அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி ஆய்வு கூடத்தை தீயிட்ட மாணவர்கள்

பாணந்துறை கொசல்வத்தை சிறி ஜினதர்மதான பாடசாலையின் அதிபரது அலுவலகம் மற்றும் கணினி ஆய்வு கூடம் ஆகியவற்றை அந்த பாடசாலையை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தீயிட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் போரில் 12 மற்றும் 9 வயது மாணவர்களை கைது செய்துள்ளதாக பாணந்துறை…

நாடாளுமன்றம் கூறுகிறது! கட்சி தலைவர்களின் சிறப்புக்கூட்டம் ஆரம்பம்!

இலங்கையின் நாடாளுமன்றம் இன்று கூடியுள்ள நிலையில் கட்சி தலைவர்களின் சிறப்புக்கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. சபாநாயகர் தலைமையில் இந்தக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமாகியுள்ளது இந்தநிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணும் முனைப்புக்கள் குறித்து பல தரப்புக்களும் வலியுறுத்தி வருகின்றன. பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களையும்…

அரசியல் பிரபலங்களின் ஊழல் மோசடிகள் அம்பலம்: கோடி கோடியாக பணம்…

பிரபல அரசியல் வாதிகள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலருடன் தொடர்புடைய ஊழல் மோசடிகள் ஆதாரங்களை மக்கள் விடுதலை முன்னணி அம்பலப்படுத்தியுள்ளது. கொழும்பு இலங்கை மன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து ஊழல் மோசடிகள் தொடர்பான ஆவணங்களை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரா குமார…

அரசை வீட்டுக்கு அனுப்ப ஆறாம் திகதி முழுமையான கடையடைப்பு

அரசாங்கத்தை வீட்டுக்குச் செல்லுமாறு கோரி நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் 6ஆம் திகதி ஹர்த்தால் நடத்தப்படவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. அரச, மற்றும், தனியார் மற்றும் மலையக துறைகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டு நாடு முழுவதும் ஹர்த்தாலில் ஈடுபடுவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர். அன்றைய…

தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள மகா நாயக்கர்கள்

எதிர்காலத்தில் எந்தவொரு அரசியல்வாதிகளும் தம்மைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என மல்வத்து பீடம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான தகவலை மல்வத்து பீடத்தின் மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். மாநாயக்க தேரரின் சம்மதத்துடன் நாட்டை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற இடைக்கால அரசாங்கம் அமைப்பது…

ஏப்ரல் மாதத்தில் இலங்கையை மறந்த சுற்றுலா பயணிகள்

ஏப்ரல் மாதத்திற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இலங்கைக்கு 43.3 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சுற்றுலா அமைச்சின் கூற்றுப்படி, ஏப்ரல் 2022 இல் இலங்கைக்கு 60,359 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். மார்ச் 2022 இல் பதிவாகிய 106,500 சுற்றுலாப் பயணிகளில் இருந்து இது 46,141 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. ஜனவரி…

புதன் கிழமையின் பின் பதவி விலக தயாராகும் மகிந்த

எதிர்வரும் புதன் கிழமை(04) நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தி விட்டு, பிரதமர் மகிந்த ராஜபக்ச, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரியவருகிறது. அரசாங்கத்திற்குள் நடந்த பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர், பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அணியில்…

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை இந்தியா மீட்கும்!

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியா எப்போதும் தமிழ் மக்களுக்காக துணை நிற்கும் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதேநேரம் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை இந்தியா மீட்க்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். பாரதிய ஜனதா கட்சியின்…

சிறுவர்கள் மத்தியில் சளி, இருமல், நிமோனியா! எச்சரிக்கை விடுக்கும் மருத்துவத்துறை!

காய்ச்சல், சளி, இருமல் மற்றும் நிமோனியா நோயால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கையின் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. சிறுவர்களுக்கான சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் .தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். மூச்சுத்திணறலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிறுவர்ளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம்…

குறைந்த விலையில் எரிபொருளை இறக்குமதி செய்ய தயாராகும் இலங்கை

குறைந்த விலையில், ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய முடியுமா என்பது குறித்து இலங்கை ஆராய்ந்து வருவதாக தெரியவருகிறது. எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு செலவாகும் அதிகமான பண செலவை குறைக்கும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்ய இலங்கை திட்டமிட்டு வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக…

கடந்த மூன்று வருடத்தில் சவாலுக்கு உள்ளானது தொழிலாளரே! – மே…

நாட்டில் கடந்த மூன்று வருடங்கள் பாரிய சவாலுக்கு உள்ளாகியது தொழிலாளர் வர்க்கமே என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்றைய மே தினத்தை முன்னிட்டு அரச தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் குறிப்பிட்டதாவது, சகல சவால்களையும் எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் தேசிய பொருளாதாரத்தை…

23 வது நாளாகவும் தொடரும் போராட்டம்: அசையாத அரச தரப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு காரணமான அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 23 ஆவது நாளாகவும் முன்னேடுக்கப்படுகின்றது , சர்வதேச தொழிலாளர் தினமான இன்று தொழிலாளர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி கறுப்புக் கொடியேற்றி…

இடைக்கால அரசாங்கம் அர்த்தமில்லாத நகைச்சுவை

இடைக்கால அரசாங்கமோ அல்லது வேறு எந்த அரசாங்கம் பற்றியோ சிந்திக்கும் முன்னர் மக்களின் நிபந்தனைகளான ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையை தற்கவைத்துக்கொண்டு அமைக்கப்படும்…

வரலாற்றில் முதல் முறையாக அரச தலைவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு…

நிறைவேற்று அதிகாரம் கொண்ட  அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து திட்டங்களையும் உருவாக்கியுள்ளதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் ஒருவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு…

அரச தலைவரின் தீர்மானங்களுக்கு கட்டுப்பட தயார்: பிரதமர் தகவல்

பிரதமர் பதவி தொடர்பில் அரச தலைவர் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆங்கில ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். எனக்கு பதில் வேறொருவரை பிரதமராக நியமிப்பதற்கு அரச தலைவர் தீர்மானித்தால் நான் அதனை ஏற்க தயார் என்பதோடு அரச தலைவர் எடுக்கும் தீர்மானங்களை மதிக்கவேண்டும்…

இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க கோத்தபய ராஜபக்சே முடிவு: கட்சித்தலைவர்களுடன்…

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஆனால் ராஜினாமா செய்ய வலியுறுத்தும், போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து வரும் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் ஆட்சியில் தொடர்ந்து நீடித்து வருகின்றனர். அதேநேரம் பொருளாதார…

அதிபர் பதவி விலக வேண்டும்- இலங்கையில் 1000 தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்

இலங்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கத் தவறியதாக அரசு மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மக்கள், அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில் தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.…

இலங்கையில் முதலீடு செய்தால் 10 ஆண்டுகளுக்கு கோல்டன் வீசா

அந்நிய செலவாணி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷே ஆகியோரை…

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுசெய்வதைத் தவிர்க்கும்படி விடுதலைப்புலிகள் கோரிக்கை!!

சிங்கள அரசியல் தலைமைகள் வகுத்துவருகின்ற திட்டத்தில் புலம்பெயர் மக்கள் விழுந்துவிடக்கூடாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. சிங்கள அரசியல் தலைமைகள் விரித்துள்ள வலைக்குள் புலம்பெயர் மக்களோ, வர்த்தகப் பெருந்தகைகளோ, முதலீட்டாளர்களோ சிக்கி ஏமாந்துவிட வேண்டாம் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக…

இலங்கையின் நிலை குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கடும் ஆதங்கம்

இலங்கையின் வளங்களை சூறையாடியவர்களை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் Steven Horsford தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான Steven Horsford அண்மையில் இலங்கையர்கள் சிலரை சந்தித்த பேசிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையின் வளங்கள் சூறையாடப்பட்டமைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பிலான…

நாடுதழுவிய வேலை நிறுத்தத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு

அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி நாளையதினம் இடம்பெறவுள்ள நாடுதழுவிய ரீதியிலான ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிப்பதாக அக்கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே…

எந்த தீர்மானங்களையும் எதிர்கொள்ள நான் தயார் – பிரதமர் மகிந்த

நாட்டில் அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது எனவும், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு எடுக்கப்படும் தீர்மானங்களை எதிர்கொள்ள நான் தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஓமல்பே சோபித தேரர் தலைமையிலான மஹா சங்கத்தினரை இன்று பிற்பகல் அலரி மாளிகையில் சந்தித்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இடைக்கால…

தலைவர்கள் மக்களின் அவல நிலையை உணரவில்லை – சரத் பொன்சேகா…

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்கள் சார்பாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அர்த்தமற்ற விவாதங்களை நடத்துவதற்கு இப்போது நேரமில்லை என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சரத் பொன்சேகா, நாட்டின் தலைவர்கள் மக்களின் அவல நிலையை உணரவில்லை. மாறாக,…