அதிகமாக எதிர்பார்த்துள்ள நிலையில் வெளிநாடுகளில் மாற்றுத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனடிப்படையில் அமைதியின்மை காரணமாக இலங்கைக்கான பயணங்களை மேலும் இரத்து செய்வதாக ஜேர்மனை தளமாகக்கொண்ட சுற்றுலாத்துறை முன்னணி நிறுவனமான டியுஐ அறிவித்துள்ளது. உணவு, மருந்து,எரிபொருள் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பற்றாக்குறையுடன் பொருளாதார நெருக்கடியை…

ஒரே சீனா என்ற கொள்கைக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் –…

ஒரே சீனா என்ற கொள்கைக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் க்யூ ஸெஹெனொங், இன்று ஜனாதிபதியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ஒரே சீனா கொள்கையை ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். நாடுகளின் இறையாண்மை மற்றும் பெளதீக ஒருமைப்பாடு போன்ற ஐக்கிய…

இலங்கைக்கு பயங்கரவாதிகளின் நாடு எனப் பெயரிட வேண்டும் – அஜந்த…

இந்த நாட்டின் பெயரை மாற்றி பயங்கரவாதிகளின் நாடு எனப் பெயரிட வேண்டும் என கலாநிதி அஜந்த பெரேரா தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்களுடைய அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து நேற்று இலங்கை காவல்துறை தலைமையகத்திற்கு சென்று போராட்டக்காரர்களினால் முறைபாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில்…

தமிழர் தாயகத்தில் இராணுவ மயமாக்கலை தீவிரப்படுத்தும் ரணில்

புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவான பின்னரும் வடக்கிலே இராணுவ மயமாக்கல் தொடர்ச்சியாக நடைபெறுவதாக வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளரும், ரெலோவின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று(2) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர்…

நட்பின் அடிப்படையில் சீன கப்பல் பிரச்சினைக்கு தீர்வு!பிரதமர் உறுதி

நட்பின் அடிப்படையில் சீன கப்பல் பிரச்சினைக்கு தீர்வைக்காண முயல்வதாக இலங்கையின் பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். சீனாவின் 'யுவான் வாங் 5' என்ற சீனக் கப்பலானது ஆகஸ்ட் 11-17 வரை இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 'எரிபொருள் நிரப்புதலுக்காக' நிறுத்தப்படும் என்றும்,ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின்…

இறக்குமதித் தடையால் எரிபொருள் கள்ளச்சந்தையில் விற்பனை

இலங்கையில் எரிபொருள் இறக்குமதி ஓராண்டுக்குக் கட்டுப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு எரிபொருள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது. அங்கு வசிப்போர் தினந்தோறும் பல மணிநேரம் மின்வெட்டை எதிர்நோக்குவதாகக் கூறப்படுகிறது. உணவு, மருந்து ஆகியவற்றுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது.எரிபொருள் வாங்குவோர் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் இலங்கை முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட…

இலங்கையர்களை நாடுகடத்தும் சுவிசின் நடவடிக்கை – உடன் முடிவுகட்ட கோரிக்கை

மருத்துவ சிகிச்சை தேவைப்படும் இலங்கையர்களான புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளுக்கு சுவிட்சர்லாந்து உடனடியாக முடிவுகட்டவேண்டும் என சித்திரவதைக்கெதிரான உலக அமைப்பு (OMCT) கோரியுள்ளது. இது தொடர்பில் சுவிஸ் பெடரல் கவுன்சிலருக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தற்போது நிலவும் சூழல் பயங்கரமானது, பொருளாதார நெருக்கடிகள்…

கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான நேரம் அல்ல:…

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்வு செய்யப்பட்டார். கோத்தபய வருகை அரசியல் பதற்றங்களை தூண்டி விடும். இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், அவரது குடும்பத்தினரும் தான் காரணம் எனக்கூறி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த மாத தொடக்கத்தில்…

இலங்கையின் ஆடை ஏற்றுமதிகளில் வீழ்ச்சி

உள்நாட்டில் நிலவும் உறுதியற்ற தன்மை மற்றும் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற அதன் வாங்கும் சந்தைகளில் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் விளைவாக இலங்கையின் ஆடைகளுக்கான கொள்வனவு கட்டளைகள், 10-15 சதவீத வீழ்ச்சியை எதிர்கொள்கின்றன. கூட்டு ஆடை சங்க மன்றத்தின் பேச்சாளர் யோகன் லோரன்ஸ் இதனை குறிப்பிட்டுள்ளார். இது முக்கியமாக…

சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் – நாமல், ஜோன்ஸ்டனுக்கு முக்கிய…

எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் பல மூத்தவர்களுக்கு அமைச்சரவை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன, எஸ்.பி. திஸாநாயக்க, சி.பி. ரத்நாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு அமைச்சுப்…

நெருக்கடிக்கு முன்னுதாரணம் இலங்கை – பிலிப்பைன்ஸில் மைத்திரி தெரிவிப்பு

மோசடி, விரயம், ஊழல் போன்றவற்றைக் குறைத்தல் உள்ளிட்ட சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான விடயங்களை ஏற்படுத்தாமல் நெருக்கடிக்குள் சென்ற நாடு என்பதற்கு இலங்கையே உதாரணம் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸின் மணிலாவில் இடம்பெறும் 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தலைமைத்துவ உச்சி மாநாட்டில் கலந்து…

ரணிலுக்கு வலுக்கும் ஆதரவு – ஐ.தே.க வில் இணைய உள்ள…

தற்போதைய ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பலர் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளின்…