வான் சைபுல் கைது, இது பலி வாங்கும் படலம் என்கிறார்…

கட்சியின் தகவல் தலைவர் வான் சைபுல் வான் ஜான் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்து, கட்சியின் தலைமைக்கு எதிராக பலி வாங்க "தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கு" நடத்தப்படுவதாக பெர்சாத்து தலைவர் முகைதின் யாசின் தெரிவித்தார். பெர்சாத்துக்கு எதிரான வழக்கு குறித்து அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியால் சுட்டிக்காட்டப்பட்டது என்று…

பாஸ் இளைஞர்களின் இராணுவ அணிவகுப்புக்கு கண்டணம் – உள்துறை அமைச்சர்

தெரங்கானு பாஸ் இளைஞரின் இராணுவ அணிவகுப்பை போன்ற நிகழ்வை உள்துறை அமைச்சர் கடுமையாக சாடியுள்ளார். இது பொருத்தமற்றது மட்டுமல்ல, பொதுமக்களிடையே அமைதியின்மையை உருவாக்கக்கூடும் என்று கூறினார். கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு இனம், மதம் மற்றும் ராஜ பதவி ஆகிய மூன்றை  சுற்றியுள்ள பிரச்சினைகள் இன்னும் குறையவில்லை என்று…

சட்ட விரோதமாக மரம் வெட்டுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க…

மரங்களை மறுநடவு செய்வதில் கவனம் செலுத்தி, தனது தொகுதி உட்பட மரம் வெட்டும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் தீவிர நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று ஜெரண்டுட் நாடாளுமன்ற உறுப்பினர் கைரில் நிஜாம் கிருடின்(Jerantut MP Khairil Nizam Khirudin) அழைப்பு விடுத்துள்ளார். பாஸ் தகவல் தலைவரான கைருல் நிஜாம்…

குடியுரிமை தொடர்பான அரசியலமைப்பு மாற்றத்திற்கு அன்வார் அரசு ஒப்புதல்

மலேசிய தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு தானாக மலேசிய குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது மலேசிய குடியுரிமை கொண்ட ஒரு பெண் அயல் நாட்டு ஆடவரை திருமணம் செய்து கொண்டதன் வழி அயல் நாட்டில் பிறக்கும்  குழந்தைக்கு…

ஆசிரியர்களின் சுமையை அதிகரிக்கும் போட்டிகள், கொண்டாட்டங்கள், விழாக்கள் இனி வேண்டாம்

2023/2024 பள்ளி அமர்வில் இருந்து மாணவர்களின் கற்றலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத மற்றும் ஆசிரியர்களின் பணிச்சுமையை மட்டுமே அதிகப்படுத்தும் போட்டி, கொண்டாட்டம் அல்லது விழா போன்ற எந்தவொரு செயலையும் கல்வி அமைச்சகம் அனைத்து மட்டங்களிலும் நிறுத்தம் செய்துள்ளது. கல்வி மந்திரி ஃபத்லினாசிடேக் மகிழ்ச்சியான போட்டி, சிறந்த கழிப்பறை, சிறந்த…

பெர்சத்து கணக்குகள் விசாரணையில் முகிடின் வாக்குமூலத்தை MACC பதிவு செய்தது

முடக்கப்பட்டுள்ள பெர்சத்துவின் வங்கிக் கணக்குகள்மீதான விசாரணை தொடர்பாக முன்னாள் பிரதமர் முகிடின்யாசினின்(Muhyiddin Yassin) வாக்குமூலத்தை MACC பதிவு செய்துள்ளது. விசாரணையின் மூலம், விசாரணை அறிக்கைமேல் நடவடிக்கைக்காக அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸிடம் (Attorney-General’s Chambers) ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு விசாரணையை முடிக்கும் இறுதி கட்டத்தில் ஊழல் தடுப்பு அமைப்பு இருப்பதாகத் தகவல்கள்…

இராமசாமியின் கருத்து நியாயமானது! அரசியல் ஒத்தூதிகள் வெறும் ஜால்ரா!

இராகவன் கருப்பையா - பொதுச் சேவைத்துறை இந்நாட்டின் இன அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் பிரதமர் அன்வார் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி விடுத்த கோரிக்கையில் என்ன தவறு இருக்கிறது? உள்ளங்கை நெல்லிக்கனிப்போல உள்ள உண்மையைதானே சொன்னார்! இதில் இனத்துவேசமோ, தீய நோக்கமோ, ஒற்றுமையைக்…

கடன் சுமையில் 30%  மக்கள் அல்லல்படுகின்றனர் – பேங்க் நெகாரா…

பேங்க் நெகாரா மலேசியா (BNM) மலேசியர்களில் 30% பேர் தங்களுடைய கடன்கள் சுமையாக இருப்பதாக உணர்கிறார்கள், இது மலேசியாவில் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களிடையே நீண்ட காலப் பிரச்சனையாகத் தெரிகிறது. BNM நிதி சேர்க்கைத் துறை இயக்குநர் நோர் ரஃபிட்ஸ் நஸ்ரி(Nor Rafidz Nazri) கூறுகையில், இந்தக் கடன்களைப் பெற்றவர்கள்…

உண்மையை சொன்ன ராமசாமி பதவி விலக வேண்டுமா?

பினாங்கு டிஏபி துணைத் தலைவரான ராமசாமி, பொதுச் சேவை இந்த நாட்டின் இன அமைப்பைப் பிரதிபலிக்கிறது என்பதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும் என்ற வகையில் கருத்தை வெளியிட்டு இருந்தார். முக்கியமாக மலாய்காரர்கள் அரசாங்க துறையில் ஆதிக்கம் செலுத்துவது ஒரு பெரிய பிரச்சினை அல்ல, ஆனால் அவர் குறிப்பிட்ட…

வேலை மோசடிகளில் இருந்து மலேசியர்களைப் பாதுகாக்க சட்டங்கள் கடுமையாக்கப்படும் –…

வெளிநாடுகளில் போலி வேலை வாய்ப்புகளை வழங்கும் சிண்டிகேட்டுகளிடமிருந்து  மலேசியர்களைப் பாதுகாக்க சட்டங்களை கடுமையாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். மியான்மர் உட்பட வெளிநாடுகளில் சிண்டிகேட்டுகளால்  பலியாகியவர்கள் பலர் இருப்பதாக அவர் கூறினார். "ஒரு கடினமான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். மலேசியர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவும்,…

தனியார் வாகனங்களில் இனி சாலை வரி (Road Tax)  ஸ்டிக்கர்களைக்…

இன்று முதல், ரோட் டெக்ஸ் என்று அழைக்கப்படும் சாலை வரி ஸ்டிக்கர்களை தனியாருக்குச் சொந்தமான வாகனங்களில் இனி மலேசியர்கள் ஒட்டவும் வேண்டியதிலை காட்டவும் வேண்டியதில்லை. இது இன்று முதல் நடைமுறைக்கு வரும் போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி லோக் செய்தியாளர் சந்திப்பில், “சாலை போக்குவரத்து சட்டத்தின் 20வது பிரிவு,…

அனைவருக்கும் பயனளிக்கும் வலுவான பொருளாதார வளர்ச்சியை அரசு உறுதி செய்யும்…

மலேசியாவின் 'நல்ல' பொருளாதார வளர்ச்சி  மக்கள் உணரக்கூடிய  தாக்கங்களாக மாற்ற முடியும் என்பதை அரசாங்கம் நம்புகிறது, ஏனெனில் நாடு தொடர்ந்து வளர்ச்சியைப் பதிவு செய்யத் தயாராக உள்ளது என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி கூறினார். மலேசியா இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (gross domestic product)…

15வது பொதுத்தேர்தலில் பாக்கத்தான் ஹராப்பான் 31% மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பெற்றுள்ளது…

பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம், தனது கூட்டணிக்கு மலாய் ஆதரவு இல்லை என்றும், சமீபத்திய பொதுத் தேர்தலில் மலாய் வாக்குகளில் 19% மட்டுமே பெற்றுள்ளது என்றும் கூறப்பட்டதை நிராகரித்துள்ளார். தேர்தல் முடிவுகளின் முதற்கட்ட பகுப்பாய்வு பக்காத்தான் ஹராப்பான் ஆனது ஒட்டுமொத்தமாக 31% மலாய் வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது…

ஊழல் இல்லாத கட்சிகள் விசாரணைக்குப் பயப்பட வேண்டாம் – அன்வார்

ஊழலில் அற்ற அரசியல் கட்சிகள்   MACC உள்ளிட்ட அதிகாரிகளின் நடவடிக்கைக்கு அஞ்சக் கூடாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். இன்று மாலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பக்காத்தான் ஹராப்பான் தலைவர், அரசியல் கட்சிகளுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளை முடக்குவது உள்ளிட்ட இது போன்ற நடவடிக்கைகள் புதியவை அல்ல…

இன்றும் நளையும் 3 இலட்சம் பக்தகோடிகள் பத்துமலையில் திரளுவர்

தைப்பூசக் கொண்டாட்டத்துடன் இன்று மாலை முதல் நாளை வரை 300,000 க்கும் மேற்பட்ட பக்தர்களும் பார்வையாளர்களும் பத்துமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை தேர் வரும்போது அதிகமான பார்வையாளர்களை கோயில் நிர்வாகம் எதிர்பார்க்கிறது என்று சிலாங்கூர் காவல்துறையின் உயர்அதிகாரி எஸ் சசிகலா தேவி கூறினார். “நேற்று முதல்,…

`முதியோர் ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்` – தைப்பூசத் திருநாளில் பி.எஸ்.எம்.…

2023 தைப்பூசக் கொண்டாட்டத்தின் போது, முதியோருக்கான ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் எனும் பிரச்சார இயக்கத்தை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தொடங்கவுள்ளது. கோவிட்-19 கோரணி நச்சுப் பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகள் நடைமுறையில் இருந்த நடமாட்டக் கட்டுப்பாடு முடிவுக்கு வந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் பிப்ரவரி…

போலீசில் புகார் செய்ய உடை ஒரு தடையல்ல – முன்னாள்…

முன்னாள் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், புகார் தரும் நபரின் உடையை காரணத்தைகே காட்டி யார் புகார் செய்ய வேண்டும் என்பதை காவல்துறை தடுக்க இயலாது என்று கூறுகிறார். காவல்துறையின் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மூசா ஹசன் கூறுகையில், பொதுமக்களுக்கு உதவுவது அவர்களின் கடமை என்பதால், புகார் அளிக்க…

அகமது மஸ்லான்: உயர் பதவிகளின் போட்டி இல்லாத தீர்மானம்குறித்து அம்னோ…

வரவிருக்கும் கட்சித் தேர்தலில் இரண்டு மிக உயர்ந்த பதவிகளுக்கு எந்தவொரு போட்டியையும் நடத்த வேண்டாம் என்று அம்னோ பொதுச்சபையின்போது ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானம்குறித்து கட்சி சங்கங்களின் பதிவாளரை (Registrar of Societies) சந்தித்துள்ளதாக அம்னோ பொதுச் செயலாளர் அகமது மஸ்லான் தெரிவித்தார். ஷா ஆலமில் செய்தியாளர்களிடம் பேசிய அகமது,…

நூருல் இஸ்ஸாவின் பதவி நியமனம் உறவுமுறையை சார்ந்தது – விமர்சகர்கள்

பிரதம மந்திரி அன்வார் இப்ராஹிம் தனது மகள் நூருல் இசாவை பொருளாதாரம் மற்றும் நிதித்துறையில் மூத்த ஆலோசகராக நியமித்ததற்காக பல்வேறு தரப்பிலிருந்து கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். இந்த நியமனம், சாதகமாக இருந்தாலும், ஆளும் கூட்டணியை தாக்க எதிர்க்கட்சிகளுக்கு தீனி போடுவதால், ஒற்றுமை அரசாங்கத்தை கேள்விகுறியாக  வைக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.…

அம்னோ ‘வழிதவறிப் போனது’ GE15 உரைக்காக கேஜே பதவி நீக்கம்…

அம்னோவை "சுத்தம்" செய்ய வேண்டும் என்று கைரி ஜமாலுடினின் கூறியதே பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் என்று அம்னோ ஆதாரம் உறுதிப்படுத்தியுள்ளது. அம்னோ தலைவர் பதவியைப் போட்டிக்கு அனுமதிக்காததை கைரி ஆட்சேபித்ததால் பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்றும், மாறாக 15வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் ஆற்றிய உரைக்காகத்தான்…

உள்ளாட்சி தேர்தல் தற்போதைக்கு இல்லை, தரமான சேவையே முன்னுரிமை –…

கருத்துக்களின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் நடத்துவது தற்போதைக்கு மக்களுக்கு முன்னுரிமையாக இல்லையென உள்ளூராட்சி  மேம்பாட்டு அமைச்சர் ங்கா கோர் மிங்(Nga Kor Ming) தெரிவித்துள்ளார். எனவே, கூட்டாட்சி மற்றும் மாநில தேர்தல்களுக்குப் பிறகு "மூன்றாவது வாக்கெடுப்பு" ஜனநாயக செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்பதை அறிந்திருந்தும், தனது…

அன்வார் இரண்டு நாள் உத்தியோகபூர்வ வருகைகாகப் புரூணை வந்தடைந்தார்

பிரதமர் அன்வார் இப்ராஹிம் இரண்டு நாள் உத்தியோகபூர்வ வருகைகாகப் இன்று புரூணையின் ப்ண்டார்  செரி பகவான் வந்தடைந்தார். அன்வார் பிரதமராக நியமிக்கப்பட்ட பிறகு அவரது இரண்டாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணமான இதில் அவரது மனைவி டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் உடன்  சென்றார். பிரதமர் மற்றும் அவரது…

பெர்சத்து: வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்கச் சிங்கப்பூரை நாடுவது நாட்டுக்கு கேவலம்

மலேசியாவில் மலிவு விலையில் வீடுகள் கட்டுவதில் தங்கள் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ள சிங்கப்பூர் வீட்டு ஒப்பந்ததாரர்களைக் கொண்டுவரும் திட்டம் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் மீறும் செயல் என்று பெர்சத்து  உறுப்பினர் ஒருவர் கூறினார். பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினர் ஃபைஸ் நமான்(Faiz Na'aman) மலேசியாவில் உள்ளூர் வீட்டுவசதி திட்டமிடல்…