இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
அரசின் இழுத்தடிப்பால் பாதிப்படைந்த லட்சக்கணக்கான மக்கள்!
அரச வேலைத்திட்டங்களுக்காக நிர்மாணவியல் துறைக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை அரசாங்கம் செலுத்த தவறியதாக இலங்கை தேசிய நிர்மாணவியல் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஒரு வருடக் காலத்திற்கு செலுத்த வேண்டிய 150 பில்லியன் ரூபா தொகையை அரசாங்கம் செலுத்தாது தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்து வருவதாகவும் அவர்…
இலங்கையில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி
இலங்கையில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2021ம் ஆண்டில் குழந்தைகள் பிறப்பு 16858ல் குறைவடைந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் 301707 பிறப்புக்கள் பதிவாகியிருந்ததுடன் 2021ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 284848 ஆக…
சீன ஆய்வு கப்பலால் மீண்டும் வெடித்தது சர்ச்சை
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து கடந்த 22 ஆம் திகதி புறப்பட்டுச் சென்ற சீனாவின் உளவுக்கப்பலான யுவான் வாங் 5 தற்போது இந்து சமுத்திர கடற்பிராந்தியத்தில் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் The Hindu நாளிதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச்…
இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் ஜப்பான்: கடன் கூட்டத்தை நடத்த ஜப்பான்…
இலங்கையை மையப்படுத்தி முக்கிய சர்வதேச ராஜதந்திர நகர்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில், இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் கூட்டம் ஒன்றை கூட்டுவதற்கு ஜப்பான் முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஜப்பானிய அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாதபோதும், உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகவே வெளியாகியுள்ளது. ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள கோரிக்கை…
இறக்குமதி கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும் – மத்திய வங்கி ஆளுநர்…
அத்தியாவசியமற்ற 305 பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவது தற்போது அவசியமான நடவடிக்கை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு கிடைத்தவுடன், கட்டுப்பாடுகள் மெது மெதுவாக நீக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.…
தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன்: ரஞ்சன் ராமநாயக்க
“தான் அரசியலில் ஈடுபடுவேன் எனவும் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன்“ எனவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பை பெற்று வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து இன்று வெளியேறும் போதே ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “தாம் சுதந்திரமாக இருந்து மக்கள்…
கோட்டாபய ராஜபக்சவிற்கு பிரதமர் பதவி! மொட்டு கட்சி உறுப்பினர்கள் ஆதரவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கைக்கு வந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் எனில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளனர். குறித்த…
கொழும்பு பங்குச் சந்தையில் கடும் சரிவு
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (25) 183.16 அலகுகளாக பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது 2.03 வீத சரிவாகும் என்பதுடன், நாள் முடிவில் அனைத்து பங்கு விலை குறியீட்டு மதிப்பு 8,828.08 அலகுகளாக பதிவு செய்யப்பட்டது.…
இலங்கையுடன் உறவுகளை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன்:தென் ஆபிரிக்க ஜனாதிபதி
இலங்கையுடன் இருந்து வரும் நெருங்கிய உறவுகளை மேலும் அதிகரிக்க அர்ப்பணிப்புடன் இருபபதாக தென் ஆபிரிக்க ஜனாதிபதி மத்தமேலா சிறில் ராம்போஃசா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணிலுக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ள தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் தென் ஆபிரிக்க ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க…
கடன் நிவாரணம் தொடர்பான நிலைப்பாடு குறித்து சீனாவிடம் இலங்கை விடுத்துள்ள…
கடன் நிவாரணம் தொடர்பான தனது நிலைப்பாட்டை வியத்தகு முறையில் மாற்றிக்கொள்ளுமாறு சீனாவை இலங்கை வலியுறுத்தியுள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிக்கேய் ஏசியாவிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தில் சீனாவுடன் ஒப்பந்தத்தை எட்டுவது எளிதான காரியம் அல்ல என்பதை அந்த நேர்காணலில் ரணில் விக்ரமசிங்க ஒப்புக்கொண்டார். வெளிநாட்டு இருப்பு பற்றாக்குறை…
ஜனாதிபதியுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பேச்சு
இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்பகட்ட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியின் தற்போதைய நிலைமை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியின் தற்போதைய நிலைமை மேலும் எதிர்வரும் 26 ஆம் திகதி…
புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கம் என்பது ஒரு நாடகம்
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது, ஒரு சில புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்க நடவடிக்கையெடுத்துள்ளமையானது ஐ.நாவில் எதிர்வரும் மாதம் கொண்டுவரவுள்ள பிரேரணையில் தங்களை நியாயப்படுத்துவதற்காக முன்னெடுக்கும் நாடகம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று(24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து…
இளைஞர்களை இந்த அரசாங்கம் வேட்டையாடுகிறது..! சஜித்
இந்நாட்டின் இளம் தலைமுறையினர் பாரிய புரட்சியை முன்னெடுத்ததாகவும் அதன் விளைவாகவே நாட்டை அதல பாதாளத்தில் தள்ளிய அதிபரை பதவியில் இருந்து அகற்ற முடிந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எனினும், அந்த பாரிய புரட்சியையும், மக்கள் போராட்டத்தையும் முன்னெடுத்த இளம் தலைமுறையினருக்கு எதிராக அரச அடக்குமுறை ஏவப்படுவதாகவும்,…
இலங்கையின் அடக்குமுறை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்!
போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை, சர்வதேச மன்னிப்புச் சபை கண்டித்துள்ளது. பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் என்பது, போராட்டக்காரர்கள் செய்ததாகக் கூறப்படும் எந்தவொரு குற்றங்களுக்கும் பொருந்தாது என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கூறுகிறது. ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில், அனைத்துப்…
பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துக! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், தடுப்புக் கட்டளைகளை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் ஜனாதிபதி மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நபர்களை கைது செய்வதற்கும் தடுத்து வைப்பதற்கும் பயங்கரவாதத்…
இலங்கையில் 3 மாணவர் இயக்க தலைவர்கள் தீவிரவாத தடுப்பு சட்டத்தில்…
புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற பிறகு போராட்டங்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாணவர் இயக்க தலைவர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. இதில் பல்வேறு மாணவர் இயக்கத்தினர் பங்கேற்றனர்.…
இந்தியா மற்றும் இலங்கை இடையே ஆரம்பிக்கப்படவுள்ள கப்பல் சேவை!
இந்தியா மற்றும் இலங்கை இடையே உத்தேச கப்பல் சேவை இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார். மாநில பேரவை ஒன்றில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் காரைக்கால் துறைமுகத்துக்கும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையே படகு சேவையை இந்த ஆண்டு ஆரம்பிக்க…
உணவு விலை பணவீக்கத்தில் இலங்கை 5 வது இடத்தில்:உலக வங்கி
உலகில் அதிகளவில் உணவு விலை பணவீக்கம் காணப்படும் நாடுகளில் இலங்கை 5 வது இடத்தில் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் அறிக்கையின் அடிப்படையில், உலகில் மிக அதிகளவிலான உணவு விலை பணவீக்கம் கொண்ட நாடாக லெபனான் காணப்படுகிறது. உலகில் உச்ச உணவு விலை பணவீக்கம் நிலவும் நாடுகள் சிம்பாப்வே,…
அமெரிக்காவில் காணாமல்போன இலங்கை கடற்படையினர்!
அமெரிக்காவில் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்ற பின்னர் கப்பலில் இருந்து குதித்து தலைமறைவான இலங்கையின் ஒன்பது கடற்படை உறுப்பினர்களுக்கு எதிராகவும் அந்த நாட்டில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. காணாமல்போன அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக வோசிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம், அமெரிக்க கடலோர காவல்படையினரின் தலையீட்டை உத்தியோகபூர்வமாக நாடியுள்ளது. அவர்கள், கடற்படை ஒழுக்காற்று நடைமுறைகளின் படியும்…
இலங்கையின் கடனில் பாதி சீனாவிடமிருந்து: IMF உடன்படிக்கையை பீய்ஜிங்கின் நிலைப்பாடே…
இலங்கையின் இருதரப்பு கடனில், பாதியளவான கடன், சீனாவிடமிருந்து இருந்து பெறப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்திற்கு பீய்ஜிங்கின் நிலைப்பாடு முக்கியமானதாக அமைந்துள்ளது. நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ, கடன் விளக்கத்தின்படி, இலங்கையின் இருதரப்புக் கடனில் பாதி அளவு கடன் சீனாவிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. எனவே, கடன் மறுசீரமைப்பு தொடர்பான…
‘இனப்படுகொலையாளிகளை சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்துங்கள்’ – தமிழர் தரப்பின் ஆதரவுடன்…
எம்மை இனப் படுகொலைக்கு உள்ளாக்கிய கோட்டாபயவையும் அதனுடன் சம்பந்தப்பட்ட அரசில் உள்ளவர்களையும் சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனையை பெற்றுத்தரவேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் முன்வைத்து மகஜர் ஒன்றை ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர். இன்று வவுனியா…
ரணில் அமைக்கும் புதிய அரசாங்கம்..! பகிரப்படும் அமைச்சர்களின் பெயர் பட்டியல்
தேசிய அரசாங்கத்தை அமைக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைய ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகள் இணங்கவில்லை என்பதால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்…
சர்ச்சைக்குரிய சீன கப்பல்! இந்திய – இலங்கை உறவில் விரிசலா
இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன கடற்படைக் கப்பல் வருகை தந்தமையானது, இலங்கையுடனான புதுடில்லியின் முடிவில்லாத இக்கட்டான நிலையை காட்டுவதாக இந்திய ஊடகம் ஒன்று கூறுகிறது. இதன்மூலம் இந்தியா முன்னர் இலங்கையுடன் மேற்கொண்ட ராஜதந்திரத்தின் ஆபத்துக்களில் இருந்து அதிகம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை என்பதையும் இது சுட்டிக்காட்டுவதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.…