இலங்கையில் ஒவ்வொரு தனி நபரும் 1 மில்லியன் கடனாளி! மத்திய…

இலங்கையின் பிரஜைகள் தொடர்பான தனிநபர் கடன் தொகை தொடர்பான அறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இந்த வகையில் தனிநபர் கடன் தொகையானது தற்போது ஒரு மில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கின்றது. தற்பொழுது இலங்கையின் உள்நாட்டுக் கடனாக சுமார் 12,442.3 பில்லியன்களும், வெளிநாட்டுக்கடனாக 10.867.8 பில்லியன்களும் செலுத்த வேண்டியிருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அரசு…

கோட்டாபயவிற்கு இலங்கையில் சட்டப்பூர்வ பாதுகாப்பு இல்லை – அஜித் பெரேரா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாடு திரும்புவதற்கான உரிமை உள்ளது, எனினும், அவருக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற அஜித் பி பெரேரா இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கோட்டாபய ராஜபக்ச…

தடைப்பட்டியலில் புலம்பெயர் அமைப்புகள் – சுமந்திரன் விடுத்துள்ள கோரிக்கை

தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ள ஏனைய புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் அடங்கிய குழுவை தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து…

வெளிநாட்டில் இலங்கையர்கள் 10 பேர் கைது

அஜர்பைஜானில் இலங்கையர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 12ம் திகதி இரவு 10:00 மணியளவில் அஜர்பைஜானின் புசுலியில் உள்ள போயுக் பெஹ்மென்லி கிராமத்திற்கு அருகிலுள்ள எல்லையில் நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள்…

நாட்டில் நிலைமை சீரடைந்துள்ளது! ஜனாதிபதி அறிவிப்பு

நாட்டில் மீண்டும் நிலைமை சீரடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாட்டில் மீண்டும் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது.. இந்த வார இறுதியில் காலாவதியாகவிருந்த அவசரகாலச் சட்டம் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும்…

கடந்த காலத்திலிருந்து பாடம் படிக்காத ரணில் – விடுக்கப்பட்ட கடும்…

தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, அரகலய போராட்டகாரர்களாலேயே அதிபர் பதவியில் நியமிக்கப்பட்டார் என்றும், அவர் கடந்த காலத்திலிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிவதாக கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தேசிய சொத்துக்களை அபகரித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட…

சர்வதேசத்தை ஏமாற்றும் தந்திர விளையாட்டில் ஸ்ரீலங்கா அரசாங்கம் -நாடு கடந்த…

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மீது ஸ்ரீலங்காவில் தடைநீடிக்கப்பட்டுள்ளமை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பொறிமுறைதொடர்பான ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களின் அச்சத்தை வெளிப்படுத்துவதாகநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஏனைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான ஸ்ரீலங்காவின் தடை நீக்கம், சர்வதேசத்தினை ஏமாற்றும் தந்திர விளையாட்டு எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள்…

இந்தியாவும் இலங்கையும் நாணயம் ஒன்றின் இரண்டு பக்கங்கள்: ஒன்றிணைந்து முன்னேற…

வரலாறு, இந்தியாவையும் இலங்கையையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப் போல இணைத்துள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவினால் இலங்கைக்கு டோர்னியர் 228 உளவு விமானம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்ற போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியாவும் இலங்கையும் பல பொதுவான அம்சங்களைப் பகிர்ந்துகொள்வதுடன், இரு…

நெருக்கடியை வெற்றி கொள்ள இலங்கை தலைவர்களிடம் அர்ப்பணிப்பு தேவை –…

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவும் வகையில் இந்தியா அளித்துள்ள தாராளமான மற்றும் பன்முக உதவிகள் மகிழ்ச்சி அளிப்பதாக பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரீசியா ஸ்கொட்லாண்ட் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு பயணம் செய்துள்ள அவர், பிடிஐக்கு அளித்த சிறப்பு செவ்வியில், உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் முக்கியப்…

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கத்தின் சூழ்ச்சி

6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 300 தனிநபர்கள் மீதான தடையை நீக்கும் அரசின் செயற்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சர்வகட்சி ஆட்சிக்குள் கொண்டு வருவதற்கான சூழ்ச்சியாக இருக்கலாம் என சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார். இந்த நிலையைக் கேட்டறிவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்துக் கட்சி…

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான இலஞ்ச ஊழல்…

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஊழல் எதிர்ப்பு முன்னணியினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானிய நிறுவனம் ஒன்றிடம் இலஞ்ச பணம் கோரப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச…

கூட்டமைப்பை விரும்பாதவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணையலாம் – ஆனந்தசங்கரி…

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி இருக்கும் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்கள் விரும்பினால் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து பயணிக்கலாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ ஆனந்த சங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சித் தலைமையகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு…

சர்ச்சையை கிளப்பியுள்ள சீன ஆய்வுக்கப்பல்..! இலங்கை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு அனுமதி…

சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங் 5’ ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச கடலில் நிலை கொண்டுள்ள சீனாவின் ‘யுவான் வாங் 5’ கணிக்கணிப்பு கப்பல் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவலிலேயே இவ்வாறு அனுமதி வழங்கப்படுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்…

தாய்லாந்து சென்ற கோத்தபய ராஜபக்சே ஓட்டல் அறையிலேயே தங்கியிருக்க உத்தரவு

கோத்தபய ராஜபக்சே, முதலில் மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் சென்றார். கோத்தபய ராஜபக்சே தாய்லாந்தில் தற்காலிகமாக தங்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது. அரசியல் போராட்டம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முதலில் மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் சென்றார். சிங்கப்பூரில் கோத்தபயவுக்கான அனுமதி…

மேட்டுக்குடி சதியால் பாட்டாளி வர்க்க போராட்டம் தோல்வியுற்றது! டிலான் பெரேரா

மேட்டுக்குடி அரசியல்வாதிகளின் சூழ்ச்சி மற்றும் சதிகளால் பாட்டாளி வர்க்க மக்களின் போராட்டம் தோல்வியுற்றதாக டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், பொதுஜன பெரமுண கட்சியின் மறுசீரமைப்புக் குழுவைச் சேர்ந்த நாடாளுமன்ற…

கோட்டாபய எங்கு சென்றாலும் நீதிக்கான போராட்டம் தொடரும் ! –…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியுமாகிய கோட்டாபய ராஜபக்ச எந்த நாட்டுக்கு சென்றாலும், உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் அவரைகைது செய்யக்கோரும் நீதிக்கான போராட்டம் தொடரும் என நாடு கடந்த தமிழீழஅரசாங்கம் அறிவித்துள்ளது. இரவோடு இரவாக நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவூடாக சிங்கப்பூரில் சென்று, அங்கிருந்து தற்போது தாய்லாந்துக்கு செல்வதாக நா.தமிழீழ அரசாங்கம்…

சிறுவர்களிடையே வேகமாக பரவும் நோய் தொற்றுக்கள்! பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ,டெங்கு வைரஸ் மற்றும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் 51 சிறுவர்கள் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை…

நாட்டை மீட்பதற்கு பதில் பேரம் பேசப்படும் அமைச்சு பதவிகள் –…

அதிபர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட சர்வகட்சி அரசாங்கம் தற்போது அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்து கொள்வதில் போட்டி நிலைமையாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாட்டை மீட்பதற்கான முன்மொழிவுகளை விவாதிப்பதற்குப் பதிலாக அமைச்சுப் பதவிகளைப் பகிர்வது தொடர்பில் இன்று பேரம் பேசப்படுவதாக அவர் கூறினார். பதவிகளைப் பகிர்வது…

இலங்கை அதிபர் மாளிகைக்கு எதிரே உள்ள காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுவதாக…

பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அதிபர் மாளிகைக்கு எதிரே காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டம். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள், ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளில் இருந்து விலகக்கோரி போராட்டம் நடந்தது. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார்.…

சிங்கப்பூரில் இருந்து கோத்தபய ராஜபக்சே தாய்லாந்தில் தஞ்சமடைய திட்டம்

கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பி சென்றார். சிங்கப்பூரில் தங்கி இருப்பதற்கான விசா காலம் நாளையுடன் முடிவடைகிறது. இலங்கையில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பி சென்றார். அவர் சிங்கப்பூரில் தங்கி இருப்பதற்கான விசா காலம் நாளையுடன் முடிவடைகிறது. கோத்தபய ராஜபக்சேக்கு மேலும்…

சிறைகளில் இளைஞர்களை நிரப்ப அரசு முயற்சி – சஜித் குற்றச்சாட்டு

இந்த நாட்டில் பொதுமக்கள், போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்களை வேட்டையாடும்நடவடிக்கையை அரசு ஆரம்பித்துள்ளது. 'கோட்டா கோ கம'வில் நிர்மாணிக்கப்பட்ட நூலகத்துடன் தொடர்புடைய இளைஞர்களைக் கைது செய்து விசாரிக்கவும் அரசு முயற்சித்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரச அடக்குமுறையை நிறுத்துமாறும் அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறும் கோரி ஐக்கிய…

இலங்கை விளம்பரத்தை தடை செய்த சீன சமுக ஊடகங்கள் –…

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனக் கப்பல் வருவதை இடைநிறுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை. சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளம்பர நிகழ்ச்சி சீனாவில் அனைத்து சமூக ஊடக வலையமைப்புகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்சாரத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை 'Douyin' இல் முன்னெடுக்க இலங்கை அதிகாரிகள் ஏற்பாடு…

போராட்டக்காரர்கள் பேரணி நடத்த போவதாக தகவல்: கொழும்பில் ராணுவம் தீவிர…

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவ தலைமையகத்திற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே திடீரென்று சென்றார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பேரணியை நடந்த போராட்டக்காரர்கள் தயாராகியுள்ளனர். இதையடுத்து கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்…